ரவி அல்லது
வழித்தெடுத்த
நேசத்தை
வாசனை திரவியமாக
தடவினேன்.
இக் கமகமத்தலைத்தான்.
இவர்கள்
காதலென்கிறார்கள்.
நான்
கசிந்துருகும்
உயிர்த்தலென்கிறேன்.
இங்குதான்
என்னுலகம்
வேறாகிப்போனது
பித்தனென
இவர்கள்
பிதற்றுவதற்கும்
பிறகென்னை
வெறுப்பதற்குமான
அந்நியப் போக்கில்.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com