ஜெயானந்தன்.
அவரவர் வீட்டை திறக்க
அவரவர் சாவி வேண்டும்.
எவர் மனம் திறக்கும்
எவர் மனம் மூடும்
எவருக்கும் தெரியாது.
சில முகங்களில் – துன்ப
ரேகைகள் ஓடும்.
பல முகங்களில் – இன்ப
தூண்கள் தெரியும்.
யாரோடும் வீதியில் நடக்கலாம்.
வீதியெங்கும் காலடிச் சுவடுகள்
ரேகையில் எத்தனை வாழ்க்கை கனவுகள்.
பேசிக்கொண்டே செல்லும் வழியில்
நடைப்பிணங்கள் ஏராளம்.
இன்பமும் துன்பமும் நாடகம்தானே
இதில் நீயும் நானும்
விதிவிலக்கல்ல……………………..!