மஞ்சுளா
பச்சை இளநீர் காய்களை
விற்பவன் போல்
தேடியலைகிறாய்
உன் மனவோட்டங்களில்
எந்தத் தடையுமின்றி
பதியும் வார்த்தைகளை
அவ்வப்போது தெருவோரங்களில்
வீசி எறிகிறாய்
புழுதி படரும்
உன் சுவாசங்களை
அறிந்து
விலகியே நிற்கிறது
சாலையோரத்து
மரங்கள்
பறவைக் குஞ்சுகள்
கரகரத்து பாடுகின்றன
பிறிதொரு நாள்…
என் வாசலில் நின்றழும்
பெண்ணிடமிருந்து வருகிறது
உன் கண்களாலும்
உடலாலும்
உறிஞ்சப்பட்ட காமம்
--- மஞ்சுளா