தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

எனக்கு எதிர்கவிதை முகம்

Spread the love

நந்தாகுமாரன்

ஒரு எதிர்கவிதையின் விஷமத்தனம்
உங்களுக்கு அவ்வளவு எளிதில்
புரிந்துவிடலாகாது
அதன் உள்மூச்சு
உங்களை மோப்பம் பிடிக்கும் போதே
அதன் வெளிமுச்சு
நெருப்பு கக்கத் தயாராவதைக்
கண்டுபிடித்தாலும்
கண்டு கொள்ளாதீர்கள்
அதன் குதர்கமும் குரூரமும்
உங்களைப் பிடித்துக் கடித்தாலும் சரி
அமைதியாக இருங்கள்
உங்களுக்குத் தான் எதுவுமே ஆகாதே
நீங்கள் தான் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவைதடுப்பூசி போட்டிருக்கிறீர்களே
ஒரு கவிதையைப் போன்றே
ஒரு எதிர்கவிதையின் ஒவ்வொரு சொல்லும்
ரூபமோட்சம் அடையத் துடிக்கும்
காமரோபோ தான்
என்பதை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள்
இப்போதைக்கு
ட்ரோன்களுக்கு இருக்கும் வானம் கூடவா
பறவைகளுக்குக் கிடைக்காது
என்ற கேள்வியைக் கேட்கத் தான் தோன்றும்
என்ன செய்ய
முகூர்த்தத்திற்கு நாழியாகும் வரை
நீங்கள் காத்திருக்கத் தான் வேண்டும்

–  நந்தாகுமாரன்

Series Navigationஎழுத்தாளனும் காய்கறியும்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்

Leave a Comment

Archives