தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

திறவுக்கோல்

வளத்தூர் தி .ராஜேஷ்

Spread the love

அகம் சார்ந்த
வாழ்வை
பழித்து விடப்பட்டிருக்கிறது
ஆதலால்
முன்னோர்களின்
வழியின்
திறவுக்கோல்
வைத்து
சரிப்பார்த்துக்கொள்ள
முடிகிறது
நான் எதிர் கொள்ளும்
அனைத்தின் விளைவுகளும் .

இதில்
திறவுக்கோல்
அளவுகள்
பரிசோதிக்க
அவசியம் இருக்கவில்லை
அனைத்துக்குமான
நிறைவை
உள்ளடக்கியது இவை .

என் அகம்
பிரபஞ்ச தொன்மையில்
தொலைந்து போயிந்த ஒன்று
வார்த்தையின் தேடல்களில்
அவை சிக்குவதில்லை
மன உணர்வின்
அதிர்வுகளும்
அறிவதில்லை .

கிடைக்க பெறாத
எதுவுமே
நம்பிக்கையாக்கப்படுவதால்
அவ்வண்ணமே
நானும் ஆக்கப்பட்டேன் .

கொடுர நம்பிக்கை கொண்டு
திறக்கப்பட்ட
அதன் வினையின்
கணம்
மேலும் அழுத்தத்தின்
வெற்றிடமாகவே
காட்சிப்படுத்துகிறது
ஒளிகளின் சேர்ப்பு.

கிடைக்க பெறாத அகமும்
திறவுக்கோலும்
அதன் நம்பிக்கைகளும்
முன்னோர்களின் வழியே
தேடும் பொருளாக
உலவுகிறது என்
பிரபஞ்ச கனவுகள் .
வளத்தூர் தி.ராஜேஷ் .

Series Navigationநன்றி மறவா..!வியாபாரி

Leave a Comment

Archives