குமரி எஸ். நீலகண்டன்
உண்மை ஒரு
புள்ளி போல்
தெரிகிறது.
உண்மை ஒரு
சிறிய அளவில்
இருந்தாலும் அது
பிரம்மாண்டமானது.
ஒரு சருகு போல்
மெலிதானதானாலும்
அது ஒரு
பேரண்டத்தையே
எரித்துவிடும் வலுவானது.
உண்மை இருண்டு
அகன்ற வானத்தில்
ஒரு நட்சத்திரம் போல்
தெரிகிறது.
உண்மையில் அது
பிரகாசமானது.
உண்மை சிறிதாய்
இருக்கிறது.
பெரிதாய் இருக்கிறது.
வலுவாய் இருக்கிறது.
உண்மை சுடுகிறது.
உருகாமல்
உறைந்திருக்கிறது.
உண்மை பயப்படுகிறது.
உண்மை நடுங்குகிறது.
பதுங்குகிறது…
தருணம் பார்த்து
விஸ்வரூபமெடுக்க…
உண்மை யாருக்காகவோ
காத்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு உண்மையான
முகத்தின் முன்பு மட்டுமே
காட்சி அளிக்க…
உண்மை ஆடுகிறது.
பாடுகிறது.
நாடகமாடுகிறது..
உண்மையில்தான்
எத்தனை வகைகள்…
அதை ரசிப்பதற்கு
உடம்பில் சிறிதளவேனும்
உண்மை ஒட்டி
இருக்க வேண்டும்.
குமரி எஸ். நீலகண்டன்
பழைய எண்-204, புதிய எண் – 432.
பார்சன் குரு பிரசாத் ரெசிடென்ஷியல் காம்பிளக்ஸ்,
ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
செல்-94446 28536