தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 ஜனவரி 2020

நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்

ரிஷி

Spread the loveரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


நித்திரை கலைந்த கையோடு
மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு
கையுறைகளை மாட்டியபடி
நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன்
என்பாரும்
செயற்கை சுவாசமாகிறேன்
என்பாரும்
நான் அதன் உலகை விரிவுபடுத்துகிறேன்
என்பாரும்
நான் அதன் பார்வையைத் தெளிவுபடுத்துகிறேன் என்பாரும்
நான் தான் அதற்கு மொழியைப் பழக்கப்படுத்தினேன் என்பாரும்
நான் தான் முதன்முதலாய் அதற்கு அரசியலை அறிமுகப்படுத்தினேன்
என்பாரும்
தம்மை யொரு மையமாக்கிக்கொள்ளும் முனைப்பில்
விட்டங்கள் ஆரங்கள் அணுக்களையெல்லாம் அப்பால் தள்ளிவிட்டு
கட்டங்கட்டி யதற்குள் கவிதையை முட்டியிட வைக்கும் தவிப்பில்
அவரவர் போக்கில் அரசியல் செய்துகொண்டிருக்க _

நவீன தமிழ்க்கவிதையின் நுரையீரல் திடமாகவே இருக்கிறது.

  •  
Series Navigationநாவினால் சுட்ட வடுபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்

Leave a Comment

Archives