தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

உன் இரவு

ராசை நேத்திரன்

Spread the love

என் இரவுகளும்
உன் இரவுகளும்
நம் காதல் கனவுகள்
சொல்லியே கரைகின்றன…

கை கூப்பி காதல் சொல்ல
நான் தயார் நீ என்னுடைய
காதல் கடவுள்
என்பதால்…

நீண்ட இரவுகள் சில
நேரம் கொடியது..
உன் கனவுகள் இல்லாமல்
என் இமைகள் வறண்டு
விடுவதால்…

மார்கழி குளிரும் சில நேரம்
காதல் கனவுகள் சொல்கிறது
இருக்கமாய் போத்தி கொள்ளும்
என் போர்வை நீ ஆகி போவதால்


ராசை நேத்திரன்

Series Navigationசித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்கனவுகளின் விடியற்காலை

Leave a Comment

Archives