சமீபத்திய இரு மலேசிய நாவல்கள் –

This entry is part 4 of 9 in the series 27 அக்டோபர் 2019

1.கருங்காணு.நாவல் அ ரங்கசாமி  

மலேசிய எழுத்தாளர் அ ரங்கசாமி அவர்கள் சமீபத்திய நூல் கருங்காணு.அவர் முன்பு ஐந்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் சயாம் மரண ரயில். சாதாரணத் தொழிலாளர்கள்   மற்றும்  கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு  போன்றவை  அவர் நாவல்களில் குறிப்பிடத்தக்க  பதிவுகளாக உள்ளன  இந்த நாவல்களின்  பல அம்சங்களை  மீண்டும்  கருங்காணு நாவலில்  கொண்டுவந்திருக்கிறார்  ரங்கசாமி அவர்கள்.  1940களில் தொடங்கி  சுமார் 20ஆண்டுகள்  மலேசியா சுதந்திரம் வரைக்குமான காலகட்டம்  இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது  பொன்னன் என்ற ஒரு தமிழனின் குடும்பத்தை  மையமாக வைத்து  இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது . ஒரு தமிழ் குடும்ப வாழ்க்கை என்பது மட்டுமில்லாமல்  மலேசிய தமிழர்கள்  மலேசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வாழ்வியல் சிக்கல்களை மிகவும் கூர்மையாக இந்த நாவல் சொல்கிறது . இந்த நாவல்  நாதன் என்ற புரட்சியாளன் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார் . தோட்டக் காட்டில் உள்ள தமிழர்களை  ஒருங்கிணைப்பதற்காக முயற்சியில் அவர் பெரும் ஈடுபாட்டை காட்டுகிறார். அவர் மூலம் பலருக்கு  சில உரிமைகள் கிடைக்கிறது.  இன்னைக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி மண்ணுல நமக்காக நாமே பாடுபடுவதுதான் என்று மக்கள் உணர்ந்து  கொண்டிருக்கிறார்கள் . அதை  தன்னுடைய உழைப்பிலும் செலுத்துகிறார்கள்  ரேஷன் கடை வருகை , மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சஞ்சலங்கள்  சொல்லப்பட்டிருக்கின்றன கம்யூனிஸ்டுகள் எப்படி அந்த காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்தார்கள்  என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார், இந்த நாவலில்  செம்பணைக் காடுகளுக்குள் இருந்துகொண்டு செம்மரங்கள்  மூலம்  என்னை தயாரித்து  வெளிக்கொணரப்படுகிறது என்பது  ஒரு பகுதியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பாமாயில் இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது  சாதாரண மக்களுக்காக ரேஷன் கடைகளில்  இந்த பாமாயில் விற்கப்படுகிறது . இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு எண்ணெய் வகைகள் புறக்கணிக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.  இந்த பாம் ஆயில்  எப்படி தயாரிப்பிற்கு வந்தது என்பதை பல கதாபாத்திரங்கள் மூலம் பெறப்படுகிறது .நெல் சோறு பற்றி கேள்விப்பட்டு இருப்போம்  இதில்  மரவள்ளி சோறு பற்றிய குறிப்புகள் உள்ளன . உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற ரீதியில் தமிழர்கள் சென்று கொண்டே இருக்கிறார்கள் ஜப்பான்காரர்கள் உடைய  ஆக்கிரமிப்பு  தமிழர்களின்  வாழ்க்கையில் பல சோதனைகளை எழுப்புகிறது . பிறகு 1953  அவர்கள் சரணடைந்து விடுகிறார்கள்  அதற்கு பின்னால் வருகின்ற காலகட்ட  சோதனைகளும் விளக்கப்பட்டுள்ளன.  நமக்கு எல்லாம் நல்ல காலம்தான்  வெள்ளைக்காரன் சீக்கிரம் திரும்பி வந்து விடுவாள் பழைய காலம் திரும்பும் என்று பல நம்பிக்கைகள்   சிலருக்கு வருகின்றன  ஆங்கிலேயன் வருகின்றான், அவருடைய நடவடிக்கைகளும் உழைப்பாளர்களுக்கு எதிராகவும் இருக்கிறது , சுதந்திரம் , பெரும் கலகம்  நேதாஜியின் எழுச்சியும்  மரணமும்  விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது  நேதாஜியின் மரணம் சார்ந்து தமிழர்கள் வாழ்வில்  எதிர்கொள்ளும் அதிர்ச்சிகளும் சொல்லப்பட்டிருக்கிறது  .இந்த நாவல்  குடியுரிமைக்காக  தமிழன் சிரமப்பட வேண்டிய  சிக்கல்களை சொல்கிறது . குடியுரிமைக்காக  பிள்ளை பெற்றவர்கள் 10 ஆண்டுகளாக இந்த ஊரில்  நாட்டில் வாழ்ந்து இருக்க வேண்டும்  மலாய் மொழியில் நன்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற   அதிர்ச்சிகள் அலை இன்னும்  கொத்தடிமை போல  நடத்தச் செய்கின்றன.  குடியிருப்பு இல்லாமல் அரசாங்க வேலை கிடைக்காது தமிழர்களின் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்க மாட்டார்கள் இந்த நாட்டில் எந்த உரிமையும் கிடையாது  என்ற அபிப்பிராயத்துடன் இந்த நாவல்  முடிகிறது . ரங்கசாமி அவர்களின் 5நாவல்களில் முக்கியமான அம்சங்களை திரட்டிக் கொடுத்தது போல் இந்த சிறு நாவல்  75 பக்கங்களில் அமைந்திருக்கிறது  பழைய தலைமுறை  வாசகர்களுக்கு அவர் ஐந்து நாவல்களையும் வாசிக்கிற அனுபவங்களும் வாய்ப்புகளும் கிடைத்திருக்கும் . இன்றைய புதிய தலைமுறை அந்த ஐந்து நாவல்களையும்  படிக்க  இயலவில்லை என்றாலும் இந்த சிறு நாவல் மூலம் அறிந்து கொள்ள  அவற்றின்  சுருக்கமான பதிவுகளை  சுலபமாக தெரிந்து கொள்ள இந்த நாவல் பயன்படும்  ( இந்த நாவலை வல்லினம்  பதிப்பகம் மலேசியா வெளியிட்டிருக்கிறது.)

 சுப்ரபாரதி மணியன். திருப்பூர்

2. இன்னொரு முகம்:  எஸ்பி பாமா நாவல்

இது எஸ்பி பாலா அவர்களின் மூன்றாவது நாவல் பு தாயாக வேண்டும் என்ற நாவல் ஏற்கனவே வெளிவந்த்து  அதற்கு பிறகு வெளிவரும் மூன்றாவது நூல் இது. நீண்ட இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் நூல் என்றும் சொல்லலாம்ம் இந்த நாவல்  210 பக்கங்கள் இருந்தாலும் இதன் மையம் ஒரு குறுநாவலுக்கான விடயமாகவே இருக்கிறது. ஒரு கணவன் மனைவி பிணக்கை அவர்கள் உணருகிறார்கள். அந்தப் பிணக்கு சாதாரண விஷயங்களால் வந்தது. ஆனால் அவர்களுக்கான  இடைவெளி பெரியதாகிக்  கொண்டே இருக்கிறது .ஒரு நிலையில் அவர்கள் தங்களுடைய நிலையை உணர்ந்து தங்களின் சுயபச்சாதாபத்தை பார்த்து தாங்களே தீர்த்துக் கொள்கிறார்கள். இணைந்து கொள்கிறார்கள் என்று சொல்லலாம். அவ்வளவுதான் இந்த பின்னணியில் ஒரு மூன்று தம்பதிகள் பற்றியும் அவர்கள்  வாழ்க்கை தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது .அதில் ஒரு முக்கியமான தம்பதியை  எடுத்துக்கொண்டு கிளைக்கதைகளாக மற்றவர்களுடைய குடும்ப வாழ்க்கைச் சொல்லப்பட்டு இருக்கிறது .சின்ன சின்ன முரண்பாடுகள் நம் குடும்பங்கள் குடும்ப வாழ்க்கையில் தரும் சிக்கல்கள் .அவை சிக்கல்கள் தரும்  மனவேதனைகள் ஆகிவற்றை முக்கியமான குறிக்கோளாக கொண்டிருக்கிறார். பெரும்பாலும் பாமா இதில் ஒரு கதை சொல்லியாக தம்பதிகளின் கதைகளைச் சொல்லிக் கொண்டே போகிறார். ஒரு நாவலுக்கான நீண்ட காலம் காலம் இல்லை சாதாரணமான கதை சொல்லும் அம்சங்கள் இந்த நாவலை எழுதுவதற்கு நிறைத்திருக்கிறது மொழியும் சுகமான வாசிப்புக்கு ஏற்றதாக இருக்கிறது. எந்த சிக்கலும் இல்லை பெண்கள் வாழ்வை சார்ந்த சில அனுபவங்களை முன்வைக்கிறார் என்பது  ஒரு பிரதியாகத் தருகிறது. ஆனால் அழுத்தமான பதிவுகள் குறைவு.நான் விரிவான காலமும் களமும் இதில் இல்லை. சொல்லப்பட்ட விதத்தில் கூட இயல்பான கதை சொல்வது மட்டுமே மேலோங்கி ஒலிக்கிறது மற்றபடி இந்த கதாபாத்திரங்கள் உடைய மனநிலையை விசித்திரமான நிலை எல்லாம் எளிமையாக சொல்லப்பட்டிருக்கின்றன. நீண்டகால இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் நாவல் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது. தன்னளவில் ஒரு குறுநாவலுக்கான விஷயத்தை நாவல் விஷயமாக எடுத்துக் கொண்டு செய்திருக்கிறார் எஸ்பி பாமா அவர்கள். ( இதனுடைய விலை50 ரூபாய் கோலாலம்பூரில் உள்ள பேர் சாட்டுவான் முழுசாய் நிறுவணம் கோலாலம்பூர் வெளியிட்டு இருக்கிறது )

Series Navigationமுதியோர் இல்லம்2020 ஆண்டில் நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் கூடி, மனிதர் இயக்கும் விண்கப்பல் சுற்றுலா தொடங்கத் திட்டம்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *