தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்

சித்ரா

Spread the love

”முன் ஜென்ம” கணக்கு காட்டி
எனக்கு மறுக்கபட்டிருந்த அன்பை
நான் மற்றவர்க்கு கொடுத்து விட்டால்,
தண்டனையென எனக்கு விதித்ததை
எப்படி வசூளித்து கொள்வாய்?

உன் செயல்களை அறிய முயன்று
நான் தோற்கிற வரை
நீ பரம்பொருள் தான்..
நிகழ்வுகளின் மூல கூறுகளை
அறிய முற்படுவதையே விட்டுவிட்டால்
உனக்கு என்ன பெயர் வைத்துகொள்வாய்?

எதிர்காலத்தை கையில் கொண்டு
வித்தை காட்டி மகிழ்கிறாய்
எதுவாயினும் இருக்கட்டும் என
நான் விட்டு விட்டால்
உப்புசப்பற்று ஆகிவிடுமோ உனக்கு ?

இப்படி ,நீ தடுக்கில் புகுந்தால்
நான் கோலத்தில் புகுகின்ற போது
சரியான போட்டியென சொல்வாயா? – இல்லை
எனக்கு ஞானம் வந்துவிட்டது
என சொல்லி விடுவாயா ?

– சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 12பசி வகை!

2 Comments for “கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்”


Leave a Comment

Archives