கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)

கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)
This entry is part 1 of 23 in the series 26 ஜூலை 2020

கேஎஃப்சி என்னும் அமெரிக்க விரை உணவகம் அனைவரும் அறிந்த ஒரு உணவகம்.

இந்த உணவகத்தில் கோழிவறுவல் மிகவும் பிரசித்தம். இந்த கோழி துண்டுகள் மாவில் பிரட்டப்பட்டு எண்ணெயில் வறுக்கப்பட்டு வாளி வாளியாக விற்கப்படுகின்றன.

தற்போது இந்த அமெரிக்க நிறுவனம், கோழி இல்லாமலேயே கோழி வறுவலை தயாரித்துவிற்க போவதாக செய்தி அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இதில் என்ன விஷேசம் என்றால், இவை கோழி மாமிசம் போன்று வடிவமைக்கப்பட்ட சோயா அல்லது தாவர பொருட்களால் உருவான போலி மாமிசம் அல்ல.

இவை கோழி மாமிசம் தான். ஆனால், உயிருள்ள கோழியால் உருவாக்கப்பட்ட மாமிசம் அல்ல. இவை கோழியின் உடலிலிருந்து அதன் சதை செல்களை சிறிதளவு எடுத்து, தொழிற்சாலை பாத்திரங்களில் வளர்த்து, அவற்றை முப்பரிமாண பிரிண்டர் மூலம் கொழி வறுவல் போல வடிவத்தில் செதுக்கி பிறகு வறுத்து கொடுக்க திட்டம்.

இந்த “எதிர்கால கறியை” உருவாக்க ரஷிய நாட்டின் கம்பெனியான 3d printing solutions என்ற கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது இந்த அமெரிக்க நிறுவனம்.

இந்த முறையில் கோழி கறியை உருவாக்குவது, பெரும் கோழி பண்ணைகளை நிர்வகிக்கும் வேலையிலிருந்து விடுதலையை தரும் என்று இது கருதுகிறது. மேலும் எந்த கோழியையும் கொல்லவும் வேண்டாம். ஏராளமான கோழிப்பண்ணைகளாலும் அதன் கழிவுகளாலும் சுற்றுச்சூழல் கெடுவதையும் தடுக்கலாம் என்று கேஎஃப்சி நிறுவனம் கருதுகிறது.

இவ்வாறு தொழிற்சாலை மூலம் கோழிக்கறியை உற்பத்தி செய்வது எந்த விலங்கையும் பாதிக்காது என்று தெரிவிக்கிறது.

“தற்போது முப்பரிமாணம் பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவ துறையில் பல சாதனைகளை செய்துள்ளார்கள். இது உணவு உற்பத்திக்கும் பெருமளவு பயன்படும்” என்று யூசேஃப் கேசுவானி என்னும் இந்த முப்பரிமாண பிரிண்டிங் நிறுவனத்தின் துணை ஸ்தாபகர் தெரிவிக்கிறார்.

இன்னமும் இந்த எதிர்கால கோழிக்கறியை உற்பத்தி செய்து யாருக்கும் கொடுக்கவில்லை. இருந்தாலும், இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் என்று கருதுகிறார்கள்.

தற்போது இப்படிப்பட்ட முப்பரிமாண பிரிண்டிங் முறையில் உருவாக்கப்படும் கறிகள் தயாரிப்பு மிகவும் தாமதமாகவும், கடும் உழைப்பு தேவைப்படுபவையாகவும் இருக்கின்றன. இருப்பினும் இந்த வருட கடைசிக்குள்ளாக மாஸ்கோவில் இந்த செயற்கையான இயற்கையான கோழிக்கறி விற்பனையை ஆரம்பிக்க இருப்பதாக கேஎஃப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Series Navigationஇருமை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *