தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்

சின்னக்கருப்பன்

Spread the love


சின்னக்கருப்பன்.

ஜூலை 2020இல் ஹகியா சோபியா என்ற மியூசியத்தை மீண்டும் மசூதியாக  துருக்கியில் அறிவித்திருக்கிறார்கள்.

1934ஆம் ஆண்டு,  துருக்கிய குடியரசு, கமால் அடாதுர்க் அவர்கள் தலைமையில் இருந்தபோது, இந்த மசூதி, ஒரு மியூஸியமாக அறிவிக்கப்பட்டது.  துருக்கிய சட்டப்படியும் ஒத்தோமான் சட்டப்படியும், ஹாகியா சோபியா இருக்குமிடம், ஒரு வக்ப் நிலம் என்பதால், அவ்வாறு அந்த மசூதியை மியூஸியமாக அறிவித்தது தவறு என்று வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் 1934ஆம் வருடத்தில் செய்த மாற்றம் செல்லாது என்று அறிவித்தது.

பின்னர் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் டாயிப் எர்டோகன் ஹாகியா சோபியாவை மசூதியாக அறிவித்தார்.  

ஹாகியா சோபியா மசூதிக்குள் தொழுகை நடத்தும் துருக்கியர்

துருக்கிய எதிர்கட்சியினர் இதனை எதிர்த்திருக்கிறார்கள்.


இதற்கு முன்னாள் அந்த ஹாகியா சோபியா ஒரு சர்ச்சாக இருந்தது.

Sultan Mehmed II the Conqueror, by Gentile Bellini

1453ஆம் ஆண்டு,  மெஹ்மூது என்னும் துருக்கிய அரசர்   அன்றைய கான்ஸ்டாண்டினோபிள் என்ற பைஸாந்திய நகரத்தை கைப்பற்றினார். இது கான்ஸ்டாண்டிநோபிளின் வீழ்ச்சி (The Fall of Constantinople:  29 May 1453) என்ற முக்கியத்துவமான நாளாக குறிப்பிடப்படுகிறது.

இந்த சர்ச்சிலேயே கிழக்கு பைஸாந்திய ரோம பேரரசின் பேரரசர்கள் முடிசூட்டிகொள்வது வழக்கம். அதனாலேயே இந்த சர்ச் முக்கியத்துவம் அடைகிறது.

நகரத்தின் பெரும்பாலான  படையினரால் கொள்ளையடிக்கப்பட்டது. சாதாரண மக்களின் வீடுகளும் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள் குழந்தைகள் பாலுறவு பலாத்காரம் செய்யப்பட்டனர். கன்னியாஸ்திரி மடத்தில் இருந்தவர்கள் பாலுறவு பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.   அதிகாரப்பூர்வமாக மன்னர் கான்ஸ்டாண்டைனுக்கு மகள் மகன் இல்லாவிடினும், அவரது  அண்ணன் மகன்கள் இருந்தனர். இவர்கள்  முஸ்லீமாக மதம் மாற்றம் செய்விக்கப்பட்டனர்.  இவர்கள் இந்த துருக்கிய அரசரின் கீழ் பணியாற்றினர்.

மூன்று நாட்களுக்கு பின்னர் அமைதி திரும்பியது. ஹாகியா சோஃபியா சர்ச் மசூதியாக மாற்றப்பட்டது. அதன் ஓவியங்கள் மறைக்கப்பட்டன.  

கான்ஸ்டாண்டிநோபிள் என்ற நகரத்தின் பெயர் இஸ்தான்புல் என்று அழைக்கப்ப்படலாயிற்று.

**

கிபி 532இல் இந்த சர்ச்சை மறு சீராய்வு செய்து கட்டியது முதலாம் ஜஸ்டினியன்  என்ற ரோம பேரரசர்.    இந்த சர்ச்சை கட்ட கிரேக்க கட்டிட நிபுணர்கள் மிலேடஸை சேர்ந்த இசிடோர் , ட்ரெல்லெஸை சேர்ந்த அந்தேமியஸ் ஆகியோர்.  532இல் நிகா கலவரத்தில் ஏறத்தாழ முழு காண்ஸ்டாண்டிநோபிள் நகரமும் தீக்கிரையாக்கப்பட்ட பின்னால், அதில் சேதமடைந்த இந்த கட்டிடத்தை சீரமைத்து கட்ட இவர்கள் பணிக்கப்பட்டனர்.

இவர்கள் Phokas போகாஸ் என்பவரின் நிர்வாகத்தின் கீழ் இந்த கட்டிடத்தை கட்டினர். இவர்கள் அனைவருமே கிறிஸ்துவரல்லாதவர்கள். இதற்கு முன்னர் இந்த இடத்தில் சோபியா என்னும் பாகன் தெய்வத்துக்கு கோவில் இருந்திருக்கிறது என்றறியப்படுகிறது.

https://en.wikipedia.org/wiki/Sophia_(wisdom)

சோபியா sophia என்ற கிரேக்க மொழி வார்த்தைக்கு , அறிவு, ஞானம் என்று பொருள். ஸோபியா என்ற தெய்வத்தை கிரேக்க பாகன் (கிறிஸ்துவரல்லாதவர்கள்) சரஸ்வதியை வணங்குவது போல  தெய்வமாக வணங்கினார்கள். இந்த கோவில் முன்னர் ஒரு சரஸ்வதி கோவிலாக இருந்திருக்கலாம் என்றும், இந்த கட்டட நிபுணர்கள் அங்கே தங்களது சோபியாவையே கண்டார்கள் என்றும் கருதலாம்.

இந்த கட்டிடம் பிறகு கிறிஸ்துவின் ஞானமாக உருவகிக்கப்பட்டு கிறிஸ்துவின் ஞானத்துக்கான கோவிலாக கட்டப்பட்டது. ஆகவேதான் ஹாகியா சோஃபியா.

**
இந்த கட்டிடத்தை கட்டிய போகாஸ் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்ததற்காக கிறிஸ்துவ மிஷனரிகளால் சித்திரவதை செய்யப்பட்டார். அந்த சித்திரவதை தாங்க முடியாமல் போகாஸ் தற்கொலை செய்துகொண்டார்.

**

இந்த மசூதியை மீண்டும் மியூஸியமாக மாற்றவேண்டும் என்றோ அல்லது சர்ச்சாக மாற்றவேண்டும் என்றோ கிறிஸ்துவர்கள் நகைப்புக்கிடமாக போராடிகொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை  பாபர் மசூதி கட்டிடத்தை இடித்துவிட்டு அங்கே பிரிட்டிஷ்காரர்கள் சர்ச் கட்டியிருந்தால், அப்போது,  முஸ்லீம்கள் அங்கே மசூதியை திரும்பி கட்ட வேண்டும் என்று கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் சண்டை போட்டுகொள்வது போன்றது.

அங்கே உண்மையில் ராம ஜன்ம பூமி கோவில் கட்டப்பட வேண்டியது எப்படி நியாயமானதோ அதே போல, ஹாகியா சோஃபியா மீண்டும் சோஃபியா ( சரஸ்வதி ) கோவிலாக ஆவதே நியாயமானது என்று நான் கருதுகிறேன்

Series Navigationவவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.

2 Comments for “ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்”

 • BSV says:

  //இந்த மசூதியை மீண்டும் மியூஸியமாக மாற்றவேண்டும் என்றோ அல்லது சர்ச்சாக மாற்றவேண்டும் என்றோ கிறிஸ்துவர்கள் நகைப்புக்கிடமாக போராடிகொண்டிருக்கிறார்கள்.//

  உலக நாடுகள் பலவும் அதை ம்யூசியம் ஆகவே இருக்க வேண்டுமென கேட்டதாகத்தான் தகவல். பல கட்டுரைகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. கிருத்துவர்கள் எவரும் அதை தேவாலயமாக மாற்ற வேண்டுமெனக் கேட்கவில்லை. ம்யூசியமாக இருப்பதை மாற்ற வேண்டாமே எனத்தான் கேட்டிருக்கிறார்கள். இதில் எங்கே நகைப்புக்கு இடமிருக்கிறது?

  ஒரு நாட்டில் உள்ள பொருளை எப்படி பயனபடுத்த வேண்டுமெனப்து அந்நாட்டினரின் உரிமையென்றாலும் இந்த மசூதி ஒரு புராதனச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு போற்றப்பட்டு வருகிறது. அதன் தன்மையை மாற்றும்போது, உலகம் கவலைப்படத்தான் செய்ய வேண்டும். தாலிபான் பாமியான் புத்தாவை அழித்த போது உலகம் கண்ணீர் விட்டது. பாமியான் புத்தாவை கூகில் படத்தில் பார்த்தால் உங்களுக்கும் கண்ணீர் வரும்.

  பழைய சின்னங்களை அழித்து அதன் மேல் புதிதாகக் கட்டுவது வளர்ச்சியடைந்த நாகரிகமன்று; மூடர்களின் மூர்க்கத்தனம்.

 • Dr Rama Krishnan says:

  பழைய சின்னங்களை அழித்து அதன் மேல் புதிதாகக் கட்டுவது வளர்ச்சியடைந்த நாகரிகமன்று; மூடர்களின் மூர்க்கத்தனம்.
  Indirect needling by this “secularist”.( !!!) He means Ram Janma Bhomi temple!


Leave a Comment

Archives