தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

நிரந்தரமாக …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Spread the love

      

கொஞ்ச நேரம்

நடந்த பிறகு தெரிந்தது

அந்த வெளி

அது யாருமற்ற

சுடுமணல் பிரதேசம்

தனிமையின்

ஏராளமான கரங்கள் என்னைத்

தழுவி மகிழ்ந்தன

அங்கு பசுமைக்கு

முழுமையாகத்

தடை விதிக்கப்பட்டிருந்தது

எப்போதாவது

காற்று வரும்

நான் முற்றாக உறிஞ்சப்பட்டு

வீசி எறியப்பட்டேன்

காலம் என்னைக்

கரைத்து முடித்தது

இப்போது என் சுவடென

மணல்பரப்பில்

பாதாச்சுவடுகள் மட்டுமே

அந்த வெட்டவெளி மட்டும்

அப்படியே

நிரந்தரமாக …

       *****

Series Navigationகவிதைஆவலாதிக் கவிதைகள்

Leave a Comment

Archives