தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

2 மொழிபெயர்ப்புக் கவிதைகள்

Spread the love

வசந்ததீபன்

சந்த்ரகாந்த் தேவதாலே

(1) பெண்ணே ! வலி தாங்கு______________________________

உன்னிடம் மற்றும் அதிர்ஷ்டத்தில் அது இல்லை..மேலும் இருந்தது அது கற்களை உடைக்கும் நாள்..அந்த எல்லாவற்றிற்குப் பிறகுஇந்த நேரம் உன்னுடைய உடலில்பூமியின் கொந்தளிப்பு இருக்கிறது..புல் தரையின் மேல் படுத்தாய்…நீ ஒரு முழுமையான பெண்…கண்களை மூடிக் கொண்டுஉடலை பாறையாக ஏன் ஆக்கிக் கொண்டு இருக்கிறாய் ?
பெண்ணே ! நீ வலி தாங்குகிறாய்வாழ்க்கை முழுவதும் மலை சுமந்தாய் பிரச்சினை இல்லை உனக்குவலி தாங்குவது.
சீக்கிரம் செயலாற்று  மயக்கம் தெளிந்திடு இல்லையானால் அவனுடைய தலையின் மீது சண்டை விழும்தெரியவில்லை எவ்வளவு நேரம் கழித்து அழுதாயெனஅல்லது அழவும் இல்லையெனசிதைந்த கண்களால் பார்க்காதேமறந்து விடு பலவந்தமான இரவைஇருளின் எதிர்ப்பை மறந்து விடு பெண்ணே !
நினைவு கொள் வயலையும் நீருக்குமான உறவைஎல்லாவற்றையும் சகித்து வாழ்ந்த பிறகும்எத்தனை வலிகளை தாங்குகிறது பூமிஎந்த _ எந்த பகுதியில் எங்கே _ எங்கேஅப்போதோ பிறப்பெடுக்கின்றன முற்றிய தானியங்கள்தாங்கவில்லையென்றால்‌ காய்ந்து போகும் எல்லா பசுமையும்கரித்துண்டுகளாகும் வனம்கல்லாய் போகும் கர்ப்பப்பை வரையான நீர்.
நினைவு கொள்ளாதே உன் துக்கங்களை..வரும் நிம்மதியில்லாமை பூமியின்  உயிர்கள் மீது..ஆகாயம் பாதாளத்திலும் தொங்க முடியாது..இவ்வளவு இருக்கிறது பெண்ணினத்தின் துக்கம்பூமியின் எல்லாத் தண்ணீராலும்கழுவிட முடியாதுஇவ்வளவு இருக்கின்றன கண்ணீரின் காய்ந்த கறைகள்.
சீதா சொல்லி இருந்தாள் _ பிளந்திடு பூமியே…!தெரியாது எப்போது வரை போய்க் கொண்டிருக்கும் இந்த கதைபிறகும் நிற்கவில்லை உலகம்.
பெண்ணே ! வலி தாங்கு…கேள் பாயும் தண்ணீரின் சப்தத்தை..ஆமாம் ! அப்படித்தான் பார் மேலே பசிய இலைகளை..கேள் அவைகளின் அழுகையொலியை..அது இப்போதும் இருக்கிறதுவாழும் உனது தேகம்வீழும் பால்இரண்டு சிறிய உதடுகளுக்காக.
பெண்ணே ! வலி தாங்கு.
வசந்ததீபன்

🦀

(2) செய்முறை____________________

ஒரு நதியில் குளித்து விட்டு வருகிறேன்மற்றும் எப்போதும் எரியும் மைதானத்தைதூக்கியபடி ஓடுகிறேன் ஆகாயத்தின் பத்து துண்டுகளைஉயரே சுண்டி வீசுகிறேன்மேலும் ஒரே சாலையில்ஒரே நேரத்தில் ஒன்றாக சூரியனையும் இருளையும்கூப்பிடுகிறேன்.
கைகளில் இருக்கின்றன அர்த்தங்கள்பாதரஸத்தைப் போலமற்றும் மணலுக்குச் சமமான வார்த்தையைநான் நட விரும்புகிறேன்பாதரஸத்தின் மணலில்மற்றும் பிறகு மணலைஎனக்கு உள்ளாக…

வசந்ததீபன்

ஹிந்தியில் : சந்த்ரகாந்த் தேவதாலேதமிழில் : வசந்ததீபன்

சந்த்ரகாந்த் தேவதாலே________________________________
பிறப்பு : 07_11_1936இடம் : ஜெளல்க்கேடா , பைத்தூல் மாவட்டம் ( மத்தியப்பிரதேசம் )கல்வி : முதுகலைப் பட்டம் (ஹிந்தி )தொழில் : ஆசிரியர்வெளியான கவிதை நூல்கள் : 1. ஹட்டியாங் மேன் ச்சிப்பா ஜ்வர் (1973)2. தீவாரோங் பர் க்கூன் ஸே (1975)3. லகட்பக்க்கா ஹம்ஸ் ரஹா ஹை (1980)4.ரோசனி கே மைதான் கீ தரஃப் (1982)5. ப்பூக்கண்ட தம் ரஹா ஹை (1982)6. ஆக்க் ஹர் சீஜ் மேன் பத்தாயி கஈ த்தீ (1987 )

Series Navigation‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு

Leave a Comment

Archives