தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

பந்தல்

ப மதியழகன்

Spread the love


 

கல்யாண வீடு

களைகட்டியிருந்தது

வெளிநாட்டு மாப்பிள்ளை

கட்டிக்க கசக்குதா

என்றார்கள்

நான் இன்னும்

படிக்கணும் என்றாள் அவள்

அம்மாஞ்சி சேகரை

மனதில் வைத்துக் கொண்டு

தற்கொலை செய்து கொள்வோம்

என மிரட்டி

மணவறையில் அமர

வைத்தார்கள்

காதல் பறவைகளில் ஒன்றை

கவண்கல்லால் அடிப்பது

சமூகத்திற்கு புதிதல்ல

தன் வாழ்க்கையை

பிறர் தீர்மானிக்க வைத்து

தலை குனிந்து

தாலி ஏற்கும் பெண்கள்

இன்னுமிருக்கிறார்கள்.

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9Nandu 1 – அல்லிக் கோட்டை

Leave a Comment

Archives