“ என்றும் காந்தியம் “

This entry is part 1 of 7 in the series 24 நவம்பர் 2024

 சுப்ரபாரதிமணியன்

 இன்றைய கவிதை உலகம் சூரியனுக்கு கீழ் உள்ள சகலத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கிற சாதி அதிகாரம்,  தொழில்நுட்ப அதிகாரம் பற்றியும் கவிதை உலகம் விமர்சிக்கிறது..

  வார்த்தைகளின் கூட்டமாக பல கவிதைகள் உற்பத்தியாகி வருகின்றன. ஆனால் கவிதை பற்றிய அரசியலும் அதன் தளங்களும் கொண்டு இயங்குகிற கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன.. நையாண்டி தனம் என்பது இன்றைய கவிதையின் முக்கியமான விஷயமாக எனக்கு படுகிறது படைப்பாளன் வாசகன் இரண்டு பேர் இணையும்  விஷயங்கள் தான் வெற்றி பெற்ற கவிதைகள் ஆகின்றன.

. கவிதைகளில் பலம் தினசரி வாழ்க்கையின்   அனுபவங்களை,  அதிர்வு கொண்ட விஷயத்தை இணைப்பதுதான்.. கிராமங்களும் அதன் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களும் மெல்ல மெல்ல அழிந்து விட்டன.. பெரும் நகரங்களையும் நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடப்பெயர்வைப் பற்றி இன்று நாம் அதிகமாக எழுதுகிறோம்.. மனித சிந்தனை கொண்டுள்ள நினைவாற்றல் தன்மை அளப்பரியது. இந்த நினைவாற்றல் தன்மையை மனதில் கொண்டு பலர் நினைவுகளை திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள். ஆனால் மனித வாழ்வியல் சார்ந்து  கைபேசி கொள்ளும் வீட்டு சூழலுக்கும் தனி வாழ்ச்க்கையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.. இந்த முடக்கப்பட்ட தன்மையைக் கூட கவிதையில் சிறப்பாக கொண்டு வருகிறார்கள். உழைப்பாளி தன்னுடைய பெரும்பாலும் நகர வாழ்க்கையோ கிராம் வாழ்க்கையோ தான் இருந்த இடம் இழந்ததின் வேதனையையும் இயங்க  வேண்டிய இயக்கத்தையும் கொண்டு செல்கிறார் .அப்படித்தான் பலருக்கு காந்தியும் சார்ந்த இயக்கம் பற்றிய கனவு இருக்கிறது. அதை கவிதை மொழியில் கொண்டு வருகிறார்கள். மண்ணும் நிலமும் அரசியலும் இதற்குள் எல்லாம்  வந்திருக்கிறது. இந்த கலவைதான் ஒரு அற்புதமான கவிதை உலகத்தை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது

 காந்தியம் என்பது  அவருடைய வாழ்வு தொலைநோக்கு பார்வை போன்றவற்றை குறிக்கிற சொல்லாக அமைந்திருக்கிறது. வன்முறை அற்ற உலகம் என்பது அவருடைய கனவாகக் கூட இருக்கிறது. அவருடைய பங்களிப்பு சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதை பற்றி திரும்பத் திரும்ப அலசப்படுகிறது காந்தியின் கருத்துக்கள் மக்களுக்கு என்ன அர்த்தம் தருகின்றன அவை எதிர்காலத்தில்  வழிகாட்டுதலுக்கு எப்படி உதவுகின்றன என்பதை பற்றி எல்லாம் நிறைய பேசிக் கொண்டிருக்கிறார்கள் காந்தியும் அரசியல் மற்றும் சமூகம் அல்லாத தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை அனுபவங்களும் கூடுகிறது இங்கு கவிதிஅயில் .  காந்தியம் என்று எதுவும் இல்லை அதை நான் விட்டுச் செல்லவில்லை அப்படி ஒரு கொள்கையோ கோட்பாடு இல்லை. என் வாழ்க்கையில் உண்மையான அனுபவங்களை சொல்ல முயற்சித்தேன் அவை  பழமையானது என்று காந்தியடிகள் கூட சொல்கிறார். இந்த பழமை வாய்ந்த காந்தி சார்ந்த தத்துவ விஷயங்கள் இன்றைக்கு எப்படி பயன்படுகின்றன அவை எப்படி தேவை என்பதை பற்றிய பல சர்ச்சைகள் உள்ளன. அந்த சர்ச்சுகளை நாம் இந்த கவிதைகள் மூலம்  தேடிப் பார்க்கலாம் தமிழ் கவிதை பற்றியும் காந்தியும் பற்றியும் சில அபிப்ராயங்களை மனதில் கொண்டுவர இந்த தொகுப்பு உதவும். அதேபோல இந்த கவிதைகளை நீங்கள் படிக்கிற போது கவிதை பற்றியும் காந்தியம் பற்றியும் பல்வேறு அபிப்ராயங்களும் உருவாகும். அவற்றை நீங்களும் யோசிக்கவும்  தொகுப்புரை செய்யவும் இது ஒரு வாய்ப்பு

 வாழ்த்துக்கள்

 சுப்ரபாரதிமணியன் திருப்பூர்

Rs 80 Erode Senthamil mutram veliyeedu 

Series Navigationஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *