தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

31 மே 2020

நெம்பு கோல்

Spread the love

 மீனாட்சி சுந்தரமூர்த்தி.                            

                                 

பனியரசி பதித்த பளிங்குக்கல்

சாலையில்

வழுக்கி வந்து நின்றது

மஞ்சள் பேருந்து.

லைலாவும் எங்கள் குட்டிச்

செல்லமும்

முகம் திருப்பிக் கொண்டு

இறங்கினார்கள்.

வீடு வரும்வரை அமைதி,

சண்டையா?

‘ஆமாம்’

‘ஏனம்மா’

‘காலையில் பேருந்தில் லைலா

ஷீலாவிடம் (தெலுங்கு)

‘அமெரிக்கர்கள் சிறந்தவர்கள்

இந்தியர்கள்

படுமோசம்’ என்றாள்.

‘இது தவறு எல்லாரும் சமம்’

என்றேன் நான்.

‘இல்லவே இல்லை’ என்றாள் அவள்.

அப்புறம்?

‘பள்ளி சென்றபின் பிரின்சி

அறைக்குச் சென்று

நடந்தது சொல்லி

நான்

சென்றேன் வகுப்பு.’

மூவரிடமும் நடந்தது விசாரணை

சொல்லவில்லை

அப்படி என்றாள்,

வாயே திறக்கவில்லை ஷீலா.

‘பேருந்தில் உள்ள காணொளி

சொல்லும்

உண்மை,எல்லோரும் இங்கு சமம்,

உயர்வு தாழ்வு

பேசுவது குற்றம்’

எச்சரித்து

அனுப்பினாள் தலைமை.

இது நேற்று,

இன்று

வண்ணம் தீட்டிய ஒட்டகச் சிவிங்கி

ஏந்தி

‘லைலாவிற்குப்

பிடிக்கும்’ ஓடினாள்.

விளையாடி

மீண்டவள் கரத்தில்

பனிக்கரடி

படமும்,’மன்னிப்பாயா’ என்ற

லைலாவின்

கையெழுத்தும் 

Series Navigationகைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது?திருப்பூர் சக்தி விருது 2020

Leave a Comment

Archives