யசோதா சரவணன்
மேட்டுப்பாளையம்
மேடுகளும் பள்ளங்களுமாகவே
வாழும் மக்களின் வாழ்நிலைகளும்
உயர்சாதி பணக்காரனின் வீடோ
மேட்டுப்பகுதியில் அதை
இருபது அடி உயரமுள்ள
கருங்கல் சுற்றுச்சுவர் காவல் காத்தது.
அதையொட்டிய
தலித்துகளின் வீடுகளோ
கழிவுநீர் வாய்க்காலுக்கு அருகில்
தாழ்வான பகுதிகளில்.
கருங்கல் சுவற்றின் துளைகளில்
கசியும் கழிவுநீரும்,
வாய்க்காலில் வழிந்தோடும் மழைநீரும்
கழிவுநீர் வாய்க்காலில் கரைபுரண்டு
ஓடும்போது
அவர்களின் ஹாலோபிளாக்
வீடுகளின் அஸ்திவாரங்களை
கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.
அவர்கள் அடுக்குமூட்டையில்
அடி மூட்டைகளாய் இருக்கும்
அருந்ததியர்கள்.
சுற்றுச்சுவருக்கு
ஒற்றைச் செங்கல் சுவர் போதாதா?
பழுதடைந்த கல்சுவரை
அகற்றிவிடுங்கள் ஐயா
மன்றாடினர் அம்மக்கள்
என் இடத்தில் நான் கட்டினேன்
என்ற எண்ணத்தில்
கல்நெஞ்சக்காரன் கண்டு கொள்ளவில்லை.
நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும்
நடவடிக்கை ஏதும் இல்லை.
வடகிழக்குப் பருவமழை
புரட்டியெடுக்கும் டிசம்பர் மாதம்
பெருமழை பேயாக பெய்த அந்நள்ளிரவில்
கருங்கல் சுவர் கருணையின்றி
ஏழைகளின் வீடுகள் மீது இடிந்துவிழ
மூன்று வீடுகள் தரைமட்டமாயின
ஐயோ!
கட்டிடக் கழிவுகள்
குரல்வளையை நொறுக்க
கூச்சலிடவும் முடியாமல்
மூச்சு விடவும் முடியாமல் பதினேழு பேர்
இடிபாடுகளில் சிக்கிக்கொள்ள
முடிந்து போனது அவர்கள் கதை.
பகல் முழுவதும் பாடுபட்ட அப்பாட்டாளிகளின்
குடும்பமே ஆழ்ந்த உறக்கத்திலேயே
நிரந்தர உறக்கம் கொண்டார்கள்.
கணவனை இழந்த கைம்பெண்ணோ
தன் இரு குழந்தைகளுடன்
ஊரில் எங்களை விட்டுவிட்டு
அதிகாலை ஐந்து மணிக்கு வேலைக்கு செல்ல
இரவு பதினோரு மணிக்கு இங்கு ஏன் வந்தாய்?
என்னுடனே இருந்திருக்கலாமே
இறந்திருக்க மாட்டாயே என்றவாறே
கணவனின் உடலைக் கண்டு கதறினாள்.
அவ்விடம் போர்க்களம் போலானது.
அக்கருங்கல் சுவரே கரையும் அளவு
கண்ணீர்க் கதறல்கள்.
காட்சிகள்
மாறிக் கொண்டேயிருந்தன.
சுவற்றின் உரிமையாளன்
தலைமறைவானான்.
குற்றவாளியை கைது செய்
குற்றவாளிக்கு பிணை வழங்காதே
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு
மாற்று இடம் ஒதுக்கு
தீண்டாமை சுவரை முழுமையாக அகற்று
கோரிக்கைகளுடன்
உரிமை முழக்கங்களுடன்
போராட்டங்கள் வெடித்தன.
போலீசாரோ,
போராடியவர்களையே அப்புறப்படுத்தினர்.
குற்றவாளிக்கோ பிணை
கிடைத்துவிட்டது.
இல்லாதவர்கள்களாயிற்றே
அரசின் இழப்பீடுகளை
ஏற்றுக் கொண்டார்கள்.
வழக்கு நடந்துகொண்டிருக்கிறது
ஆயிற்று ஐந்தாண்டுகள்
இப்போது
நகராட்சியின் நல்லாசியுடன்
மீண்டும்
கட்டப்பட்ட சுற்றுச்சுவரோ
இறந்துபோன உறவினர்களின்
அழுகுரல்களை
அவ்வப்போது கேட்டுக்கொண்டு
அம்மக்களின் அவலங்களை
பார்த்துக்கொண்டு
அமைதியாக நிற்கின்றது.
மடிந்த உயிர்களும்
மேட்டுப்பாளையம்
மேடுகளும் பள்ளங்களுமாகவே
வாழும் மக்களின் வாழ்நிலைகளும்
உயர்சாதி பணக்காரனின் வீடோ
மேட்டுப்பகுதியில் அதை
இருபது அடி உயரமுள்ள
கருங்கல் சுற்றுச்சுவர் காவல் காத்தது.
அதையொட்டிய
தலித்துகளின் வீடுகளோ
கழிவுநீர் வாய்க்காலுக்கு அருகில்
தாழ்வான பகுதிகளில்.
கருங்கல் சுவற்றின் துளைகளில்
கசியும் கழிவுநீரும்,
வாய்க்காலில் வழிந்தோடும் மழைநீரும்
கழிவுநீர் வாய்க்காலில் கரைபுரண்டு
ஓடும்போது
அவர்களின் ஹாலோபிளாக்
வீடுகளின் அஸ்திவாரங்களை
கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.
அவர்கள் அடுக்குமூட்டையில்
அடி மூட்டைகளாய் இருக்கும்
அருந்ததியர்கள்.
சுற்றுச்சுவருக்கு
ஒற்றைச் செங்கல் சுவர் போதாதா?
பழுதடைந்த கல்சுவரை
அகற்றிவிடுங்கள் ஐயா
மன்றாடினர் அம்மக்கள்
என் இடத்தில் நான் கட்டினேன்
என்ற எண்ணத்தில்
கல்நெஞ்சக்காரன் கண்டு கொள்ளவில்லை.
நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும்
நடவடிக்கை ஏதும் இல்லை.
வடகிழக்குப் பருவமழை
புரட்டியெடுக்கும் டிசம்பர் மாதம்
பெருமழை பேயாக பெய்த அந்நள்ளிரவில்
கருங்கல் சுவர் கருணையின்றி
ஏழைகளின் வீடுகள் மீது இடிந்துவிழ
மூன்று வீடுகள் தரைமட்டமாயின
ஐயோ!
கட்டிடக் கழிவுகள்
குரல்வளையை நொறுக்க
கூச்சலிடவும் முடியாமல்
மூச்சு விடவும் முடியாமல் பதினேழு பேர்
இடிபாடுகளில் சிக்கிக்கொள்ள
முடிந்து போனது அவர்கள் கதை.
பகல் முழுவதும் பாடுபட்ட அப்பாட்டாளிகளின்
குடும்பமே ஆழ்ந்த உறக்கத்திலேயே
நிரந்தர உறக்கம் கொண்டார்கள்.
கணவனை இழந்த கைம்பெண்ணோ
தன் இரு குழந்தைகளுடன்
ஊரில் எங்களை விட்டுவிட்டு
அதிகாலை ஐந்து மணிக்கு வேலைக்கு செல்ல
இரவு பதினோரு மணிக்கு இங்கு ஏன் வந்தாய்?
என்னுடனே இருந்திருக்கலாமே
இறந்திருக்க மாட்டாயே என்றவாறே
கணவனின் உடலைக் கண்டு கதறினாள்.
அவ்விடம் போர்க்களம் போலானது.
அக்கருங்கல் சுவரே கரையும் அளவு
கண்ணீர்க் கதறல்கள்.
காட்சிகள்
மாறிக் கொண்டேயிருந்தன.
சுவற்றின் உரிமையாளன்
தலைமறைவானான்.
குற்றவாளியை கைது செய்
குற்றவாளிக்கு பிணை வழங்காதே
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு
மாற்று இடம் ஒதுக்கு
தீண்டாமை சுவரை முழுமையாக அகற்று
கோரிக்கைகளுடன்
உரிமை முழக்கங்களுடன்
போராட்டங்கள் வெடித்தன.
போலீசாரோ,
போராடியவர்களையே அப்புறப்படுத்தினர்.
குற்றவாளிக்கோ பிணை
கிடைத்துவிட்டது.
இல்லாதவர்கள்களாயிற்றே
அரசின் இழப்பீடுகளை
ஏற்றுக் கொண்டார்கள்.
வழக்கு நடந்துகொண்டிருக்கிறது
ஆயிற்று ஐந்தாண்டுகள்
இப்போது
நகராட்சியின் நல்லாசியுடன்
மீண்டும்
கட்டப்பட்ட சுற்றுச்சுவரோ
இறந்துபோன உறவினர்களின்
அழுகுரல்களை
அவ்வப்போது கேட்டுக்கொண்டு
அம்மக்களின் அவலங்களை
பார்த்துக்கொண்டு
அமைதியாக நிற்கின்றது.
இடிந்த சுவரும் மடிந்த உயிர்களும்
மேட்டுப்பாளையம்
மேடுகளும் பள்ளங்களுமாகவே
வாழும் மக்களின் வாழ்நிலைகளும்
உயர்சாதி பணக்காரனின் வீடோ
மேட்டுப்பகுதியில் அதை
இருபது அடி உயரமுள்ள
கருங்கல் சுற்றுச்சுவர் காவல் காத்தது.
அதையொட்டிய
தலித்துகளின் வீடுகளோ
கழிவுநீர் வாய்க்காலுக்கு அருகில்
தாழ்வான பகுதிகளில்.
கருங்கல் சுவற்றின் துளைகளில்
கசியும் கழிவுநீரும்,
வாய்க்காலில் வழிந்தோடும் மழைநீரும்
கழிவுநீர் வாய்க்காலில் கரைபுரண்டு
ஓடும்போது
அவர்களின் ஹாலோபிளாக்
வீடுகளின் அஸ்திவாரங்களை
கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.
அவர்கள் அடுக்குமூட்டையில்
அடி மூட்டைகளாய் இருக்கும்
அருந்ததியர்கள்.
சுற்றுச்சுவருக்கு
ஒற்றைச் செங்கல் சுவர் போதாதா?
பழுதடைந்த கல்சுவரை
அகற்றிவிடுங்கள் ஐயா
மன்றாடினர் அம்மக்கள்
என் இடத்தில் நான் கட்டினேன்
என்ற எண்ணத்தில்
கல்நெஞ்சக்காரன் கண்டு கொள்ளவில்லை.
நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும்
நடவடிக்கை ஏதும் இல்லை.
வடகிழக்குப் பருவமழை
புரட்டியெடுக்கும் டிசம்பர் மாதம்
பெருமழை பேயாக பெய்த அந்நள்ளிரவில்
கருங்கல் சுவர் கருணையின்றி
ஏழைகளின் வீடுகள் மீது இடிந்துவிழ
மூன்று வீடுகள் தரைமட்டமாயின
ஐயோ!
கட்டிடக் கழிவுகள்
குரல்வளையை நொறுக்க
கூச்சலிடவும் முடியாமல்
மூச்சு விடவும் முடியாமல் பதினேழு பேர்
இடிபாடுகளில் சிக்கிக்கொள்ள
முடிந்து போனது அவர்கள் கதை.
பகல் முழுவதும் பாடுபட்ட அப்பாட்டாளிகளின்
குடும்பமே ஆழ்ந்த உறக்கத்திலேயே
நிரந்தர உறக்கம் கொண்டார்கள்.
கணவனை இழந்த கைம்பெண்ணோ
தன் இரு குழந்தைகளுடன்
ஊரில் எங்களை விட்டுவிட்டு
அதிகாலை ஐந்து மணிக்கு வேலைக்கு செல்ல
இரவு பதினோரு மணிக்கு இங்கு ஏன் வந்தாய்?
என்னுடனே இருந்திருக்கலாமே
இறந்திருக்க மாட்டாயே என்றவாறே
கணவனின் உடலைக் கண்டு கதறினாள்.
அவ்விடம் போர்க்களம் போலானது.
அக்கருங்கல் சுவரே கரையும் அளவு
கண்ணீர்க் கதறல்கள்.
காட்சிகள்
மாறிக் கொண்டேயிருந்தன.
சுவற்றின் உரிமையாளன்
தலைமறைவானான்.
குற்றவாளியை கைது செய்
குற்றவாளிக்கு பிணை வழங்காதே
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு
மாற்று இடம் ஒதுக்கு
தீண்டாமை சுவரை முழுமையாக அகற்று
கோரிக்கைகளுடன்
உரிமை முழக்கங்களுடன்
போராட்டங்கள் வெடித்தன.
போலீசாரோ,
போராடியவர்களையே அப்புறப்படுத்தினர்.
குற்றவாளிக்கோ பிணை
கிடைத்துவிட்டது.
இல்லாதவர்கள்களாயிற்றே
அரசின் இழப்பீடுகளை
ஏற்றுக் கொண்டார்கள்.
வழக்கு நடந்துகொண்டிருக்கிறது
ஆயிற்று ஐந்தாண்டுகள்
இப்போது
நகராட்சியின் நல்லாசியுடன்
மீண்டும்
கட்டப்பட்ட சுற்றுச்சுவரோ
இறந்துபோன உறவினர்களின்
அழுகுரல்களை
அவ்வப்போது கேட்டுக்கொண்டு
அம்மக்களின் அவலங்களை
பார்த்துக்கொண்டு
அமைதியாக நிற்கின்றது.
- ‘அபராஜிதன்’ – சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது
- சரித்திர சான்று
- தொடர் மழை
- கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.
- அஞ்சலி : எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ( வழக்கறிஞர் ரவி )
- சாகித்திய ரத்னா விருது பெற்ற பெண் ஆளுமை – ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரை
- சுகமான வலிகள்
- எழுத்தாளனின் முகவரி
- களவு போன அணுக்கப்பை
- இடிந்த சுவரும் மடிந்த உயிர்களும்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ்