தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

பகல் கனவு ( ஒரு குறுகுறுங்கதை)

மஞ்சுளா நவநீதன்

Spread the love

என் சித்தி மகள் கதறிகொண்டிருக்கிறாள். நான் கண்டுகொள்ளவே இல்லை. என்னுடைய சித்தி மகளின் கணவன் காரை கார் சத்தியமங்கலத்திலிருந்து சாமராஜபுரம் போகும் ஹேர்பின் வளைவில் வேகமாக ஓட்டிகொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் ஹாரனும் அடிக்காமல், வண்டியின் வேகத்தையும் குறைக்காமல் அவன் வேகமாக வண்டியை திருப்பும்போது என் சித்தி மகள் இன்னும் கூச்சல் போட்டு அலறினாள். அந்த அலறலை, அவன் கண்டுகொள்ளவே இல்லை. அல்லது அவன் கண்டுகொண்டாலும் அது அவனுக்கு இன்னும் வேகத்தை கொடுத்தது போல சிரித்துகொண்டே இன்னும் தூண்டும் விதமாக காரை ஓட்டினான். நானும் கண்டுகொள்ளவே இல்லை. என்னுடைய பகல் கனவை யாரும் தொந்தரவு செய்ய அனுமதிப்பதில்லை. நான் என் புது காதலனுடன் மஹாபலி புரத்தில் உல்லாச படகில் போய்கொண்டிருந்தேன். நானும் நன்றாக பொழுதுபோக்கிக்  கொண்டிருந்தேன்.

Series Navigationமுட்டைக்கோஸ் வதக்கல்

Leave a Comment

Archives