கட்டிலின்
இடது விளிம்பில் அவள்
வலது விளிம்பில் அவன்
முதுகு நோக்கி முதுகு
உரையாடலெல்லாம்
உலோகத் துண்டோடுதான்
அன்று
அவன் சொன்ன சேதி
‘இன்று நம் திருமண நாள்’
அவளின் பதில்
‘என்றுமே திரும்பாத நாள்’
நடுவில் கிடந்த
குழந்தை கேட்டது
‘என்னெ
என்ன செய்யப்
போறீங்க’
அமீதாம்மாள்