ஆசிரியர்: சிந்து
மேற்கு மலைத் தொடரில்
ஒரு மேட்டுக் குடில் வேண்டும்
நான் பார்க்கு மிடத்திலெல்லாம்
நல்ல பச்சைநிறம் வேண்டும்
நான்கு திசையினிலும்
வளர்ந் தோங்கும் வனம் வேண்டும்
அதில் ஆடி மகிழ்ந்திடவே
என் அன்புச்செல்வம் வேண்டும்
பாந்தளும் பேயுமிலா
நல்ல பூந்தளிர்கள் வேண்டும்
அதில் துள்ளிக் குதித்திடவே
என் தங்கக்குட்டி வேண்டும்
ஊற்று நதியினிலே
தினம் காற்றுவாங்க வேண்டும்
அங்கு ஊறும் அழகையெல்லாம்
அள்ளிப் பாட்டு கட்ட வேண்டும்
தூக்கந் திருடுந் தமிழ்
அங்கே துயில் கொள்ளவேண்டும்
அது தூக்கத்தில் சொன்னகதை
காலை கைவிரலில் வேண்டும்
மஞ்சம் விட்டு எழவே
சுடும் தேயிலை நீர்வேண்டும்
அதன் இஞ்சி உறைப்பினிலே
உயிர் உஷ்ணங் கொள்ளவேண்டும்
காட்டிலும் மேட்டினிலும்
ஓடக் கூட்டுத்திறன் வேண்டும்
நல்ல காய்கறி கூட்டுமென
உயிர் காக்கு மூணும் வேண்டும்
மலைச்சாரலும் தூறலுமாய்
மண்ணில் வாசம் வரவேண்டும்
அங்கு தங்கும் அமைதியெல்லாம்
உள்ளே பாய்ந்துறைய வேண்டும்
வீட்டிலும் தோட்டத்திலும்
வெயிற் காயும் ஒளிவேண்டும்
எங்கள் ஆவி குளிர்ந்திடவே
மனமெங்கும் களி வேண்டும்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 266 ஆம் இதழ்
- ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பு
- முருகபூபதியின் புதிய நூல் “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு
- உக்ரைன் தலைநகர் கிவ்வில் ‘ஸ்னைப்பர் வாலியின்’ நடமாட்டம்
- ஆஃபிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு !
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் -28 வசந்த காலத்தில் தோன்றும் ஒளி
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- மேற்கு மலைத் தொடர்
- நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.
- அகவைகள் நூறு கண்டதோர் சஞ்சிகை