சுரேஷ் ராஜகோபால்
#
வார்த்தைகள் தடுமாறி யாசிக்கிறது…
விமோசனம் தேடி – ஆழமான
நிலையிலிருந்த அந்த
மெளனத்திடம்.
மௌனமோ மேலும்
திடம் கொண்டு
மௌனத்தையே
கடை பிடிக்கிறது.
சலசலப்புக்கு அஞ்சாத நிலையே
சாஸ்வதம் என்றே
தளர்விலா நிலையெடுத்தது பிறகும்
மௌனமோ தன்னிலை மாறவில்லை !