தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

27 செப்டம்பர் 2020

பரிணாமம்

Spread the love

நிலாரவி

மழைத் தாகம் கொண்டு
வறண்டிருந்த நிலத்தில்
அமிலமழை பொழியும்
வானம்

கருகிய பயிர்களின்
இடுகாடுகளாய்
நேற்றைய நிலங்கள்

பூமியின் நுரையீரலில்
புகைநிரப்பும்
புகைப் போக்கிகள்

நிலத்தின் வயிற்றில்
ஆழமாய் தோண்டப்படும்
சவக்குழிகள்

சவக்குழிகளில்
முளைத்து நிற்கும்
கான்கிரீட் கூடுகள்

கூடுகளில்
குஞ்சு பொரிக்கும்
பறவைகள்

மரங்களைத் தின்றுவளரும்
கான்கிரீட் கல்வனங்கள்

தானியங்களை
சேகரிக்கும்
அருங்காட்சியகங்கள்

தானியங்கிகளின்
வெள்ளாமையில்
விளையும்
நெகிழித் தீவனங்கள்

சாம்பல் பூக்களின்
நிலத்தில்
ராஜாளிகளாகும்
குருவிகள்.

நிலாரவி.

Series Navigationசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்` 60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

Leave a Comment

Archives