ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
அந்தத் தீப்பொறி விழுந்தது
இவன் நட்பின் இனிய
பசுமையான மென் பிரதேசங்கள்
எரிந்து கருகின
இடைவெளி
அந்த நண்பர்களைக்
கடுமையாக
அமைதிப்படுத்திவிட்டது
ஒரு மலரின் எல்லா இதழ்களும்
மீண்டும் கூம்பி மொட்டானதுபோல்
அவர்கள் மௌனமானார்கள்
அன்பு கெட்டிதட்டிப்போய்
ஆழ்ந்த மௌனத்தில்
உறைந்து கிடக்கிறது
ஆனாலும் இப்போதும்
அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்
உயிர்ப்பில்லாமல் …
- இரங்கலுரை: மகாஜனா தந்த மயிலங்கூடல் நடராஜன்
- 2019 ஆண்டில் எப்படி விஞ்ஞானிகள் முதன்முதலில் அசுரவடிவுக் கருந்துளையைப் படம் பிடித்தார் ?
- பூக்கொத்து
- இலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள்
- தீப்பொறி !
- பயணம் – 3
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 9
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- எச்சில் சீட்டுகள்
- திருப்பூரியம் கருத்தரங்கம்
- திருப்பூரியம்
- தகவல் பரிமாற்றம்