This entry is part 17 of 33 in the series 11 செப்டம்பர் 2011

அமீதாம்மாள்

தேங்காயின்
மட்டைகள்
உரிக்கப்படும்

கழிவுக் குட்டையில்
முக்கப்படும்

நையப் புடைக்கப்பட்டு
நார் நாராய்க்
கிழிக்கப்படும்

மீண்டும்
முறுக்கேற்றி
திரிக்கப்படும்

திரிக்கப்பட்ட நார்கள்
கயிறாகி
எதைக் கட்ட
என்று கேட்கும்

ஆயிரம்
புத்தகங்கள் பேசாத
மனித வாழ்க்கையை
அரை முழம் கயிறு
பேசுகிறது

Series Navigationமாணவ பிள்ளைதாச்சிகள்அந்த இருவர்..