குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.

This entry is part 8 of 8 in the series 15 டிசம்பர் 2019

2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, பார்ஸி, ஜெயின், புத்த மதத்தை சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட மசோதா லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியிருக்கிறது.

இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே.

கவனிக்கவும், 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை.

ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் கிறிஸ்துவர்கள் சீக்கியர்கள் (இவர்களே பெரும்பான்மை)க்கு குடியுரிமை வழங்குவதையே இந்த சட்டம் உறுதி செய்கிறது. இவ்வாறு வந்து தங்கியிருக்கும் பலர் இதனை வரவேற்றிருக்கிறார்கள்.

இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லீம் அல்லாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களோ, அல்லது அவற்றின் வரலாறோ தெரியாதவர்கள் இந்த விவாதம் செய்வதற்கே லாயக்கற்றவர்கள் என்பதால், அவற்றை இங்கே நான் பேசப்போவதில்லை.

ஆனால், காங்கிரஸ், திமுக கம்யூனிஸ்டு முஸ்லீம் கட்சிகள் எப்படி முஸ்லீம்களை இந்த சட்டத்தில் சேர்க்காமல் விடலாம் என்று கடும் கோபத்துடன் இன்று வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களில் பேயாட்டம் ஆடிகொண்டிருக்கிறார்கள். மறு பக்கம், எப்படி இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று அஸ்ஸாமில் கோபத்துடன் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இரண்டும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றுகொன்று தொடர்புடையவை.

ஆப்கானிஸ்தானிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேசிலிருந்து ஏன் இந்தியாவுக்குள் முஸ்லீம்கள் வரவேண்டும்? தனக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டு சென்ற முஸ்லீம்கள் ஏன் இந்தியாவுக்குள் வர விரும்புகிறார்கள்?

முக்கிய காரணம் பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது. இன்று அதன் குடிமக்கள் வறுமையினால் இந்தியா வர நேர்ந்துள்ளது. இது புரிந்துகொள்ளக்கூடிய காரணம் என்றாலும் அதற்காக குடியுரிமை வழங்க தேவையில்லை. இதற்கு தனி சட்டம் வேண்டும். உதாரணமாக இவர்களுக்கு குடியுரிமை இல்லாத ஆனால் வேலை செய்யும் அனுமதி கொடுக்கக்கூடிய பத்திரங்கள் கொடுக்கப்படலாம். ஆனால் குடியுரிமை தேவையில்லாதது. ஏனெனில் எதிர்காலத்தில் பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவை விட அதிக வேலைவாய்ப்புள்ள நாடாக ஆனால், இவர்கள் திரும்ப பாகிஸ்தான் பங்களாதேஷ் சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட பொருளாதார அகதிகளுக்கு குடியுரிமை தேவை இல்லாதது. அவர்களே கூட முக்கியமாக கருதாத ஒரு விஷயம். ஆனால், மத ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதால் இந்தியாவுக்குள் வரும் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள், இந்தியாவை விட பாகிஸ்தான் வளம் மிகுந்த நாடாக ஆனாலும் திரும்பி போவப்போவதில்லை. ஆகவே அவர்களுக்கு குடியுரிமை தேவையான ஒரு விசயம்.

இது சாதாரணமான காமன் சென்ஸ் விஷயம். ஆனால், ராஜன் குறை, அமார்க்ஸ், என் ராம், ஜென்ராம், ரோமிலா தாப்பர், ராமச்சந்திர குஹா இன்ன இதர மாங்கா மடையர்களுக்கு காமன் சென்ஸ் என்பதை விட இந்துக்களை எதிர்க்க கிடைத்த வாய்ப்பாகவே அதனை உரு திரித்து ஊதி பெருக்கி பேயாட்டம் போடுவது முக்கியம்.

உதாரணமாக ஸ்ரீ லங்கா தமிழர்கள் உள்நாட்டுப் போராட்ட்ங்களின் போது அகதிகளாய்த் தமிழர்கள் வந்தனர். அவர்களுக்கு தக்க இடம் கொடுத்து ஆதரித்து வருகிறது இந்தியா. ஆனால் சிங்களர்கள் அவர்களுடன் வந்திருந்தால் அவர்களைத் திரும்ப அனுப்புவது தான் நியாயம். அவர்களையும் தமிழர்களைப் போலவே கருதவேண்டும் குடியுரிமை தர வேண்டும் என்று எந்த முட்டாளும் சொல்ல மாட்டான்.
ஆனால் சிங்கள அரசுக்கு எதிராக எழுதி அதனால் சிங்கள பத்திரிகையாளர் இந்தியாவிடம் புகலிடம் கேட்டால் அதை இந்தியா புரிந்துணர்வுடன் விண்ணப்பத்தை ஏற்று பரிசீலிக்க வேண்டும். அது தான் நியாயம். ஆனால் தமிழர்களுக்குத் தரும் புகலிடத்தின் அடிப்படையே வேறு. இதை புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் நடிப்புப் புரட்சியாளர்கள் தான் இந்த சட்டத்தின் எதிர்ப்பாளர்கள். இது அப்பட்டமான இனவாதம்.


இதே நேரத்தில் அமெரிக்காவில் கருப்பினத்தவர் வெள்ளையின போலீஸாலும் வெள்ளையினத்து அதிகார வர்க்கத்தாலும் கொல்லப்பட்டபோது எழுந்த குரலை நாம் நினைவில் கொள்ளவேண்டும். #blacklivesmatter என்ற கோஷம் பலரால் எழுப்பப்பட்டது. இதில் வெள்ளையரும் இந்த குரலை எடுத்து கலந்துகொண்டார்கள்.

இதற்கு எதிராக வெள்ளையினத்தவரால் இன்னொரு முழக்கம் வைக்கப்பட்டது. அது #alllivesmatter என்பது.

ஆனால் இதிலுள்ள வன்மமும் வக்கிரமும் எளிதில் விளங்கிகொள்ளக்கூடியது. கருப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கான அமைப்பு ரீதியான காரணங்களுக்கு எதிராக எழுப்பப்படும் கோஷமான ”கருப்பினத்தவரின் உயிர்கள் மதிக்கத்தக்கவை” என்ற வாசகத்தில் உள்ள முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் வெள்ளையின அரசியல்வாதிகள் எல்லா உயிர்களுமே மதிக்கத்தக்கவைதான் என்று எதிர்குரல் கொடுக்கிறார்கள்.

இது கருப்பினத்தவர்களின் துன்பத்தை அவர்களது அவல நிலையை உதாசீனம் செய்கிறது. அவர்களது துன்பத்தை நிராகரிக்கிறது. எல்லாருமே ஒரே மாதிரியான அவலநிலையில்தான் இருக்கிறார்கள் என்று பம்மாத்து செய்கிறது. எல்லா உயிர்களுமே முக்கியமானவைதான் என்று அதனை எதிர்ப்பது இனவாதத்தின் காரணமாக கொல்லப்பட்ட கருப்பினத்தவர்களின் உயிர்களை அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்துகிறது. இவ்வாறு எல்லா உயிர்களும் முக்கியமானவைதான் என்று சொல்லி பலத்த விமர்சனத்துக்கு ஆளானவர்கள் ஹில்லரி கிளிண்டன், டோனல்ட் ட்ரம்ப் போன்றவர்கள்.

”எல்லா உயிர்களும் முக்கியமானவை” என்று சொல்வதே ஒரு இனவாத கோஷமே என்று கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் கார்லா ஷெட் கடுமையான விமர்சனம் வைக்கிறார். இன்னும் பலரின் கடும் விமர்சனத்துக்கு ஆளான ஜென்னிபர் லோபஸ், ஹில்லாரி கிளிண்டன் போன்றவர்கள் தாங்கள் கூறியதற்கு மன்னிப்பு கோரினார்கள்.

எல்லாருமே பாதிக்கப்பட்டவர்கள்தான், ஆகையால் முஸ்லிம்களையும் இந்தச் சட்டத்தில் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற அர்த்தமற்ற கோரிக்கையும் இந்த அப்பட்டமான இனவாதத்துடன் ஒப்பிடக் கூடிய ஒன்று.


இந்தியாவில் அப்படிப்பட்ட நேர்மையான விவாதத்துக்கு எதிரான எதிரான சூழ்நிலை நிலவுகிறது. காரணம் பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது.

பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் ஆப்கானிஸ்தானிலும் இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சீக்கியர்களுக்கும் எதிரான கொடுமைகள் அமைப்பு ரீதியானவை. இவைகள் தங்களை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துகொண்டவை. இவர்களின் நாட்டில் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ராணுவ தளபதியாகவோ முஸ்லீமை தவிர வேறு யாரும் வரக்கூடாது என்று சட்டமே இருக்கிறது. ஆனால் இந்த பாகிஸ்தான்தான், இந்தியா இவ்வாறு 31313 பேர்களுக்கு குடியுரிமை வழங்குவதை “இந்து பாசிச பயங்கரவாதம்” என்று அழைக்கின்றது. இவை தங்கள் நாட்டில் அமைப்பு ரீதியான வெறுப்பை கொடுமைகளை இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மீது செலுத்தாமல் இருந்தால் ஏன் அவர்கள் இந்தியாவுக்கு ஓடி வரப்போகிறார்கள்? என்று ஒரு அறிவுஜீவி கூட கேட்கவில்லை.

ஆனால், அறிவுஜீவிகளை விட முக்கியம் இங்கே இருக்கும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு கட்சிகளின் அப்பட்டமான இந்து வெறுப்பு.

31313 இந்துக்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை கொடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் டெல்லியில் நடத்திய பேரணி

ராமர் ஒரு கற்பனை என்று நீதிமன்றத்தில் தாக்கீது செய்த காங்கிரஸ் அரசாங்கமும், ராமர் என்ன பொறியியல் படித்தவரா என்று கிண்டல் செய்த திமுகவும், இந்து மத எதிர்ப்பையே முழு நேர வேலையாக செய்யும் கம்யூனிஸ்டுகளும் வழக்கமாக இந்து மதத்தின் மீது காட்டும் வெறுப்பை தாண்டி, இன்று இந்துக்கள் மீதே தங்கள் வெறுப்பை இங்கே அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள். அதுவும் பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் தப்பி இங்கே ஓடிவந்த இந்துக்கள் மீது!

இலங்கையில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலோனோர் ஒரு சில பிராந்தியங்களில் பெரும்பான்மையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமையை வழங்குவது என்பது அவர்கள் மீதான வன்முறையை சிங்களர்கள் அதிகரிக்கவும், அந்த நிலப்பரப்புக்களை சிங்களர்கள் ஆக்கிரமிக்கவுமே வழிவகுக்கும். ஆனால் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற இடங்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களோ அல்லது அவர்கள் தேர்தலில் வென்று தங்களை தாங்களே நிர்வகிக்கும் வாய்ப்புக்களோ கிடையாது. 1947இலிருந்து இந்திய அரசு தன் கண்களை இறுக மூடிகொண்டதால், பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகள் இந்துக்கள் மீது கடுமையான இன ஒழிப்பு நடத்தியதால், இன்று விளிம்பு நிலையில் இன்னமும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிகொண்டு இருப்பவர்களே அதிசயம் என்று ஆகியிருக்கும் நிலையில் அப்படி அங்கிருந்து வந்தவர்களுக்கும்குடியுரிமை கொடுக்கக்கூடாது என்று பஸ்களை கொளுத்தி போராட்டம் செய்யும் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் தங்கள் மனதில் எந்த அளவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பை வைத்திருக்கிறார்கள் என்று அறியலாம்.

இங்கே தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாத் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத ஆதரவு குழுக்கள் பகிரங்கமாக மேடைகளில் இந்த சட்டத்த்தை எதிர்த்து பேசுகிறார்கள். இந்த சட்டத்துக்கும் இவர்களுக்கும் ஸ்னான பிராப்தி கூட கிடையாது. பங்களாதேஷிலிருந்து வந்த இந்துக்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இங்கே போராட்டமாக வெடிப்பது அப்பட்டமான இந்து வெறுப்பு மட்டுமே. அந்த வெறுப்பு அறிஞர்களாலும் சான்றோர்களாலும் கண்டிக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட இந்து வெறுப்பை பரப்பும் கட்சிகள் மக்களால் முக்கியமாக இந்து மக்களால் புறம் தள்ளப்படவேண்டும்.

தமிழ்நாட்டில் முக்கியமாக இந்துக்கள் திமுகவை கடுமையாக நிராகரிக்கவேண்டும். இந்து வெறுப்பையே தனது ஆரம்பமாகவும், இடையாகவும் கடையாகவும் வைத்துள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தை தமிழ்நாட்டில் ஒரு சதவீத வாக்கு கூட பெற முடியாத கட்சியாக ஆக்க உங்கள் அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

Series Navigationஅமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்
author

சின்னக்கருப்பன்

Similar Posts

28 Comments

  1. Avatar
    ஜோதிர்லதா கிரிஜா says:

    அருமையான கட்டுரை. தெளிவான வாதங்கள்.
    ஜோதிர்லதா கிரிஜா

  2. Avatar
    Vinayagam says:

    //தமிழ்நாட்டில் ஒரு சதவீத வாக்கு கூட பெற முடியாத கட்சியாக ஆக்க உங்கள் அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.//

    கட்டக்கடைசியில் வெறும் தேர்தல் பரப்புரையாக்கி விட்டார் சின்ன கருப்பன். எந்த நகராட்சியில் அல்லது ஊராட்சியில் நிற்கிறார் பி ஜெ பி சார்பில் ?

    //…எப்படி இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று அஸ்ஸாமில் கோபத்துடன் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இரண்டும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றுகொன்று தொடர்புடையவை.”

    குழப்புகிறார். ஒன்று, வேறானவை என்று சொல்ல வேண்டும். அல்லது தொடர்புடைவை என்று சொல்ல வேண்டும். இரண்டையுமே சொன்னால் எப்படி புரிவது ? இதுதான் தெளிவான கட்டுரையா ? இப்பிரச்சினையை மேலோட்டமாக தெரிந்தோருக்குக் கூட அவை வேறானவை என்று தெரியும். ஏன் அசாமில், திரிபுராவிலும், போராடுகிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொண்டு வாருங்கள்.

    //31313 இந்துக்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை கொடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் டெல்லியில் நடத்திய பேரணி//

    இது பொய். ஏனென்றால், நடக்கும் போராட்டங்கள் ”இந்துக்களுக்கு கொடுக்கக் கூடாது!” என்று இல்லை. ”ஏன் இசுலாமியருக்கு மட்டும் கொடுக்கவில்லை” என்றுதான். உண்மையைச் சொல்லிவிட்டால், கட்டுரையின் அடிநாதம் அடிபட்டு போய்விடும் என்பதால் பொய் சொல்கிறார். அடிநாதம் என்ன? போராளிகளுக்கு இருப்பது ”இந்து வெறுப்பே !” என்பதுதான்.

    போராட்டங்களில் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; பரவலான பிறரும்தான் குதித்திருக்கிறார்கள். அத்திரளான கூட்டத்தில் இசுலாமியர் தவிர இந்துக்களே அதிகம். அனைவருக்கும் இந்து வெறுப்பா ? அது கிடக்கட்டும். நேற்றைய செய்தியின்படி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மேண்ட் அனைத்திலிருந்து எதிர்ப்பு கடிதம் வெளியிட்டிருக்கிறார்கள். ஆசிரியர் மாணவர்கள் சேர்ந்து கையெழுத்திட்டிருக்கிறார்கள். இந்து வெறுப்பா ?

    இலங்கை அகதிகளுக்கு ஏன் கொடுக்கவில்லை என்பதற்கு சின்ன கருப்பன் சொல்லும் காரணம் வினோதமானது. அவர் சொல்வது: ”அப்படி கொடுத்தால், சிங்கள அரசு அங்கே வசிக்கும் இலங்கைத் தமிழர்களை கொடுமைப்படுத்துவார்களாம்!’ நல்ல கற்பனை. அப்படியென்றால், இலங்கைத்தமிழர், ஏன் ”கொடுக்காதே! அப்படி கொடுத்தால் எங்களை சிங்கள அரசு பந்தாடும் !!” என்று சொல்லவே இல்லை. இந்திய அரசுக்குக்கூட இக்கற்பனை இல்லை. இந்திய அரசிடமிருந்து இப்படி விளக்கம் வரவில்லை. Great imagination annaachi !

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      ”ஏன் இசுலாமியருக்கு மட்டும் கொடுக்கவில்லை”

      இதில் ஒன்றும் பெரிய ராணுவ ரகசியம் அல்ல. ஏனென்றால் இஸ்லாமிய தேசங்களில் மதரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாகும் சிறுபான்மை மதத்தினரை மட்டுமே இந்த சட்டம் கருத்தில் கொள்கிறது. இஸ்லாமிய குடியரசுகளில் அப்படிப்பட்ட சிறுபான்மையினர் இஸ்லாமிய மதம் சாராதவர்கள் என்பது புரிந்துகொள்ள மிகக்கடினமான விஷயமா என்ன ? வேடிக்கைதான்.

      இஸ்லாமியர்களை இந்தியாவுக்குள் வராதே என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. குறிப்பிட்ட “இந்த” சட்டமானது, மேற்படி தேசங்களில் மதரீதியான சிறுபான்மையினராகவும் அந்த காரணத்திற்காகவே அடக்குமுறையை சந்தித்துக்கொண்டும் இருக்கும் ஆறு மதத்தினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க ஆவன செய்கிறது, அவ்வளவே.

      மற்றபடி மேற்படி தேசங்களிலிருந்து இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியேற நினைத்தால் அவர்கள் தகுந்த முறையில் விண்ணப்பிக்கலாம். தகுதியிருப்பின் குடியுரிமையும் பெறலாம். அதற்குத்தடையாக எந்த சட்டமும் இல்லை என்பதுதான் எனது புரிதல். அப்படி அவர்களது குடியேற்றத்துக்குத் தடைவிதிக்கும் சட்டம் வேறு ஏதும் இருந்தால் தெரியப்படுத்தலாம்.

      1. Avatar
        Vinayagam says:

        இசுலாமிய நாடுகள் பலபல. அனைத்திலும் இருந்து இந்தியாவுக்கு வருவோரை இச்சட்டம் குறிப்பிடவில்லை. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் – இம்மூன்றிலிருந்து வருவோரை மட்டுமே குறிப்பிடுகிறது. சட்டம் வேறு; நடப்பது வேறு. சட்டம் எதுவும் சொல்லும்.

        அண்டை நாட்டிலிருந்து தம் உயிரைக் காத்துக்கொள்ள பக்கத்து நாட்டிற்கு ஓடி வருவோரை அகதிகளாகப் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தது, திரும்ப போக முடியாதபடி அவர்கள் நாடு நிலையிருந்தால், மனிதாபிமான முறையில் குடியுரிமை கொடுக்கலாம். மதரீதி வன்முறை என்றாலும் அவர்கள் அகதிகள்தான். இப்படி வெறும் அகதிகளாக பார்த்து குடியுரிமை வழங்க உலக நாடுகளால் வகுக்கப்பட்ட அகதிகள் தஞ்சம் சட்டம் இருக்கிறது. அதை பயன்படுத்தலாம். ஒட்டுமொத்தமாக எல்லாருக்குமே என்றில்லாமL, ‘எவர் கேட்கிறாரோ அவருக்கு!’ என்றிருந்தால் பிரச்சினையே இல்லை. இப்படித்தான் இலங்கைத் தமிழர்களும், சிரியா அகதிகள் பல நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள்.

        1. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          இந்த மூன்று இஸ்லாமிய தேசங்களைத்தவிர மற்ற எந்த இஸ்லாமிய தேசங்களில் மேற்படி ஆறு மதத்தைச்சேர்ந்தவர்கள் சிறுபான்மை மத குடிமகன்களாக இருக்கிறார்கள் ? அப்படி எத்தனை தேசங்களில் அவர்கள் மதரீதியான ஒடுக்குமுறையை சந்திக்கிறார்கள் ?

  3. Avatar
    Yogarajan says:

    இது பா.ஜ.க கைகூலியின் பிதற்றல்,
    காங்கிரசும் கம்யூணிஸ்ட்டுகளும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் குடியுரிமை கொடுக்ககூடாது என்று போராடவில்லை அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கவேண்டும் என்றுதான் போராடுகிறார்கள்

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமமாக மதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். மதரீதியான வன்முறை இருப்பதை மறுக்கவில்லை, ஆனால் அனைத்து மதத்தினருக்கும் சமவாய்ப்பும் சம உரிமையும் சட்டரீதியாக மறுக்கப்படவில்லை.

      // இது பா.ஜ.க கைகூலியின் பிதற்றல் //

      ‘பா.ஜ.க-வை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்’ என்ற ஓலத்துக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

      1. Avatar
        Vinayagam says:

        எல்லா மக்களும் சமஉரிமைகள் பெற சட்டங்கள் ஒன்றா! இரண்டா!! நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அச்சட்டங்கள் முறையாக மனப்பூர்வமாக அமல் படுத்தப்பட்டால், நம்நாட்டில் என்றுமே அமைதி நிலவும். ஏன் அந்நிலை வரமாட்டேன் என்கிறது ? எடுத்துக்காட்டாக, பெண் பாதுகாப்புக்காக, தலித்துகளுக்காக, சிறார்களுக்காக. எத்தனை, எத்தனை சட்டங்கள் ? நடப்பதென்ன ? போலீசு நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்க கூட பெண்கள் அஞ்சுகிறார்கள். சிந்திக்கவும்.

        ”கைக்கூலி” என்ற சொல்லை நானும் எதிர்க்கிறேன். கைக்கூலி என்றால், மனமுவந்து செய்ப்பவரில்லை. ”கூலிக்கு ஒப்பாரி” என்பதுதான் கைக்கூலி. இக்கட்டுரையாளர் பா ஜ கவின் தீவிர அபிமானி; தி மு க வின் தீவிர எதிர்ப்பாளர். தன தீவிரங்களைக் காட்டவே இக்கட்டுரை. அவருக்கு திருப்தி தருகிறது. கரும்பு தின்ன கூலியா ?

        1. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          // …. நம்நாட்டில் என்றுமே அமைதி நிலவும். ஏன் அந்நிலை வரமாட்டேன் என்கிறது ? //

          அது உடோப்பியக்கற்பனை மட்டுமே. எந்த தேசத்திலும் எந்த காலத்திலும் என்றும் அமைதி நிலவிக்கொண்டிருப்பதாக நான் அறியவில்லை. பிரச்சினையில் அளவுகள் வேண்டுமானால் கூடக்குறைய இருக்கலாம். அதுவும் இந்தியா போன்ற எவ்விதத்திலும் ஒற்றைப்படையற்ற தேசத்தில் நிச்சயம் பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதுவும் பொருளாதார ரீதியில் முன்னேற ஆரம்பித்த கடந்த 20-25 ஆண்டுகளில் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகள் அதற்கு முந்தைய காலகட்டங்களைவிட அதிகம். காரணம் வெளிப்படை.

          சரி, இக்கட்டுரையாளர் பா.ஜ.க-வின் தீவிர அபிமானியாக இருந்துவிட்டுத்தான் போகட்டுமே, என்ன கெட்டுப்போயிற்று ? தி.மு.க-விற்கோ, அ.தி.மு.க-விற்கோ, காங்கிரஸுக்கோ, கம்யூனிஸ்டுக்கோ, நாம் தமிழருக்கோ, ம.தி.மு.க-விற்கோ அபிமானிகள் இருக்கும்போது பா.ஜ.க-விற்கு அபிமானி இருக்கக்கூடாதா என்ன ? அவர்கள் மட்டும் தீட்டுப்பட்டவர்களா ?

          அவரது கருத்தில் பிழை இருந்தால் அதை சுட்டி தமது தரப்பை முன்மைப்பதே உரையாடல் / விவாதம். அதைவிடுத்து தனிப்பட்ட தாக்குதலில் இறங்குதல் அவதூறு.

          1. Avatar
            Vinayagam says:

            அமைதி என்றால் மயான அமைதி இல்லை. அச்சமின்றி மக்கள் வாழும் நிலைக்கு பெயர்தான் அமைதி அதற்காக கொலை கொள்ளைகள் இருக்கா என்பது பொருளாகாது. நேற்று இந்திய தலைமை நீதிபதி, ‘தற்போது எங்கு பார்த்தாலும் அமைதியில்லா சூழல்; எனவே இவ்வழக்கை தற்போது எடுப்பது உசிதமாகாது’ என்றல்லவா சொன்னார் ? அவரிடம், ‘எப்போதுமே அமைதி இருக்காது ஒரு நாட்டில் இதுதான் எதார்த்தம் எனல் எப்படி சரியில்லையோ அப்படி நான் சொல்வதற்கும்.

            கட்டுரையாளர் பிஜேபி அபிமானியாக இருக்கக்கூடாது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் கட்டுரையில் அது உண்மையைப் பொய்யாக்கும்படி வரக்கூடாது. ஆவேசம் கண்களை மறைத்து புத்தியை பேதலிக்கும். அதன் விளைவாக பொய்கள் புனைந்துரைக்கப்படும். கட்டுரையின் தலைப்பு ‘இந்து வெறுப்பே!’ கட்டுரை முழுவதும் அதைத்தான் சொல்கிறார். பச்சைப் பொய். எப்படி? அசாம், திரிபுரவைத்தவிர, இந்தியா போராட்டம் நடத்துவோர் எவருமே அகதிகளாக வரும் இந்துக்களுக்கு குடியுரிமை கொடுக்கக்கூடாது என்று சொல்லிப் போராடவில்லை. ஏன் இசுலாமிய அகதிகளை மட்டும் விளக்குகிறீர்கள்? என்றுதான் கேட்கிறார்கள். அசாம், திரிபுராவில், வங்க தேஷத்திலுருந்து அகதிகளாக இசுலாமியர் மட்டுமில்லை; இந்துக்களும் வந்து ஆக்கிரமித்து வருகிறார்கள். இந்துக்களை மட்டும் விட்டால் எங்கள் அம்பதாண்டு போராட்டமே வீண் ! என்று போராடுகிறார்கள்.

            ஆனால் எதையுமே சரியாகாத் தெரியாமல், இந்து வெறுப்பே என்பதற்கு காரணம்? அபிமானம் ஓன்றும் செய்யாது. அளவுக்கு மீறும் தீவிரம் காரணம். இது எப்படி தனிநபர் தாக்குதல் ஆகும் ?

            கட்டுரை தாறுமாறாக இருந்தால், பாதிக்கப்படுவோர் நீங்களும் நானும்தான்! ஒரு பொது வெளியை இப்படி பயன்படுத்தலாமா என்றால் தனிநபர் தாக்குதலா ? Belong to any party or have any ideology – who cares? But don’t tell lies in your articles here. Fanaticism makes your articles toxic.

  4. Avatar
    காரோணன் says:

    நல்ல கட்டுரை. ஆனால் இரு தவறான கருத்துகள் உள்ளன:

    1. ஈழத்தமிழரை சேர்க்காமல் விட்டது பெரும் தவறு. அதை சுட்டிக்காட்டி மத்திய அரசை திருத்தம் கோராமல், அதற்கு இப்படியான ஒரு காமாசோமா விளக்கத்தை தந்து ஜால்ரா அடிப்பது தவறு.

    2. தேவையில்லாமல் திமுகவை திட்டியிருக்கிறார். எல்லா எதிர்கட்சிகளும் தான் எதிர்க்கின்றன. இதில் எதற்கு திமுகவை மட்டும் தனிமைப்படுத்தி கட்டம் கட்ட வேண்டும்?

    (சிறுபான்மையினர் ஆதரவு சட்டமான இதை நான் வரவேற்கிறேன். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் பாதிக்கப்பட்டு ஓடிவந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அந்நாட்டு ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவளிப்பது, குடியுரிமை வழங்குவது மிகச்சரியான செயலே. ஈழத்தமிழர்களையும் இச்சட்டத்தில் சேர்த்து அவர்களுக்கும் குடியுரிமை வழங்க தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் இணைந்து மத்திய அரசை நெருக்கவேண்டும்)

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      அனைவரும் வழுக்கும் இடம் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பது குறித்து.

      முதலில் இந்த சட்டம், ஆப்கன், ப.தேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற சட்டரீதியாக தம்மை மதவாத அரசு (”இஸ்லாமிய குடியரசு”) என்று அறிவித்துக்கொண்டிருக்கும் தேசங்களில் மதரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாகுபவர்கள் (அதாவது, அவர்கள் ‘இஸ்லாமியர் அல்லர்’ என்ற ஒரே காரணத்துக்காக ஒடுக்கப்படுபவர்கள்) அதிலிருந்து தப்பித்து தமது தேசங்களிலிருந்து வெளியேறி இந்தியாவுக்குள் குடிபுகுந்தால், அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கானது.

      இந்த சட்டம் மதவாத சிறுபான்மையினருக்கு அடைக்கலம் வழங்கும் முகமாக என்பதால்தான் இஸ்லாமியரல்லாத, மேற்படி இஸ்லாமிய தேசங்களில் சிறுபான்மையினராக இருக்கும் ஆறு சிறுபான்மை மதங்களைச்சார்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க ஆவன செய்கிறது. அந்த இஸ்லாமிய தேசங்களில் மதவாத ஒடுக்குமுறைக்கு இஸ்லாமியர்களே ஆளாகமாட்டார்கள்தானே ? அதனால்தான் இஸ்லாமியர்களை இந்த சட்டத்தில் சேர்க்கவில்லை. உடனே ‘அஹமதியா போன்ற பிரிவினர் பாதிக்கப்படுகிறார்களே’ என்ற குரல் எழும்புகிறது. அது இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவுதானே ஒழிய இன்னொரு சிறுபான்மை மதமல்ல என்பதாலும், அஹமதியாக்கள் ”மதரீதியான” ஒடுக்குமுறைக்கு ஆளாகவில்லை என்பதாலுமே அவர்களை சேர்க்கவில்லை.

      மேலும் இந்த ஆறு சிறுபான்மையினரும் இந்தியாவுக்குள் வந்தபிறகு, வாய்ப்பு கொடுக்கப்பட்டால் மீண்டும் மேற்படி 3 தேசங்களுக்கும் திரும்பிச்செல்ல விழைவார்களா என்ற கேள்விக்கு விடை தெரிய நாம் ஒன்றும் மேதைகளாக இருக்கவேண்டியதில்லை.

      ஆனால் ஈழத்தமிழர் விஷயம் அப்படி அல்ல. முதலில் அவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தது சிறுபான்மை மதத்தினர் என்பதாலோ, மதரீதியான ஒடுக்குமுறையை சந்தித்தோ அல்ல. இரண்டாவது, போர் நின்று, புலிகள் அழித்தொழிக்கப்பட்ட சூழலில், வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் இலங்கை திரும்பவே விரும்புவார்கள் (இதுகுறித்து வாக்கெடுப்பே நடத்தலாம்). அப்படிப்பட்ட சூழலில் நாம் அவர்களுக்குக் குடியுரிமை கொடுத்தால் இலங்கை அரசு அவர்கள் இலங்கை திரும்பும் வாய்ப்பை அடைத்துவிடவே வாய்ப்பு அதிகம். மேலும் ‘இந்தியா குடியுரிமை வழங்கத்தயாராக இருக்கிறது’ என்று தெரிந்தால் இலங்கையில் இருக்கும் தமிழர்களின் நிலை என்னவாகும் என்று எண்ண இயலாது. அவர்களுக்கு இதுநாள்வரை இருந்துவரும் சம உரிமை, வாய்ப்புகள் எல்லாம் கொஞ்சங்கொஞ்சமாக பறிக்கப்பட்டு மென்மேலும் ஒடுக்குமுறையை சந்திக்க நேரிடலாம் (இதை ஒரு ஊகமாகத்தான் வைக்கிறேன் என்றாலும், என்று புத்தகுருமார்கள் அரசியல் ஆதிக்கம் செலுத்தும் இலங்கையில் அப்படி நடக்காது என்று உத்தரவாதம் கொடுக்க இயலாது).

      எனவே இந்தியாவில் அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்புகள் அப்படியே இருக்கவேண்டுமென்றால் நாம் இவ்விஷயத்தில் அவசரம் காட்டக்கூடாது. இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கிவிட விரும்பும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் – வேண்டும். தாயகம் திரும்புவோருக்கு மறுவாழ்வளிக்க இலங்கை அரசுக்கு நாம் அரசுரீதியில் அழுத்தம் தரவேண்டும். அதுவே அவர்களுக்கு செய்யும் நிரந்தர உதவி.

      1. Avatar
        Vinayagam says:

        //அஹமதியா போன்ற பிரிவினர் பாதிக்கப்படுகிறார்களே’ என்ற குரல் எழும்புகிறது. அது இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவுதானே ஒழிய இன்னொரு சிறுபான்மை மதமல்ல என்பதாலும், அஹமதியாக்கள் ”மதரீதியான” ஒடுக்குமுறைக்கு ஆளாகவில்லை என்பதாலுமே அவர்களை சேர்க்கவில்லை.//

        இது கருத்துப்பிழை. அஹமதியாக்கள் இசுலாமின் ஒரு பிரிவு என்று தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இசுலாமியரின் பெரும்பிரிவான சன்னிக்கள் (பாகிஸ்தான் இசுலாமியர்கள் இவர்கள்தான்) அடுத்த பெரும்பிரிவான ஷியாக்கள், – இவ்விரு பிரிவினர்கள் அஹமதியாக்களை, இசுலாமியர் என்று ஏற்பதில்லை. எனவேதான், வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இவர்கள் ‘சன்னி பிரிவை ஏற்றுக்கொண்டால், நிம்மதியாக வாழலாம் அங்கே!’ என்ற நிலை இருக்க, எப்படி ‘மத ரீதியான ஒடுக்கு முறைக்கு ஆளாக வில்லை!’ என்கிறார் போன் முத்துக்குமார்?

        1. Avatar
          Vinayagam says:

          எண்பதுகளில் நடந்த கலவரங்களின்போது தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கை அகதிகள் ஏராளம். அதற்கு முன்னர் 70களில் நடந்த கலவரத்தில் போதும் வந்தவர்கள் பலர்.. எது எப்படி என்றாலும், கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். தில்லியிலும் ”கொழும்பு காலனியில். பல மாநிலங்களில் சிதறி வாழ்கிறார்கள்.

          அவர்கள் வந்த பத்தாண்டுகளில் நாம் பேசினால், இவர் சொல்வது போல, ”இரண்டாவது, போர் நின்று, புலிகள் அழித்தொழிக்கப்பட்ட சூழலில், வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் இலங்கை திரும்பவே விரும்புவார்கள்” என்று தாராளமாக சொல்லலாம்.

          நாற்பதாண்டுகளில் இரண்டாம் தலைமுறை உருவாகி, அவர்களும் மணமுடித்து மூன்றாம் தலைமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கும் வேளையில் ”இவர்கள் இலங்கைக்கே திரும்ப விரும்புகிறார்கள்!” என்று எப்படி சொல்ல முடியும் ?

          வயதான பெற்றோரை, தாத்தா பாட்டியை, இங்கு வேலை செய்து வரும் தலைமுறைதானே காப்பாற்ற முடியும்? அத்தலைமுறை, தமிழ்நாட்டு வாழ்க்கையை, கலாசாரத்தை, பேச்சுமுறையை, (இலங்கைத்தமிழ் பேச்சு வராது) பல தொழில்களோடு வாழ்வதை திடீரென மாற்றி, திக்குத் தெரியாத இலங்கைக்கு போக விரும்புவார்களா? மாட்டார்கள். இதற்கு கணக்கெடுப்பே தேவை இல்லை. காமன் சென்ஸ் போதும்.

          ”இலங்கை அரசு என்ன செய்யும்? அங்கு வாழும் தமிழர் நிலை என்னவாகும் ?” இவை வீண் கேள்விகள். இங்கு வாழும் இலங்கை அகதிகள் பற்றி கேள்வியோடு இணைக்க முடியாது.

          அது இன்னொரு நாட்டு பிரசசினை. நம் நாட்டு மக்களைப் பற்றித்தான் நாம் பேசவேண்டும். இங்கு வாழும் அகதிகள் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும். அவர்கள் நாட்டை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். நம் நாட்டை நாம் கவனிப்போம் :-)

          அப்படியே ‘சிலர் போக விரும்புவார்கள்’ என நினைத்தால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ‘எவருக்கு வேண்டுமோ அவர் கேட்கட்டும் ! கேட்டால் கொடுக்கவும்’.

          ‘அவசரம் காட்டக்கூடாது’ என்கிறார்.

          நாற்பது ஆண்டுகளாக வாழும் மக்களை பற்றிய முடிவெடுக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ?

          1. Avatar
            பொன்.முத்துக்குமார் says:

            // ”இலங்கை அரசு என்ன செய்யும்? அங்கு வாழும் தமிழர் நிலை என்னவாகும் ?” இவை வீண் கேள்விகள். இங்கு வாழும் இலங்கை அகதிகள் பற்றி கேள்வியோடு இணைக்க முடியாது. //

            இல்லை, அவை தொடர்புடைய கேள்விகள். அவ்வளவு எளிதாக ‘அடுத்த நாட்டு பிரச்சினை’ என்று ஒதுக்கிவிடுமளவு கறுப்பு-வெள்ளை என்று பார்க்க இயலாது. நாம் இங்கு எடுக்கும் நடவடிக்கைக்கு அங்கே எதிர்வினை எழும் என்பது நிச்சயமான எதிர்பார்ப்பே.

            நான் சொன்னதும், விரும்பும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்பதே.

        2. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          ஆனால் அகமதியாக்களுக்கு இஸ்லாமே மதம், நபியே இறைதூதர். அப்படி இருக்கையில் அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறை மதவாத ஒடுக்குமுறை அல்ல. ஒரு உதாரணத்துக்கு வட்டார தெய்வங்களை (சிறு தெய்வங்கள்) வணங்கும் இந்துக்களை ‘நீங்கள் சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வங்களை வணங்கினால்தான் இந்து’ என்று ஒடுக்கினால் அது எப்படி மதவாத ஒடுக்குமுறை இல்லையோ அப்படி.

          மற்றபடி, எனது பெயர் ‘போன்.முத்துக்குமார்’ அல்ல, ‘பொன்.முத்துக்குமார்’

          1. Avatar
            Vinayagam says:

            அஹமதியாக்களுக்கு இசுலாமே மதம் என்பதில் இக்கருத்துக்கள் நமக்கிறாது. ஆனால் ஷன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் இருக்கிறதே ? பாகிஸ்தானில் ஷன்னிக்கள் பெரும்பான்மை. அரசும் அதே. அங்கு அஹமதியாக்கள் வன்கொடுமை செய்யப்படுவது, அவர்கள் தங்களை இசுலாமியர் எனக் குறிக்கொள்ளக் கூடாது, என்பதற்காகவே. Any doubt?

            கராய்ச்சியில் இனப்படுகொலைகள் அடிக்கடி நடக்கின்றன. இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த இசுலாமியருக்கும், பாகிஸ்தான் இசுலாமியருக்கும், இதுதான் மத வன்கொடுமை இல்லை. அஹமதியாக்கள் மேல் நடாத்தப்படும் வன்கொடுமைக்கு மதமே காரணம். It is surprising you don’t want to see the elephant in the room.

            இந்தியாவில் சிறுதெய்வ வழிபாட்டிநரை ஒதுக்கினால், அதுவும் மதவாத வன்கொடுமைthaan. இந்துமதம் அப்படி தடுப்பதில்லையாதலால், அப்படி நடக்காது.

            Ahmedias இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தால், நம்சட்டம் அவர்களை ஏற்காது. The new law won’t accept Indian Muslims also returning from Karachi to escape sectarian violence.

            போன் என்பது தட்டச்சு பிழை. I will use English to write your name Pon. Muthukumar. Ok?

  5. Avatar
    R.Raja says:

    I agree 100% with the author. Many Hindus are living in Gulf for 30 to 40 years and they never get right to citizenship. Every country has its right to protect itself.

    1. Avatar
      Vinayagam says:

      Gulf counturies are Islamic countnes like Pakistan, where the State religion is Islam. They have Constitutions under which people, who are followers of other religions, won’t get citizenship however long they have lived there. So, first change the Indian Constitution to make Hinduism its State religion and the people following other religions in India, won’t get the same rights as Hindus. As long as India has a secular Constitution, you cannot compare India with Gulf countries or Pakistan.

    2. Avatar
      Vinayagam says:

      ”Every country has its right to protect itself.”

      Yes, I agree with you that every country has its right to protect itself.

      An Islamic Republic has to protect its religion from being swamped by other religious people.

      A secular republic has its right to proect its secularism from being swamped by a majoritarian evil designs and destruction of secular fabric.

      India, having a Secular and Socialist Constitution, should protect its secularism.

      1. Avatar
        Dr Rama Krishnan says:

        Bull dust. Secularism is an alien Abhramic religious concept that was illegally brought on by Indra Gandhi during emergency. CAA is about giving citizenship to long suffering INDIAN Hindus from Sharia enforcing Islamic countries. Take your secularism to Pakistan where Hindu marriages are not even recognised.

        1. Avatar
          Vinayagam says:

          Secularism, may be, or may not be, (I don’t know) an alien concept. But it is on the first page of the Indian Constitution.

          If you don’t accept or respect the Indian Constitution, it is you who should go to any other country whose Constitution is liked by you. Or, go to streets and agitate for deletion of the words, ”Secular and socialist democratic republic” from the Constitution.

          As long as these words are enshrined in the Constitution, repeat, as long as these words are enshrined in the Constitution, you ought to respect and abide by them.

          Can you say a few words about the main theme of the article: ”the protest against CAA (It is now CAB) is rooted only in hatred of Hindus?

          It is a big fat lie, according to me. According to you….?

  6. Avatar
    suvanappiriyan says:

    தினம் தினம் தீண்டாமை கொடுமையால் புழுங்கிக் கொண்டிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு விடிவை தந்தால் நன்றாக இருக்கும். அவர்கள் இஸ்லாத்தை நோக்கி ஓடி விடாமல் தடுக்கவே இந்த சட்டம். :-)

  7. Avatar
    Murugadoss K says:

    இவர்களுடைய இந்த சட்டம் ஏற்புடையதாக இருந்தாலும் ஏன் எதையுமே வெளிப்படையாக விவாதிக்க தயாரில்லை? பண்ணையார் மனப்பான்மையுடன் செயல்படுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? எதையுமே விவாதிக்க தயாரில்லை என்றால் இவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை புரிந்தே செய்கிறார்கள் என்று அர்த்தம்!

  8. Avatar
    Vinayagam says:

    //நாம் இங்கு எடுக்கும் நடவடிக்கைக்கு அங்கே எதிர்வினை எழும் என்பது நிச்சயமான எதிர்பார்ப்பே.//

    தேவையில்லா எதிர்பார்ப்பு.

    பிறநாட்டில் என்ன வினை உண்டாகும் என்று பார்த்து, இந்தியாவில் எந்த சட்டமும் உருவாக்க முடியாது. இப்போது போடப்பட்ட சட்டத்தை வெளிநாடுகள் சில எதிர்ப்புகுரல் எழுப்ப, இந்திய அமைச்சர், ;எங்க நாட்டு உள்விவகாரம் உங்களுக்கு வேண்டாம்!’ என்றல்லவா சொன்னார் ? மேலும், பங்களேடேஷுக்கும் இந்தியாவுக்கும் உறவு பிரச்சினையாகும் என்று தெரிந்தேதானே போடப்பட்டது?

    பல அரசியல் விமர்சகர்கள் உலக அளவில் நம் நாடு பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தும் இச்சட்டம் போடப்பட்டது அல்லவா ? என்ன தெரிகிறது? இந்திய அரசும் நம்புவது இந்த ஆங்கிலப் பழமொழியைத்தான். He who pleases everybody, pleases nobody :-) International diplomacy imitates basic human conduct.

    அப்படியே இலங்கைத் தமிழர் மேல் கரிசனம் இருந்தால், முதலில் உள்நாட்டு விவகாரங்களை தீர்த்துவிட்டு அங்கே போகலாம். நாளொன்றும் பொழுதொன்றுமாக ஏராளம் பிரச்சினைகள் !

    யார் தடுத்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *