தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

12 ஜூலை 2020

கதவு

Spread the love

மஞ்சுளா        

ஒரு கணத்தில் 

வாழ்வின் ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டேன் 


காற்று சுதந்திரமாக 

சிரித்து விலகியது 


அதன் ஒலிகள் 

கேட்கப்படுமுன் 

கதவுகள் மூடப்பட்டன 


சிறகுகளை வைத்து 

சித்திரம் பழகினேன் 


அதன் கைகளிலோ 

ரத்தச் சிதறல்கள் 


காற்று தீண்டாததால் 

கால் கொலுசுகள் 

புழுங்கிக் கொண்டிருந்தன 


மனோ வேகமோ 

வெப்ப அலைகளில் 

அதிர்ந்து கொண்டிருந்தது 


செறிந்த அதிர்வுகளால் 

காற்று செல்லமாய்

தட்டியது என் கதவை 


கதவுகள் இல்லாத யுகமோ 

தன்னை தயார் செய்து கொண்டே

விரைகிறது நம்மை நோக்கி 
                      —  மஞ்சுளா                           மதுரை 

Series Navigationஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருதுஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்

Leave a Comment

Archives