புல்வாமா

This entry is part 6 of 10 in the series 17 மார்ச் 2019

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்த பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்றது அனைவருக்கும் தெரிந்ததுதான். வெளிப்புறம் பார்ப்பதற்கு அது சாதாரணமானதொரு செயலாகத் தெரிந்தாலும் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கெதிராக இப்படிச் செய்வது சாதாரணமான விஷயமில்லை. பாகிஸ்தானிய ராணுவம் கிறுக்கர்களால் ஆனது. இந்தியாவைப் போலல்லாமல் நினைத்த மாத்திரத்தில் பாகிஸ்தானிய ஜெனரல்களால் இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல்களைத் தொடுக்க இயலும் என்பதால் இந்தியாவின் தாக்குதல் ஒரு மிகப்பெரிய ரிஸ்க்தான்.

மோடி எதற்காக இத்தனை பெரிய ரிஸ்க் எடுக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கான விடை இன்றைக்குக் கிடைத்துவிட்டது.

இந்திய விமானப்படை விமானங்கள் தீவிரவாதிகள் தங்கியிருந்த பாலகோட்டை மட்டும் தாக்கவில்லை. அதற்கு அருகிலிருந்த பாகிஸ்தானின் குஸ்தார் அணு ஆயுதக் கிடங்குகளையும் தாக்கியழித்துவிட்டு வந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல்தான் என்றாலும் அப்படி நிச்சயமாக நடந்திருக்கும் என நான் நம்புகிறேன்.

ஏனென்றால் இந்தத் தாக்குதலில் இஸ்ரேலின் பங்கும் அதிகம். பாகிஸ்தானிய ஜெனரல்கள் தங்களின் அணு ஆயுதங்களைக் கொண்டு இஸ்ரேலை அழிப்போம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருந்தவர்கள். அதனைச் செய்வதற்கான ஏவுகணைகளும் அவர்களிடம் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததுதான். எனவே இஸ்ரேல் அவர்களுக்குப் பாடம் புகட்ட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்திய விமானிகளுடன் இஸ்ரேலிய விமானிகளும் பாகிஸ்தானுக்குப் பறந்து சென்றதாக பாகிஸ்தான் ராணுவம் புலம்பிக் கொண்டிருக்கிறது. அதுவும் உண்மையாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது.

பலூச்சிஸ்தானிலிருக்கும் குஸ்தார் அணு ஆயுதக்கிடங்கு மிகப் பெரியது. குண்டுகள் துளைக்காதவண்ணம் மிகக் கடினமான காங்கிரீட்டால் கட்டப்பட்ட அந்தக் கிடங்கில் பாகிஸ்தான் நாற்பத்தைந்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை வைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்தியா இந்தத் தாக்குதலில் உபயோகித்த இஸ்ரேலின் “பங்க்கர் பஸ்டர்” குண்டுகள் கடினமான காங்கிரீட்டைத் துளைத்துச் செல்லும் வலிமை பெற்றவை. பாலகோட்டில் அந்தவகை குண்டுகள்தான் உபயோகிக்கப்பட்டன. குஸ்தார் கிடங்கிலும் அதுவே உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தாக்குதல் நடந்தபிறகு பல நாட்களுக்குப் பாகிஸ்தானிய வான்வெளி மூடப்பட்டிருந்ததற்கும் அதுவே காரணமாக இருந்திருக்க வேண்டும். அணுக்கதிர்வீச்சு வெளியே தெரியாமலிருக்க பாகிஸ்தான் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் நடுங்கியதற்கும் அதுவே காரணம். அணுக்கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க பாகிஸ்தானின் மேற்குப்புறமிருந்த ராணுவத்தை இந்திய எல்லைக்கருகில் குவித்து வைத்திருப்பதற்கும் அதுவே காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இந்தியாவின்மீது பாகிஸ்தான் போர்தொடுக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பது பாகிஸ்தானிய ஜெனரல்களுக்கு நன்றாகவே தெரியும்.

விமானி அபிநந்தன் பிடிபட்ட பிறகு அவரை உடனே விடுதலை செய்ய வற்புறுத்தி இந்திய கேட்டுக் கொண்டதுடன் மொத்தக் கப்பல்படையையும் பாகிஸ்தானின் கராச்சிக்கு அனுப்பி வைத்தார் மோடி. தங்களை இந்தியா துவம்சம் செய்துவிடும் என்று அஞ்சிய பாகிஸ்தானிய ஜெனரல் பாஜ்வா இரவோடிரவாக துபாய்க்குப் போய் இந்தியாவை சமாதானப்படுத்தக் கெஞ்சினார். துபாயின் வேண்டுகோளை அடுத்து கராச்சி தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டது. கமாண்டர் அபிநந்தன் அடுத்த நாளே விடுவிக்கப்பட்டார் என்பது வரலாறு.

பாகிஸ்தானில் நடந்தது என்ன என்பது மெல்ல, மெல்ல வெளிவரும். அதுவரைக்கும் காத்திருப்போம். ஒன்று மட்டும் நிச்சயம். மோடி சாதாரணமானவரல்ல என்பதினை பாகிஸ்தானிகள் நன்கு உணர்ந்துவிட்டார்கள். அவர் இருக்கும்வரை அவர்கள் வாலாட்டுவது கடினம்தான் என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்காகத்தான் ராவுல் வின்ஸி போன்ற அவர்களின் அடிமைகளைவிட்டு மோடியைத் தூற்றத் துவங்கியிருக்கிறார்கள்.

மோடி சொன்னது போல, ‘எ பத்லாஹுவா ஹிந்துஸ்தான்ஹே!” (இது மாறிப்போன இந்தியா). வின்ஸி போன்ற மூடர்களுக்கெல்லாம் இந்த புதுயுக இந்தியாவில் இடமில்லை என்றே நம்புகிறேன்.

Series Navigationகாத்திருப்புபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *