தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

திக்குத் தெரியாத காட்டில்…..

ரிஷி

Spread the love


 

 

 

 

 

(லதா ராமகிருஷ்ணன்)

 

நான்கைந்து வருடங்களுக்கு முன்

அந்த உண்மையைச் சொன்னவரை

நல்ல பாம்பு அடித்துப்போடவேண்டும் என்று

சீறிப் படமெடுத்தாடியவர்

இன்று அதையே

உலகெங்கும் முதன் முதலாய்

தன் உள்ளம் மட்டுமே உணர்ந்ததொரு

பேருண்மையாய்

உச்சஸ்தாயியில் முழங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து

இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்பது இதுவல்லவே

என்று அரற்றிய பாரதியாரின் ஆவியை

வாணி-ராணி ராதிகாவின் மெகாத்தொடர் அடியாள்

பேயோட்டியின் உதவியோடு விரட்டிவிட்டதைப் பார்த்து

வெலவெலத்துப் போன நிஜப்பாம்பு

நந்தினி நாகினியாக மாறி

அங்கே இல்லாத புற்றுக்குள்ளிறங்கிச்

சுருண்டுகொண்டது..

 ——————————

Series Navigationஒரே ஒரு ஊரிலே………நானொரு முட்டாளுங்க…..

Leave a Comment

Archives