தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….

ரிஷி

Spread the love

ஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த
இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த
ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி
எனக்கென்ன கவலை யென்றிருந்தான்
எத்தனாதி யெத்தனொருவன்_
என்னென்னமோ தகிடுதித்தங்களைத் தொடர்ந்து செய்தபடி.
மனுஷ ரூபத்தில் வந்த தெய்வம் கிளிக்கு
ஒரு லாப்-டாப்பை மட்டும் கொடுக்க_
கூகிள்-சர்ச்சில் தேடி தன் குடலுக்கு பாதிப்பில்லாமல்
கிழித்து ரகசியத்தை வெளியே எடுத்த கிளி _
அதை குகைக்கு அருகாமையில் ஓடிகொண்டிருந்த
நதியின் பளிங்குநீரில் காட்ட_
ஆறு அதன் பிரதிபலிப்பைத் தன்னோடு எடுத்துச்சென்று
மனிதவடிவில் இருந்த தெய்வத்திடம் சேர்ப்பித்தது.
ஆயிரங்கைகளால் அதைப் பிரதியெடுத்து
சுற்றுக்கு விட்ட
மனிதத் திருவருளால்
சிறகு முளைக்கிறது பறவைக்கு!

Series Navigationஒன்றுமில்லைசொல்லத்தான் நினைக்கிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

Leave a Comment

Archives