அந்த குழந்தை
கையில் பையுடன்
ஓடியாடி விளையாடியது.
முற்றத்து தண்ணீரில்
நிலவை பிடித்தது
வானத்து நட்சத்திரங்களையும்தான் !
மேகத்தில் வெள்ளிமலையோ, பீமரதமோ
எல்லாம் அந்த பைக்குகள் போட்டது.
மீண்டும் சிரித்துக்கொண்டே
முற்றத்தில் ஓடியது.
அப்பா
வாடிய முகத்துடன்
திண்ணையில கொட்டாவிவிட்டார்.
நாளை விடியலுக்கு
சட்டைப்பையில்,
பீடியுடன் சில்லறையை
தேடினார்!.
ஜெயானந்தன்.
- முற்றத்தில் நிஜம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 319ஆம் இதழ்