தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

உன்னைப்போல் ஒன்று

ரவி உதயன்

அதைப் போலொரு
பறவையைப் பலியிட்டு
படையலுடன்
பிரார்த்தனனகளுடன்
அண்ணாந்து வானம் நோக்கி
அழைத்த படியிருந்தான்.

குறித்த நேரத்தில்
அவ்விடத்தைத்தினம்
வந்தடைகிற அது
அன்று வரவே இல்லை.

ஆளற்ற வானந்தரத்தில்
நாற்றமடிக்கத்தொடங்கியிருந்த
அவனை போலொரு
அழுகிய ஒன்றை
கொத்தி தின்று கொண்டிருந்தது அது
.
ரவிஉதயன் raviuthayan@gmail.com

Series Navigationஉறுதியின் விதைப்புஅழகியல் தொலைத்த நகரங்கள்

Leave a Comment

Archives