This entry is part 5 of 7 in the series 24 நவம்பர் 2024

              வளவ. துரையன்

அஞ்சல் கொண்டுவந்து தரும்

அஞ்சல்காரர் போல

ஒரு சில வீடுகளுக்கு முன்

ஓயாமல் வந்து நிற்கிறது

வெள்ளைப் பசு மாடு.

ஒன்றுமே போடாததால்

அழைத்தழைத்துப் பார்த்துவிட்டு

நகர்ந்துவிடும் பரதேசியாய்

அதுவும் போகிறது.

பாலைக் கறந்துவிட்டு

வெளியே விரட்டிவிட்டப்

பரிதாபம் அதன் கண்களில்.

.

அடைக்க இயலாதவர்

வாங்கிய கடன்போல

வளர்க்க இடமி8ல்லாதவர்

வாங்கிய ஜீவன் அது.

கன்றுக்குக் கொஞ்சமாவது

சுரக்க வேண்டுமெனச்

சுவரொட்டியையும்

நெகிழியையும் தேடிப் போகிறது

நம் தேசத்தில்

Series Navigationமுத்தம் வெற்றியின் தோல்வி