தங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்

This entry is part 1 of 16 in the series 17 ஏப்ரல் 2022

 

 
image.png
 
 
பாடல் : சி. ஜெயபாரதன், கனடா
இசைப்பாடகி : வே.ரா. புவனா
காட்சி அமைப்பு : பவளசங்கரி
 
சி. ஜெயபாரதன், கனடா
 
 
 
 
Series Navigationஎமிலி டிக்கின்சன் கவிதைகள் -32, வாலாட்டும் நாய்க்குட்டி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    S. Jayabarathan says:

    புதுச் சேர்க்கையுடன் இதை மீண்டும் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன்.

    நன்றி,

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

    [கவிக்கோ, கவியரசு, கவிப்பேரரசு சேர்க்கை]

    தங்கத் தமிழ்நாடு

    சி. ஜெயபாரதன் & இராம. மேகலா

    தங்கத் தமிழ்நாடு! எங்கள் தாய்நாடு!
    சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!
    ​முத்தமிழ் ​வேந்தர் ​வளர்​முத்​​ தமிழ்மொழி ​
    மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு!
    எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
    முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!
    வங்கக் கடலெழு செங்கதிர் ஒளிபடும்
    தென்​ன​க முனையில் வள்ளுவர் ​சிலைநிழல்​
    ஆத்திசூடி ஓளவை, திருப்பாவை ஆண்டாள்,
    ​திருக்குறள்​ வள்ளுவர், ​சிலம்பு​ இளங்கோ,
    பு​ரட்சிக்​கவி​ பாரதி, பு​துமைக்​கவி பாரதிதாசன்,
    அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர்​,​ ​
    கவியரசு, கவிப்பேரரசு, கவிக்கோ, சேக்கிழார்
    யாவரும் உனது மாதவ மக்கள்!
    யாதும் நாடே யாவரும் கேளிர்!
    மேதினியில் உனைப் பாதுகாத் திடுவோம்!
    காசினி மீதில் நேசமாய்த் திகழும்
    மாசிலா நாடே! மைந்தர்கள் ஒன்றாய்
    வாழ்த்துவம் உனையே! உயர்த்துவம் உனையே!
    பாரதத் தாயின் தவத்திரு நாடே!
    பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்
    பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!

    ++++++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *