க.நா.சு கவிதைகள்

author
2 minutes, 9 seconds Read
This entry is part 17 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020


அழகியசிங்கர்


    க.நா. சுப்ரமணியம் 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிறந்தார்.  ஒரு குறிப்பு வலங்கைமானில் பிறந்தார் என்கிறது.  இன்னொரு குறிப்பு சுவாமிமலையில் பிறந்தார் என்கிறது.

    16.12.1988 அன்று அவர் புதுதில்லியில் அமரரானார்.  சென்னையிலிருந்து தில்லிக்குப் போன க.நா.சு பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்தார். தில்லிக்கே குடிபோன க.நா.சு சென்னைக்கு வந்தபோது அவரை ஒரு பத்திரிகையாளர் காரணத்தைக் கேட்டார்.

    தமிழ்நாட்டில் செத்துப் போகலாமென்று வந்தேன் என்று கூறினார். ஆனால் அவர் தில்லியில்தான் இறந்தார்.  க.நா,சுவின் பூத உடலுக்கு ஒரு பெரும் அரசியல் தலைவர் மரியாதை செய்தார்.

    அவர் எழுதிய முதல் கவிதை மணப்பெண் 1939ல் சூறாவளி என்ற இதழில் வெளிவந்தது.  அதற்குப் பிறகு 20 ஆண்டுகள் கவிதைகள் எதுவும் வெளியிடவில்லை.   1958ல் சரஸ்வதியில் மின்னல் கீற்று என்ற கவிதை எழுதியிருக்கிறார் இதைத் தொடர்ந்து 1959ல் எழுத்துவிலும் 1972ல் கசடதபறவிலும் எழுதினார்.  இடையில் அவர் நடத்தி  வந்த இலக்கிய வட்டத்தில் சில கவிதைகள் வெளியிட்டார்.  நாற்றங்கால் என்ற தொகுப்பிற்கு இரண்டு கவிதைகள் தந்தார்.

    1985ல் கவிதை எழுத நினைப்பவன் ஒரு விதத்தில் அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவன்தான்.  கவிதை பத்திரிகைத் துணுக்குகளாகவும், அரசியல் கமெண்ட்களாகவும், சினிமா ரெட்டை அர்த்தங்களாகவும் உருப்பெற்றபின் கவிதை எழுத நினைப்பது ஒருவிதத்தில் தவறு என்று சொல்ல  வேண்டும்.

    புதுக்கவிதையின் முக்கிய அம்சங்கள் யாப்பின்மை மட்டுமல்ல – வசனத்தின் முக்கிய அம்சங்களான வேகம், வலு, நேர்மை என்பது க.நா.சுவின் கட்சி.

    யாப்பு எதுவை மோனை இருப்பது தவறில்லை. நல்ல கவிதைக்கு முட்டுக்கட்டை அதிலில்லை. இன்றைய வாழ்க்கையின் சிக்கலைப் பிரதிபலிக்காமல், இன்றையச் சூழலின் குழப்பத்தை எடுத்துக் காட்டாமல், பழமையான மனப்பான்மையே, புதுக்கவிதை பிறப்பதற்குத் தடையாக உள்ளது. யாப்பு அமைதியுள்ள கவிதையும் புதுக் கவிதையாக அமையலாம் என்று சொன்னால் அது மிகையாகப்படலாம். ஆனால் தளை தட்டுகிற சீர் அற்ற கவிதைதான் புதுக் கவிதை என்பது சரியல்ல. பழைய தாமரையையும் சந்திரனையும், உருவகங்களையும் புதுமுறையில் உபயோகித்து விட்டதனால் மட்டும் புதுக்கவிதை பிறக்காது.

    இறப்பதற்கு ஏழாண்டுகள் முன்பு ஞானக்கூத்தனுக்கு எழுதிய கடிதத்தில் கூடக் கவிதை பற்றி எழுதினார்.  இதில் முக்கியமான விஷயமென்னவென்றால் கவிதையில் படிமங்கள் இன்றியமையாதவை என்று அவர் நினைக்கவில்லை.

    இதோ அந்தக் கடிதம்.

    எனக்கு என்னமோ இந்தப் படிமங்கள் விஷயம் முக்கியமான விஷயமாகப் படவில்லை…மொழி என்பதே மொத்தத்தில் ஒரு படிம வரிசைதான்.  இதைத் தனியாகக் கவிதையின் மேல் ஏற்றிவைத்துத் தேடிப்பிடித்து வளையாததை வளைத்தும் படிமங்களை உற்பத்தி செய்யும்போது கவி தன் கவிதையில் இலக்குத் தவறிவிடக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.  படிமத்தையும் அணி அலங்காரங்களில் ஒன்றாக, அதன் உரிய இடத்தில் முக்கியமானதாக ஏற்றுக்கொள்ளலாமே தவிர மற்றபடி அதற்குமேல் அந்தஸ்து இருப்பதாக, முக்கியமாகக் கவிதைகளில் எனக்குத் தெரியவில்லை.         –   க.நா.சு கடிதம் 1981

    க.நா.சு தொடர்ந்து படைப்புகளில் இந்தியத் தன்மை இருக்க வேண்டுமென்று வஙூயுறுத்தி வந்தார். அவர் கோட்பாடுகளில் இந்திய உருவம் கொடுத்தல் என்பது முக்கியமானது.
  சூறாவளியில் 1939ல்க.நா.சு எழுதிய முதல் கவிதை மணப்பெண் 1939ம் ஆண்டு வெளியாயிற்று. இந்தக் கவிதை இளையோர் காதலைப் பற்றி இல்லாமல், மணவறைக்குப் போகும்

தம்பதியர்களை வாழ்த்துவதாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது என்று ஞானக்கூத்தன் குறிப்பிடுகிறார்.

    இதோ அந்தக் கவிதையின் சில பகுதியை அளிக்கிறேன் இங்கு அளிக்கிறேன்.

    திரையிட்டு மறைத்த முகமும்
    பெண்மை ஏசும் பட்டாடையும்
    மறைத்து வைக்கும்
    உண்மை அழியாவண்ணம் –
    அழகி என்று
    அவளைஅறிவதெப்படி
    
    அவள் அழகி
    ஆடை உடுத்தி
    அழகு படுத்தி
    அலங்கரித்து
    மணமேடை யேற்றிக்
    கண்டின்புற்றது
    நாங்கள்
    அவள் அழகைத்
    திரையிட்டு மூடுவானேன்?

இந்தக் கவிதை மரபிலிருந்து சிறிய விலகல் என்றாலும் க.நா.சுவின்உள்ளவற்றில் சிறந்ததைத் தேடும் இயல்பையும் காட்டுகிறது என்கிறார் ஞானக்கூத்தன்.

    ஒருவர் க.நா.சு கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தால் என்ன இதெல்லாம் கவிதையா? நீளமான வசனத்தைத் துண்டு துண்டாகப் போட்டிருக்கிறாரே என்று தோன்றும்.  ஆனால் உண்மையில் அவருடைய கவிதையை உள்வாங்கி வாசித்தால் அது ஒரு பார்வைக்கு வசனத்தைக் குவித்தது போல் தோன்றினாலும் கவிதையை வேறு விதமாக எழுதி உள்ளாரென்று தோன்றும்.

    இன்னும் சில கவிதைகளை உதாரணம் காட்டி அவர் மேதைமையை உணரலாம்.

    கவிதைக்கு முன்னுரையோ பின்னுரையோ அல்லது வியாக்கியான விரிவுரைகளோ அநாவசியம் என்கிறார்.

    1985ல் கவிதை எழுத நினைப்பவன் ஒரு விதத்தில் அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவன்தான்.  கவிதை பத்திரிகைத் துணுக்குகளாகவும், அரசியல் கமெண்ட்களாகவும், சினிமா ரெட்டை அர்த்தங்களாகவும் உருப்பெற்றபின் கவிதை எழுத நினைப்பது ஒரு விதத்தில் தவறு என்று சொல்கிறார்.

    கவிதை முயற்சி தவிர்க்க முடியாததும்.  ஒவ்வொருவரும் கவிதைகளை எழுதுவதோடல்லாமல் புத்தகமாகப்போடுவதையும் தவிர்க்க முடியாதது என்கிறார்.

    கநாசு புதுக்கவிதை எழுதுவதில் அபார நம்பிக்கை இருந்தது. நிஜமாகவே அது கவிதையாக இருப்பதோடல்லாமல் வசனத்தின் பல அம்சங்களைக் கொண்டதாக, அடைமொழிகளையும் படிமங்களையும் தேடிஓடாததாக இருக்க வேண்டும். உணர்வு தாக்கலும் அறிவு தாக்கலும் கலந்து இருந்தால்தான் கவிதை புதுக்கவிதையாக மாறுகிறது என்கிறார்

    க.நா.சு கவிதைகளை யார் எடுத்து வாசித்தாலும் வாசிப்பவருக்கு தானும் இதுமாதிரி கவிதைகளை எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுமென்பதற்குச் சந்தேகம் இல்லை.

    இதற்குக் காரணம் அவர் கவிதையை அவ்வளவு சுலபமாக எழுதி விடுகிறார்.

    உதாரணமாகப் பயணம் என்ற கவிதையைப் பார்ப்போம்.

    “அவசரமென்றாலும் கூட
    நான்
    ஏரோப்ளேனிலோ
    எக்ஸ்பிரஸ் ரெயிலிலோ
    பயணம் போவதை
    விரும்ப மாட்டேன்
    கட்டுச் சாதம்
    கட்டிக்கொண்டு
    போகும் வழியெலாம்
    சண்டைச் சச்சரவுகள்
    சல்லாபங்கள்
    தொடர்ந்து வர
    பயணம்
    செய்வதே
    பயணம்.
    எந்தப் பயணமும்
    பதினாலு ஆண்டுகளுக்குக்
    குறைந்ததாக
    இருக்கக்கூடாது
    அப்போதுதான்
    ராமன்
    அயோத்தி
    திரும்ப இயலும்
    
    ஆளால் இம்மாதிரியான கவிதைகளை நாம் படித்துத்தான் உணர முடியுமே தவிர ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது.
ஆனால் வரிகளை ஒப்பிக்க முடியாது.  கவிதை இதைப்பற்றித்தான் என்று குறிப்பால் சொல்லலாம்.

    க.நா.சு கவிதை இப்படித்தான் எழுத வேண்டுமென்ற தீர்மானத்துடன் எழுதினார்.  ஆனால் அவர் காலத்தில் வாழ்ந்த ந.பிச்சமூர்த்தியோ கவிதை எழுதுவதில் ஒருவித குழப்பம் ஏற்பட்டது  மரபு கவிதையாகவும் புதுக்கவிதையாகவும் கலந்து எழுதினார்.

    இப்போது சிலர் எதிர்கவிதை எதிர்கவிதை என்று எதையெதையோ எழுதுகிறார்கள்.  ஆனால் க.நா.சுதான் உண்மையில் எதிர் கவிதையாளர்.  
    அவர் கவிதைகளை ஒருவர் வாசித்தாரென்றால் இந்த உண்மை பளிச்சிடும். 

    உதாரணமாக கி.வா.ஜ என்ற தலைப்பில் அவர் கவிதையை வாசிப்போம்.

    கி.வா.ஜ
    கி.வா.ஜவை
    நான் இலக்கிய அளவில்
    மதிக்க மாட்டேன்.  அவருக்குத் 

    தெரிந்தது எனக்குத் தெரியாது
    என்று ஏற்றுக் கொள்கிறேன்
    ஆனால் அவருக்கு நான்
    கடன்பட்டவன். 1938ல்
    எனக்கு ராயர் கபேயை
    கச்சேரித் தெரு மைலாப்பூரில்
    காட்டித்தந்தார. இப்போதும்
    பலசமயம் திருப்தியாக ரவா தோசை சாப்பிடப்
    போய் வருகிறேன்.

    நிக்னர் பர்ரா எதிர் கவிதை உருவாவதற்கு முக்கியக்காரணமானவர்.  கவிதை என்பது உரைநடையாக இருக்க வேண்டும்.  அத்தோட அல்லாமல் கவிதை ஊடாடும் மானிடப் பிரச்சினைகளை எந்தவித ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படுத்தும். 

    க.நா.சு வின் கவிதைகள் உரைநடையில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதோடல்லாம் மானிடப் பிரச்சினைகளை ஊடுருவிப் பார்க்கின்றன.

    நிக்னர் பர்ரா கவிதைகளை க.நா.சு படித்திருப்பாரா என்று தெரியவில்லை.  கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது இது குறித்தும் ஒன்றும் சொல்லவில்லை.  க.நா.சுவின் இன்னொரு கவிதையை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

குருவும் சிஷ்யனும்

    கைநீட்டித் தலையில் வைத்து
    உபதேசம் செய்து முடித்த
    குருவை வணங்கி
    இடத்தமர்ந்த சிஷ்யனை
    
    ‘விளங்கிறறா’
    என்று குரு வினவ
    
    விளங்கிற்று
    என்று சிஷ்யன் கூற

    ‘என்ன விளங்கிற்று
    எனக்கும் சொல்’
    என்று சகபாடி கேட்டான்

    ‘குருவே சொல்வார்’
    என்று பதில் வந்தது

    க.நா.சு வின் கவிதைகளில் பல கவிதைகளை எதிர் கவிதைகளுக்கு உதாரணம் காட்ட முடியும்.
    தெரிந்தது எனக்குத் தெரியாது
    என்று ஏற்றுக் கொள்கிறேன்
    ஆனால் அவருக்கு நான்
    கடன்பட்டவன். 1938ல்
    எனக்கு ராயர் கபேயை
    கச்சேரித் தெரு மைலாப்பூரில்
    காட்டித்தந்தார. இப்போதும்
    பலசமயம் திருப்தியாக ரவா தோசை சாப்பிடப்
    போய் வருகிறேன்.

    நிக்னர் பர்ரா எதிர் கவிதை உருவாவதற்கு முக்கியக்காரணமானவர்.  கவிதை என்பது உரைநடையாக இருக்க வேண்டும்.  அத்தோட அல்லாமல் கவிதை ஊடாடும் மானிடப் பிரச்சினைகளை எந்தவித ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படுத்தும். 

    க.நா.சு வின் கவிதைகள் உரைநடையில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதோடல்லாம் மானிடப் பிரச்சினைகளை ஊடுருவிப் பார்க்கின்றன.

    நிக்னர் பர்ரா கவிதைகளை க.நா.சு படித்திருப்பாரா என்று தெரியவில்லை.  கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது இது குறித்தும் ஒன்றும் சொல்லவில்லை.  க.நா.சுவின் இன்னொரு கவிதையை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

குருவும் சிஷ்யனும்

    கைநீட்டித் தலையில் வைத்து
    உபதேசம் செய்து முடித்த
    குருவை வணங்கி
    இடத்தமர்ந்த சிஷ்யனை
    
    ‘விளங்கிறறா’
    என்று குரு வினவ
    
    விளங்கிற்று
    என்று சிஷ்யன் கூற

    ‘என்ன விளங்கிற்று
    எனக்கும் சொல்’
    என்று சகபாடி கேட்டான்

    ‘குருவே சொல்வார்’
    என்று பதில் வந்தது

    க.நா.சு வின் கவிதைகளில் பல கவிதைகளை எதிர் கவிதைகளுக்கு உதாரணம் காட்ட முடியும்.
    தெரிந்தது எனக்குத் தெரியாது
    என்று ஏற்றுக் கொள்கிறேன்
    ஆனால் அவருக்கு நான்
    கடன்பட்டவன். 1938ல்
    எனக்கு ராயர் கபேயை
    கச்சேரித் தெரு மைலாப்பூரில்
    காட்டித்தந்தார. இப்போதும்
    பலசமயம் திருப்தியாக ரவா தோசை சாப்பிடப்
    போய் வருகிறேன்.

    நிக்னர் பர்ரா எதிர் கவிதை உருவாவதற்கு முக்கியக்காரணமானவர்.  கவிதை என்பது உரைநடையாக இருக்க வேண்டும்.  அத்தோட அல்லாமல் கவிதை ஊடாடும் மானிடப் பிரச்சினைகளை எந்தவித ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படுத்தும். 

    க.நா.சு வின் கவிதைகள் உரைநடையில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதோடல்லாம் மானிடப் பிரச்சினைகளை ஊடுருவிப் பார்க்கின்றன.

    நிக்னர் பர்ரா கவிதைகளை க.நா.சு படித்திருப்பாரா என்று தெரியவில்லை.  கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது இது குறித்தும் ஒன்றும் சொல்லவில்லை.  க.நா.சுவின் இன்னொரு கவிதையை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

குருவும் சிஷ்யனும்

    கைநீட்டித் தலையில் வைத்து
    உபதேசம் செய்து முடித்த
    குருவை வணங்கி
    இடத்தமர்ந்த சிஷ்யனை
    
    ‘விளங்கிறறா’
    என்று குரு வினவ
    
    விளங்கிற்று
    என்று சிஷ்யன் கூற

    ‘என்ன விளங்கிற்று
    எனக்கும் சொல்’
    என்று சகபாடி கேட்டான்

    ‘குருவே சொல்வார்’
    என்று பதில் வந்தது

    க.நா.சு வின் கவிதைகளில் பல கவிதைகளை எதிர் கவிதைகளுக்கு உதாரணம் காட்ட முடியும்.
   




Series Navigationகட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *