தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

2 ஆகஸ்ட் 2020

ஒரு கடலோடியின் வாழ்வு

பத்மநாபபுரம் அரவிந்தன்

Spread the love

திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள் 
உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு 
வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்... 
கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் …
அடர் நீல அசையும் பெரும் பட்டாய்க் கடல் 
எத்தனை பேருக்குக் கிடைக்கும் இவ் வாய்ப்பு? 
கர்விக்கும் மனம்…  மறுநொடி சென்றமரும் 
மனைவி, குழந்தைகள் பக்கத்தில் .
கண்கள் இங்கும் மனமங்குமாய்  
விடுமுறை தினத்தை கணக்கெடுக்கும்
நாளை மீண்டுமோர் விடியல்..  
Series Navigationதேடல்காலம் கடந்தவை

One Comment for “ஒரு கடலோடியின் வாழ்வு”

  • vciri says:

    நாடோடிக்கு எப்படி கடலோடி பற்றி தெரியும்.ரசிக்கும் கவிதை.
    இடம் மாறினாலும் குரல் ஒன்றுதானே


Leave a Comment

Archives