தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

வேறு தளத்தில் என் நாடகம்

ரமணி

Spread the love

___ ரமணி

நானறிந்த
நிகரற்ற நட்சத்திரங்களின்
ஞாபகத்தோடு
வானின் தொலைதூரத்திலெரியும்
சூரியனை
என் ஒளியிழந்த கண்கொண்டு
பார்க்க விழைகிறேன்.

நீண்ட வெளியின்
மையத்தையும் முடிவையும்
காணத்துடிக்கும் மனதின்
வீண்முயற்சியின் அடித்தளத்தில்
தகிக்கும் அடையாளமற்ற
வெற்றுப்பார்வையில்
என் சிறகுகள் கட்டவிழ்கின்றன.

ஆனந்தத்தின் அடர்த்தியில்லாது
கடந்துபோன வாழ்வை எரித்து
என் கல்லறையாகக்
காத்துக்கிடக்கும் பள்ளத்தாக்கிற்கு
என் பெயரைச்
சூட்ட நினைக்கிறேன்.

Series Navigationகாலமாகாத கனவுகள்சயனம்

Leave a Comment

Archives