சீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை. நாற்காலியைத் தவிர ஊர்வன, பறப்பன, ஓடுவன, ஓளிவன என அவன் தின்னாத சமாச்சாரமே கிடையாது. மனுசனையும் தின்கிறார்களா என்று தெரியவில்லை என்றாலும் எனக்கு அந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது. அப்படி இல்லாமல் இருக்க ஆண்டவன் அருள்புரிவானாக. பெரும்பாலான சீனர்கள் குரூரமானவர்கள். தாங்கள் தின்னப் போகும் விலங்கு துடித்துச் சாவதை சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிற சீனர்களே அதிகம். நானும் மாமிசப்பட்சிணிதான் என்றாலும் அப்படிச் சாப்பிடுவதை ஒரு குற்ற உணர்வுடனேயே […]
தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன. அதில் முக்கியமானது சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருந்த ப்ளாஸ்ட்டிக்கின் உபயோகத்தை தடைசெய்திருப்பது. நான் பார்த்தவரைக்கும் ஏறக்குறைய 80 சதவீதம் அது வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்வேன். இன்னும் சில இடங்களில் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்ட்டிக் பைகளை கொடுப்பதனைப் பார்த்தேன் என்றாலும் பொதுமக்கள் மத்தியில் ஓரளவு விழிப்புணர்வு வந்திருக்கிறது. அது அப்படியே தொடர்ந்தால் நல்லதுதான். இரண்டாவது முக்கிய விஷயம் ப்ளக்ஸ் போர்டுகளை ஒழித்திருப்பது. ப்ள்க்ஸ் போர்டுகள் போனவுடன் ஊரே திறந்து போட்டது மாதிரியானதொரு உணர்வு […]
பாகிஸ்தானில் விலைவாசி கண்டபடி உயர்ந்து போயிருக்கிறது. ஒரு கிலோ கோதுமை மாவு ஏறக்குறைய நூற்றைம்பது ரூபாய்க்கு (பாகிஸ்தானிய ரூபாய்) விற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல கடந்த ஒருவாரத்தில் மட்டும் சர்க்கரையின் விலை ஏறக்குறைய பத்து மடங்கு உயர்ந்து ஏழைப் பாகிஸ்தானிகளை பாதித்திருக்கிறது. பதுக்கல்காரர்கள் கோதுமையையும், சர்க்கரையையும் பதுக்கி வைத்துக் கொண்டு தாறுமாறாக விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல பிரதம மந்திரி இம்ரான்கான் அதனையெல்லாம் கண்டு கொள்ளாமல் காஷ்மீர் பிலாக்கனம் பாடிக் கொண்டிருக்கிறார். இம்மாதிரியான பொருளாதாரச் சூழ்நிலை […]
அறமற்ற துறையால் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் தமிழ்நாட்டுக் கோவில்களுக்குள் நான் நுழைவதில்லை என்பதில் பலகாலம் பிடிவாதமாக இருந்திருக்கிறேன். நமது பேராலயங்களின் முக்கியத்துவம் அறியாத, அதன் மதிப்பு குறித்து சிறிதும் அறிவில்லாத மூடர்கள் மட்டுமே தமிழக அறமற்ற துறையில் வேலை செய்கிறார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. பாழடைந்து இடியும் நிலையில் உள்ள நமது பேராலயங்களின் கதியைக் காண்கையில் ரத்தக் கொதிப்பு வந்துவிடுகிறது. மண்டபங்களைக் கார் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தும் அறமற்ற துறை அதிகாரிகளை என்ன சொல்வது? அப்படியே […]
தமிழ்நாட்டை விட்டு விலகி பலகாலம் சென்றுவிட்டு மீண்டும் தமிழகத்திற்குள் காலடி எடுத்துவைப்பவர்களுக்கு உடனடியாக முகத்தில் அறைவது அதன் மயான அமைதிதான்! தமிழர்கள் சப்தமானவர்கள். அது பேச்சானாலும் சரி, பாட்டானாலும் சரி, உச்சஸ்தாயிதான் அவர்களின் அடையாளமே. இன்றைக்கு அதெல்லாம் எங்கு போனதென்றே தெரியவில்லை. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில், பல் விளக்காமல் பொடிநடையாக நடந்து, ஓலைக்கூரையிட்ட அய்யாவு டீக்கடைக்குப் போனால், அய்யாவு அப்போதுதான் நன்றாக புளி போட்டுப் பள, பளவென விளக்கிய செம்பு பாய்லரில் பட்டை தீட்டி பொட்டு […]
நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை” படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாறுதான் என்று ஊகிக்க அதிக நேரமாகவில்லை. அனேகமாக மும்பையில் வசிக்கும் அத்தனை வெளி மாநிலத்தவனின் கதைகளுக்கும் அவருடைய கதைக்கு அதிக வித்தியாசம் ஒன்றில்லை. அதே குட்டை. அதில் விழுந்து புழுவாய்த் துடிக்கும் மத்தியமனின் கதை. நானும் ஒருகாலத்தில் அப்படி இருந்தவன்தான் என்பது நினைவுக்கு வருகிறது. அதேசமயம் மும்பையை ஒரு ஏணியாக மட்டுமே உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக அல்லது எனது கடும் முயற்சிகளின் காரணமாக […]
சைக்கோத்தனமான திரைப்படங்கள் எடுப்பதில் ஜப்பான்காரனை மிஞ்ச இன்னொருத்தன் இன்னும் பிறக்கவில்லை. பார்ப்பவர்களைக் குலை நடுங்க வைக்கும் ஜப்பானிய திரைப்படங்களுக்கு இணையான திரைப்படங்கள் வேறு எந்த மொழியிலாவது எடுக்கிறார்களா என்பது சந்தேகம்தான். சாமுராய் திரைப்படங்களிலிருந்து, ரத்தக்களரியான யாக்கூசா படங்களையும் தாண்டி அடுத்த லெவலுக்குப் போய்விட்டார்கள். வாரக் கடைசியில் “Ushijima the Loan Shark” என்கிறதொரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண கந்துவட்டிக் கதை. ஆனால் அபாரமான திரைக்கதை. பத்து வருடம் பழையது என்றாலும் அங்கே இங்கே நகரவிடாமல் கட்டிப் […]
நாமெல்லாம் அறியாததொரு உலகம் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது என்பதினை நம்மில் பலர் உணர்வதில்லை. போதைமருந்தும், விபச்சாரமும், வன்முறையும், கொலைகளும் நிகழும் மேற்கத்திய உலகத்தைப் பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இந்திய மனோபாவம் அடிப்படையில் வம்பு தும்புகளிலிருந்து விலகியிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். நாமறியாத அந்த வன்முறையைக் காட்டும் நூற்றுக்கணக்கான மேற்கத்திய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் அதில் உச்சமாக நான் கருதும் திரைப்படங்களில் ஒன்று Pusher Trilogy என்றழைக்கப்படும் மூன்று நார்வேஜிய திரைப்படங்கள்தான். மூன்று திரைப்படங்களாக […]
உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் இந்தியர்களைப் பார்க்கலாம். பெரும் நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், தொழிற்சாலைகளிலும் இந்தியர்கள் இல்லாத இடமில்லை. தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் என இந்தியர்கள் இல்லாத துறைகளும் இல்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக அல்லது ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியர்களின் கல்வித் தகுதியும், திறமையும் பெருவாக மதிக்கப்படுகிறது. தாங்கள் வாழும் நாடுகளில் சட்டத்தை மதிப்பவர்களாக, குற்றங்கள் அதிகம் புரியாதவர்களாக, வரி கட்டுபவர்களாக, அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துபவர்களாக மட்டுமெ நீங்கள் இந்தியர்களைப் […]
பங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading” என்கிறதொரு சமாச்சாரம் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவன் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக நிறையப்பணம் சம்பாதிப்பது. இது மிகப்பெரிய குற்றம் மட்டுமில்லை, மிகக் கேவலமான நம்பிக்கைத் துரோகமும் கூட. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில், மைக்ரோசாஃட் என்று வைத்துக் கொள்வோம், பெரிய அதிகாரி. உங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கண்டுபிடித்த புதியதொரு மென்பொருளைக் குறித்து தெரியும். அது விற்பனைக்கு வந்தால் மைக்ரோசாஃப்டின் […]
பின்னூட்டங்கள்