தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 ஆகஸ்ட் 2019

வீடு எரிகிறது

மஞ்சுளா நவநீதன்

Spread the love

வீடு எரிகிறது
எழுத்தோ தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கிழிந்த சிவந்த புடவை காற்றில் பறப்பது போல கூரை எரிகிறது
பின்னங்கட்டில் நீ மட்டும் பத்திரமாய்

வேப்பமரத்த்திலிருந்து விழும் கடைசி பூ போல
பூச்சி பறந்து போகிறது.

புருஷனோ போய்விட்டான்.
இருந்தாலும் எழுத்து தொடர்கிறது.
பக்கங்களுக்கு இடையே எழுத்து பரிதவிக்கிறது
நீருக்கு நடுவே அலைகிறது.
புருஷன் வயதாகி இறந்திருக்கலாம்.
உடம்பு சரியில்லாமல் போயிருந்திருக்கலாம்.
பிள்ளைகள் உன்னுடன் இருக்க
முயற்சியை கைவிட்டிருக்கலாம்.
ஆனால் எழுத்து தொடர்கிறது

நீ உருவாக்கும் ஆன்மாவை கடைத்தேற்ற
நீயே உருவாக்கிய ஆற்றில் நீந்தி
கரையேறலாம்.
படகோட்டிக்காக
முழுகியவனுக்காக
இறந்தவனுக்காக
காதலனுக்காக

Series Navigationதொடுவானம் 231.மதுரை மறை மாவடடம்.

2 Comments for “வீடு எரிகிறது”

 • சி. ஜெயபாரதன் says:

  மீண்டும் மஞ்சுளா

  திண்ணையில் முன்பு சிறந்த அரசியல் / விஞ்ஞானக் கட்டுரை எழுதிவந்த திருமதி மஞ்சுளா நவநீதன் மறுபடியும் எழுத வந்திருப்பது, “மீண்டும் மஞ்சுளா” என்று சொல்லத் தோன்றுகிறது.

  சி. ஜெயபாரதன்

 • சி. ஜெயபாரதன் says:

  மீண்டும் மஞ்சுளா !

  வருக, வருக, தமிழ்ச்சுவை
  நல்விருந்து
  தருக, தருக திண்ணைக்கு,
  உமது புகழ்
  பெருகப், பெருக வேண்டும்.

  சி. ஜெயபாரதன்


Leave a Comment

Archives