குழந்தையாகி நல்கி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 14 in the series 19 மார்ச் 2023

எப்படி அகம் மலர்ந்து
முகமெல்லாம் சிரிக்கும்
கைக்குழந்தையைத் தன்
இடுப்பிலேந்தி அவள்
கையேந்தும் முன்,
குறிப்புணர்ந்து அவன்,
குலையிலோர் ’இளநி’யைச் சீவி
அவள் இரவாதது போல் ஏற்க
அவன் ஈயாதது போல் அளிக்கிறான்
ஈதலும் இரத்தலுமின்றி
உயர்ந்தென்றும் இழிந்தென்றுமின்றி?
ஆச்சரியமாய் அதை நான்
கண்டபோது தான் கண்டேன்
அவ்வளவு அது ஆச்சரியமில்லையென்று,
எவ்வளவு அழகாய்
அவள் குழந்தை தன்
அமுதமெனும் கொள்ளைச் சிரிப்பை
பிறர் இரந்து தான் ஈயாததாயும்
தான் ஈந்து பிறர் ஏற்காததாயும்
யாவருக்கும் –ஒருவருக்கல்ல-
வாரி வழங்குதலைக் கண்டு-
ஒருவேளை எனக்கு முன்னமேயே
அவன் குழந்தையை நான்
கண்டது போல் கண்டு
ஆச்சரியமாகி ஒரு கணம்
தானே குழந்தையாகிக்
குழந்தையைப் போல்
யாவருக்கும் இல்லையாயினும்
குழந்தையின் தாய்க்கு
அப்படி
இளநியை நல்கினானோ?
ஆனால்
வெறுமனே குழந்தையைக்
கொஞ்சுவதை விட
எவ்வளவு இயல்பாய்
எவ்வளவு மேலானது அது!

கு. அழகர்சாமி

Series Navigationஅகழ்நானூறு 19
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *