தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

27 செப்டம்பர் 2020

இதுவும் ஒரு சாபம்

ரத்தினமூர்த்தி

Spread the love

செல்வாக்கால் வெளுக்கப்பட்ட
மடிப்புக் கலையாத
வெண்மை ஆடைக்குள் புகுந்த
தலைவர்களால் நிரம்பியது
குளிரூட்டப்பட்ட அரங்கு
ரத்தக் கறை படிந்த பற்களும்
அரிவாளாய் முறுக்கிய மீசைகளும்
தங்களது அதிகாரத்தின் எல்லைகளை
அளந்து கொண்டிருந்தன
தங்களை குபேரன்கலாக்கிய
குடிமகன்கள் இருக்கும்வரை
பதவிக்குப் பங்கம் இல்லை
இந்த வாக்கு எந்திரகளுக்கு
சிந்திக்கும் அறிவுமில்லை என்ற
ஏளனத்தில் மிதந்தன.

அடிமட்டத் தொண்டன் நான்
அவையின் ஓர் மூலையில்
கறிவேப்பிலையாய் கிடந்தேன்
எதிகாலத் திட்டங்களை மனதிலும்
குறைபாடுகளை மனுவிலும்
வைத்துத் தவித்தபடி
தேர்தல் சீட்டுக் கிடைத்த மகிழ்வில்
வேட்டியை உருவி
கொடியாய் பிடித்தபடி
ஊர்வலம் போனவர்களின் பார்வை
என்னை புழுவாய் தூக்கி
புறக்கடையில் வீசியது
கட்சித் தலைமை என்னை மட்டும்
நிராகரிக்கப்பட்டதன் காரணம்
பொதுமக்கள்
என்னை நேர்மையாளன் என்று
சொல்லி விட்டார்களாம் !

Series Navigationபிரபஞ்ச ரகசியம்வாசிக்கஇயலாதவர்களுக்கு

Leave a Comment

Archives