தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 செப்டம்பர் 2020

குழந்தைகளும் மீன்களும்

கு.அழகர்சாமி

Spread the love

கு. அழகர்சாமி

(1)

கண்ணாடித் தொட்டிக்குள் நீரில்

கலர் கலராய் நீந்தும் மீன்கள்

கண்டதும் கல கலவென்று

குதித்துத் துள்ளும்

நிலம் துள்ள

குட்டிக் குட்டி

மீன்கள்-

குழந்தைகள்!

(2)

தூண்டிலில் பிடிபட்ட மீன்

துள்ளி விழும்

தரையில்.

துடி துடிக்கும்;

துவளும்.

மெல்ல

அடங்கும்.

மெதுவாய்க் குழந்தை

தொடும்-

மூடிய

விழிகள் திறந்து-

தரை மீது கடைசியாய்த் துள்ளி

மலங்க நோக்கும் குழந்தையின்

விழிக் கடலில்

கடைசியாய்

நீந்தும்

மீன்.

Series Navigationகள்ளா, வா, புலியைக்குத்துதிருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020

Leave a Comment

Archives