சின்னக்கருப்பன்
முதலில் ஸ்டெர்லைட் பற்றி மட்டும் எழுதலாம் என்று இருந்தேன். ஆனால், நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கக்கூடாது வைகோவின் கட்சி தொண்டர் ஒருவர் தீக்குளித்த பின்னால் அது பற்றி எழுதுவதே முக்கியம் என்று கருதி அதனை முதலில் எழுதுகிறேன்.
பிபிஸி செய்தி இவ்வாறு கூறுகிறது.
//இதற்குப் பிறகு நியூட்ரினோ எதிர்ப்புக்கூட்டம் ஒன்று மதுரை பழங்காநத்ததில் நடைபெற்றது. இதில் வைகோ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
அதற்குப் பிறகு, மற்ற தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரணி இணை அமைப்பாளர் ரவி என்பவர், பொதுக்கூட்ட மேடையிலிருந்து 25 அடி தூரத்தில் நின்றபடி, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். //
நியூட்ரினோ பற்றி மிகவும் அறிந்த நோபல் பரிசு பெறப்போகும் விஞ்ஞானி வைகோ அவர்கள் சிறந்த நாவன்மை கொண்டவர், சீமான் போலவே உணர்ச்சி வசப்படும்படி பேசக்கூடியவர் என்பதை இதை படித்துத்தான் அறிந்தேன்.
தமிழர்கள் மட்டுமல்ல, யாருக்குமே புதிய வார்த்தைகளை கண்டால் பயமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு நியூட்ரான் என்பதற்கும் நியூட்ரினோ என்பதற்கும் வித்தியாசம் தெரிந்திருந்தால், ஏன் வைகோவின் பேச்சுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படப்போகிறார்கள்?
தமிழ்நாட்டில் இருந்த லட்சத்துக்கும் மேலான குளங்கள் ஏரிகள் இன்று வீடுகளாகிவிட்டன. ஆறுகள் தடுக்கப்பட்டு அடுக்குமாடி வீடுகளாக்கி விட்டார்கள். மழைபெய்தால் சேர குளம் ஏரிகள் இல்லாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி சென்னை போன்ற நகரங்களில் வெள்ளமாக பாய்ந்து அழிக்கிறது. சிலவருடங்களில் தீவிர தண்ணீர் பஞ்சம், திடீரென்று வெள்ளம் என்று இந்த பிரச்னைகள் நம் கண் முன்னே உருவாகியிருக்கின்றன. இந்த அவலத்தை உருவாக்கிய அதிமுக திமுக அரசியல்வாதிகளும் அதன் உப கிளைகளான வைகோ, திருமா, சீமான் போன்ற குஞ்சுகளும் உணர்ச்சிவசமாக பேசுவதையும், இல்லாத பொய்களை சொல்லுவதையும், தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றுவதையுமே ஒரே பிழைப்பாக வைத்திருக்கிறார்கள்.
நியுட்ரினோ பற்றி பேசிகொண்டிருக்கும்போதே வைகோவின் உடலுக்குள் பல கோடி கோடி நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து கிளம்பி அவருக்குள் புகுந்து உலகத்துக்குள் புகுந்து அந்த பக்கம் புறப்பட்டு எங்கோ போயிருக்கும். வைகோவுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் வைகோ வாயிலிருந்து புறப்பட்ட உளறல், ஒரு மாங்கா மடையரை தாக்கி அவர் செத்தார் என்று தெரிய வருகிறது.
நியூட்ரினோ ஆய்வு மையம் என்றதுமே அது ஒரு அணு மின் உலை, அதிலிருந்து அணு குண்டு மாதிரி அடிக்கடி வெடித்து அங்கே இருக்கும் தண்ணீர் எல்லாம் ஆவியாகிவிடும், மனிதர்கள் கொத்து கொத்தாக செத்து விழுவார்கள்.. தமிழா பார், உன்னை அழிக்க மோடி வர்ரார் என்று உசுப்பேத்தி விட்டு இவர் நடைப்பயணம் போவார். வழியெல்லாம் தீக்குளித்து கொத்து கொத்தாக செத்து விழுவார்கள்… இவர் அடுத்து ஸ்டாலின் கூட சேர்ந்து ரெண்டு எம் எல் ஏ சீட்டு கேட்க போய்விடுவார். இறந்தவர்களின் குடும்பங்களை “இயற்கைத்தாய்” காப்பாற்றும்..
இதே மாதிரி முழு தமிழகமே அறிவியலுக்கும் தொழில்மயமாதலுக்கும் எதிராக திரும்பிகொண்டிருக்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது. இதில் பல்வேறு இழைகள் இருக்கின்றன.
ஒன்று தமிழர்கள் ஒன்றுக்கும் லாயக்கில்லை. தமிழர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்னால் காட்டிமிராண்டிகளாக படிப்பறிவற்றவர்களாக இருந்தார்கள் என்ற பெரியாரிய பிரச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. இது உண்மையில் காலனியாதிக்கத்தின் பிரச்சாரம் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள்தான் வந்து உங்களுக்கு நாகரிகத்தை கற்றுகொடுத்தோம் என்று எல்லா காலனியாதிக்கத்தினரும் அடிமைப்பட்டவர்களிடம் சொல்லுவது. அதனை எதிர்த்து நிற்பது ஒரு காலத்தில் நின்றது. அப்படி நின்றிருக்கவில்லை என்றால், மௌமௌ மக்களுக்கு நடந்தது போல கூண்டோடு படுகொலை செய்து மெல்லக்குறுநகை செய்து பிரிட்டிஷ் காலனியாதிக்கம் நகர்ந்திருக்கும். இந்திய மக்கள் படிப்பறிவற்றவர்களாக இருந்திருந்தால், ஆஸ்திரேலிய பழங்குடிகளையும் ஆப்பிரிக்க பழங்குடிகளையும், அமெரிக்க பழங்குடிகளையும் அழித்தொழித்தது போல இந்தியர்களையும் அழித்து ஒழித்து இங்கே வெள்ளையர்களே பெரும்பான்மையாகவும், ஆஸ்திரேலிய பழங்குடிகளும், அமெரிக்க பழங்குடிகளும் திறந்தவெளி சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது போல இந்தியர்களும் அடைக்கப்பட்டிருப்பார்கள்.
இந்தியர்களும் படிப்பறிவுள்ளவர்களாக இருந்ததால்தான் அவர்கள் வெள்ளையர்கள் படித்த அதே பாரிஸ்டர் தேர்வுகளை படித்து அவர்களுக்கே சவாலாக இருக்க முடிந்தது.
ஆனால், பெரியாரிஸம் காலனியாதிக்கத்தின் அனைத்து கருதுகோள்களையும் (அதாவது வெள்ளையர்கள் வந்துதான் தமிழர்களுக்கு நாகரிகம் கற்றுகொடுத்தார்கள், படிப்பறிவு கொடுத்தார்கள், அது இல்லையென்றால், நாம் காட்டுமிராண்டிகளாக காட்டில் திரிந்து கொண்டிருந்திருப்போம். நாம் தமிழை விட்டுவிட்டு ஆங்கிலம் பேச வேண்டும். நவீனத்துவம் என்பதே ஆங்கிலேயர்களை காப்பியடிப்பது மட்டுமே இன்ன பிற) அப்படியே சுவீகரித்துகொண்டதன் விளைவு, இன்று பல்வேறு தொழில் செய்யும் அனைத்து தமிழர்களும் அரைகுறை ஆங்கிலத்தில் தமிழ் இலக்கணத்தை போட்டுபேசுவதிலிருந்து, இன்னும் பல்வேறு பரிமாணங்களில் அரைகுறை அறிவுஜீவிகள் பேசுவதுவரை பரவிக்கிடக்கிறது.
என் ஆசிரியர் “பரிணாமவியல் என்பது பொய். ஆனால் இது தேர்வில் கேட்பார்கள். ஆகவே படித்துகொள்ளுங்கள்:” என்று தன்னுடைய கிறிஸ்துவ மதச்சார்பை வைத்து பள்ளிக்கூடத்தில் பேசியபோதும், ஆதாம் ஏவாள் என்று 6000 வருடங்களுக்கு முன்னால், இரண்டு பேர் இருந்தார்கள் என்று என்னுடைய இஸ்லாமிய பேராசிரியர் (இயற்பியல்) பேசிய போதும், இது தனிப்பட்ட அவர்கள் கருத்து என்று நினைத்து உதாசீனம் செய்துவிட்டு போய்விட்டேன். ஆனால், இன்று இணையம் முழுவதும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்களையும், தொழில்மயத்துக்கு எதிரான கருத்துக்களையும் பரப்புபவர்கள் கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்கள், திமுகவினர், பாஜகவினர் என்று கட்சி சார்பற்று செய்கிறார்கள். ஒரு பக்கம் சனீஸ்வரன் கோவிலுக்கு மேலே செயற்கை துணை கோள் போகாது என்று உளறும் பாஜக பக்தகோடிகள், மறுபக்கம் வெள்ளைக்காரன் வந்ததால்தான் தமிழர்கள் நாகரிகம் பெற்றோம் என்று பேசும் திமுக பக்த கோடிகள், நடுவே ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டி விற்கும் காரியத்தில் கண்ணான அதிமுக கவுன்ஸிலர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த அதே திமுகவினர் இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஊர்வலம் போகிறார்கள். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த சிதம்பரத்தின் காங்கிரஸ் கட்சி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறது. ஸ்டெர்லை நிறுவனத்தின் குழும தலைமையான வேதாந்தா நிறுவனத்துக்கு சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வழக்குறைஞர். இவர்கள் பற்றிய ஒரு செய்தியும் இல்லாமல் மோடி ஒழிக என்றே தமிழக ஊடகங்கள் தினந்தோறும் முழங்குகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 60 வருடங்களில் மாறி மாறி ஆட்சி செய்த திமுகவும் அதிமுகவும் அவை உருவாக்கிய போற்றி பாதுகாத்த ஊழல்மிகு அதிகார வர்க்கமுமே சட்ட திட்டங்களை வளைத்து ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் சட்டங்களை மதிக்காமலும் தேவையான நெறிமுறைகளை பின்பற்றாமலும் தொழில் நடத்த உதவுகின்றன. இவ்வாறு மாநில அரசான தமிழக அரசு கொடுத்த அனுமதிக்கு “மோடி ஒழிக” கோஷம் போட்டு ஊர்வலமும் நடத்துகின்றன.
தொழில்நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வேண்டும். ஏறத்தாழ 15000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்கப்படும்போதும் விஸ்தரிக்கப்படும்போதும், ஏராளமான தொழிலாளர்களும் மக்களும் பயன்பெறுவார்கள். ஆனால், அதில் ஒரு சில தேவையான சுற்றுச்சூழல் சம்பந்தமான வேலைகளை செய்யாமல் இன்னும் இரண்டு கோடி லாபம் பார்க்கலாம் என்று தொழில்முனைவர்கள் முனையும்போதும், அதற்காக சில லட்சங்களை அதிகாரிகள் லஞ்சமாக பெற்றுகொள்ளும்போதுதான் விளைவு மக்களை பாதிக்கிறது. தேவையானது ஊழலற்ற அதிகார வர்க்கமும், ஊழலற்ற அதிகாரிகளை முன்னிருத்தும் மாநில அரசாங்கமுமே தவிர, தொழிற்சாலைகளை மூடுவதல்ல.
உதாரணத்துக்கு சில சொல்லவேண்டுமென்றால், ஆம்பூர் போன்ற இடங்களில் நடக்கும் தோல் பதனிடுதல் தொழில் மூலமாக தண்ணீர் விஷமாகியிருக்கிறது. சில குளங்களே சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. அமெரிக்கா ஐரோப்பா போன்ற இடங்களில் தோல்பதனிடுதலே நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த தோல்களை இந்தியா போன்ற “வளரும்” நாடுகளுக்கு அனுப்பி தோல்பதனிட்டு பெற்றுகொண்டு, பிராண்டு பெயரை அடித்து, பல மடங்கு விலை கூட்டி நமக்கே விற்கிறார்கள். (இது நவீன காலனியம்). இதுவும் சரியான ஊழலற்ற அதிகாரிகள், ஊழலற்ற அரசாங்கத்தின் மூலமாக கடுமையாக சட்டதிட்டங்களை கொண்டு வந்து நடைமுறை படுத்தி சீர் செய்யவேண்டிய விஷயமே. இந்த தொழில் எப்படி செய்தாலும் சுற்றுச்சூழல் அழிவுதான் என்றால் அதனை தடைசெய்யவும் துணிவு வேண்டும்.
ஸ்டெர்லைட் போன்ற செம்பு ஆலைகள் இந்தியாவெங்கும் இருக்கின்றன. எந்த இடத்திலும் கான்ஸர் என்பதோ அல்லது விசவாயு கசிவு என்பதோ கிடையாது. முட்டையை அழுகினால் வரும் நாற்றமே சல்பர் டை ஆக்ஸைடு. அது கெடுதி அல்ல. ஆனால் அந்த நாற்றம் சுற்றுப்புறத்தில் இருக்கக்கூடாது என்பது உண்மைதான். அதில்தான் ஊழலற்ற அதிகாரிகளின் தேவை வருகிறது. ஊழலற்ற மாநில அரசாங்கத்தின் தேவை வருகிறது. இதே போல அதிமுக திமுக அரசியல்வாதிகளில் சாராய ஆலைகள் தமிழகமெங்கும் இருக்கின்றன. அந்த ஆலைகளுக்கு 20 மைல் விஸ்தீரத்தில் அந்த சாராய ஆலைகளிலிருந்து வரும் நாற்றத்தை சகித்துகொண்டுதான் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏனெனில் எந்த அதிமுக அரசியல்வாதிகளோ திமுக அரசியல்வாதிகளோ சீமான் வைகோ போன்ற அரசியல்வியாதிகளோ போராட வரமாட்டார்கள்.
ஆனால், தமிழகத்தில் பலவிதமான அந்நிய இடையூறுகள் இருக்கின்றன என்று கருத நிச்சயம் இடமிருக்கிறது. கல்பாக்கத்தில் நடக்காத அணு உலை எதிர்ப்பு கூடங்குளத்தில் நடக்கிறது. சென்னை செங்கல்பட்டு மாநிலங்களில் இல்லாத தொழிற்சாலைகள் எதிர்ப்பு தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நடக்கிறது. எத்தனையோ மலைகளை திருடி கிரானைட் பண்ணும் அரசியல்வாதிகளின் அட்டூழியத்துக்கு எதிர்ப்பு வராத தமிழ்நாட்டில் தேனிமாவட்டத்தில் இருக்கும் ஒரு மலைக்குள் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க எதிர்ப்பு உருவாக்கப்படுகிறது.
இவை எல்லாமே துனிசியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட “மக்கள் போராட்டம்” மாதிரியை ஒப்பிட்டே அமைந்திருப்பது ஆச்சரியமானதல்ல என்றே கருதுகிறேன். இந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கெஜ்ரிவால் போராட்டமும், அதன் பின்னால், தமிழ்நாட்டிலும் மெரீனா கடற்கரையில் உருவாக்கப்பட்ட போராட்டமும், பாரதிய ஜனதா கட்சியையே குறி வைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் “பொதுமக்கள் போராட்டம்” இந்திய எதிர்ப்பை அடிநாதமாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும். இதற்கு முஸ்லீம் இயக்கங்களும் சர்ச்சுகளும் ஆட்களை கொடுத்து உதவுவதும் நான் கவனித்தே வருகிறேன். இதில் ஆரம்ப குரல் கொடுத்தவர்கள் பொதுநலம் சார்ந்து குரல் கொடுத்தாலும் பின்னால் அதில் தமிழ் தேசிய கும்பல் புகுந்து கடத்துவதையும் பார்த்தே வருகிறேன்.
இணையத்தில் ஒருவர் கேட்டார்.
கூடங்குளம் – 20 வருடமாக
நெடுவாசல் – 15 வருடமாக
கதிராமங்கலம் – 25 வருடமாக
நியூட்ரினோ – 10 வருடமாக
ஸ்டெர்லைட் – 30 வருடமாக
காவிரி – 50 வருடமாக
உள்ள சிக்கல்.
இதில் எந்த வாழ்வாதாரத்தை #மோடி கெடுத்ததாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என தெளிவுபடுத்தினால் நலம்
கூடங்குளம் – 20 வருடமாக
நெடுவாசல் – 15 வருடமாக
கதிராமங்கலம் – 25 வருடமாக
நியூட்ரினோ – 10 வருடமாக
ஸ்டெர்லைட் – 30 வருடமாக
காவிரி – 50 வருடமாக
உள்ள சிக்கல்.
இதில் எந்த வாழ்வாதாரத்தை #மோடி கெடுத்ததாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என தெளிவுபடுத்தினால் நலம்.
— PARAMASAMY PANDIAN (@paramasamy) April 1, 2018
கெஜ்ரிவால் டெல்லியில் சாதித்ததை போல, தமிழ்நாட்டு ஒட்டுமொத்த பரப்பையும் இந்த தொடர்ந்து உருவாக்கப்படும் போராட்டங்கள் தொடுமா? தமிழ் அரசியலை வேறு திசை கொண்டு செல்லுமா? என்பதையும் நாம் அவதானித்துகொண்டே இருக்க வேண்டும்.
இங்கே நியூட்ரினோ பற்றி உளறும் வைகோபால்சாமி நாயுடு போன்ற அதிமேதாவிகள், அவர்களுக்கு உண்மை ஒரு பொருட்டல்ல என்பதையும், உணர்ச்சிகரமான பேச்சின் மூலம், தமிழ்நாட்டை அழிவுத்திசையில் கொண்டு செல்வதே அவர்கள் நோக்கம் என்பதையும் நாம் உணர வேண்டும். இது போன்றே உணர்ச்சிகர பேச்சின் மூலம் மூன்று தலைமுறைகள் மூளை இழந்து, வேர்ச்சொல் ஆராய்ச்சியிலும், தமிழர் பெருமையை வெட்டி பேச்சிலும் கண்டு பிடிப்பதில் காலத்தை இழந்து அறிவியலும், தொழில்நுட்பத்திலும் பின் தங்கியது. இன்று ஐடி தொழில்நுட்பம் ஓரளவுக்கு தமிழர்களை விடுதலை செய்திருக்கிறது. ஆனால், நவீன அண்ணாதுரைகளும், நவீன பெரியார்களும், மீண்டும் ஒரு அடிமை எண்ணத்தையும் அறிவியல் வெறுப்பையும் விதைத்து அழிப்பார்களோ என்று அஞ்சுகிறது என் மனம்.
கான்பூரில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால், கங்கையே கழிவுநீராக ஓடும் நிலை.
Kanpur, India stands as a prime example of how tannery chemicals and wastewater can negatively affect health and ecosystems. In 2013, the city became the largest exporter of leather. About 80% of the wastewater is untreated and dumped straight into Kanpur’s main water source, the River Ganges. Farmland is swamped with blue-tinted water, poisoned with chromium III, lead, and arsenic. Decades of contamination in the air, water, and soil have caused a variety of diseases in the people who live in the area. Health problems include asthma, eyesight problems, and skin problems include: contact dermatitis, urticaria, hand eczema, fungal infection and atopic eczema.[16]
ஸ்டெர்லைட் பற்றிய அந்த கம்பெனியின் வைஸ் பிரசிடண்ட் அ. சுமதி அவர்கள் அளித்த பேட்டி
Chidambaram’s 2007 flip-flop let Anil Agarwal’s Vedanta take over Sesa Goa
- விளக்கு விருது – 21 வருடங்கள்
- நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை – தமிழகம் அழிவுத்திசையில் செல்கிறதா?
- புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | ச.தமிழ்ச்செல்வன் உரை
- புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | சமயவேல் உரை
- புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | ஸ்டாலின் ராஜாங்கம் உரை
- புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | எஸ். ராமகிருஷ்ணன் உரை
- ச தேவதாஸ் உரை – புதுமைப்பித்தன் நினைவு – விளக்கு விருது – 2016
- வ கீதா உரை – புதுமைப்பித்தன் நினைவு – விளக்கு விருது – 2016
- பொம்மைகள்
- யான் x மனம் = தீா்வு
- மூன்று முடியவில்லை
- தொலைந்து போகும் கவிதைகள்
- நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்
- தொடுவானம் 215. திருமண ஏற்பாடு
- துரித உணவு
- புத்தகங்கள்
- இயற்கையை நேசி
- பொன்மான் மாரீசன்
- நெஞ்சுக்குள் எட்டிப் பார் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- மொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்
- எத்தனையாவது
- விண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.