- பி.கே. சிவகுமார்
கதைப்போமா நண்பர் குழுமம் நடத்தும் வாராந்திர சிறுகதை உரையாடலின் பரிசுத் திட்டம்:
- நிகழ்ச்சியில் பன்னிரண்டு வாரங்கள் தொடர்ந்து கலந்து கொள்கிற உறுப்பினர்களுக்கு (நிர்வாகிகள் அல்லாதோருக்கு) – 12வது வார முடிவில் $20 அமேசான் கிப்ட் கார்டு. இதில் இரண்டு பேர் தேர்வானால், பரிசுத் தொகை பிரித்துக் கொடுக்கப்படும். இரண்டு பேருக்கு மேல் தேர்வானால், நிர்வாகிகள் சீட்டு குலுக்கிப் போட்டு, இருவர் பரிசுக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- வாரம்தோறும் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிற ஒருவருக்கு $10 அமேசான் கிப்ட் கார்டு. இதில் நிர்வாகிகளோ அல்லது நிர்வாகிகளால் கேட்டுக் கொள்ளப் பங்கேற்பாளர்களில் ஒருவரோ பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பார்கள். நடுவர் கேட்டால் நிர்வாகிகள் தேர்வுக்கு உதவவும் செய்வார்கள். நிர்வாகிகளும் அந்த வாரம் நடுவராக இருப்பவரும் பரிசு பெற இயலாது. ஒருவரே இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து பரிசு பெற இயலாது. ஒருமுறை பரிசு பெற்றவர் அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பரிசு பெற இயலாது. அந்த வாரத்துக்கு யார் நடுவர் என்பது பிறருக்கு ரகசியமாக வைக்கப்பட்டு, நடுவருக்கு மட்டும் முன்கூட்டிச் சொல்லப்பட்டு, நிகழ்வின் முடிவில் பரிசுக்குரியவரின் பெயரை நிர்வாகிகள் அறிவிக்கும்போது, நடுவரின் பெயரும் அறிய தரப்படும். வாரம் ஒரு நடுவர் என்பது பரிசுத் தேர்வில் diversity-ஐயும் மாறுபட்ட சிந்தனைகளுக்கான அங்கீகாரத்தையும் கொண்டுவர உதவும்.
- கதையை எழுதிய எழுத்தாளர் அந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் எனில், அவர் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுத்துத் தந்து உதவக் கேட்டுக் கொள்ளப்படுவார்.
- அந்த வாரத்துக்கான பரிசு பெறாதோர் சிறப்பான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று அர்த்தமாகாது. இது கலந்து கொள்வோரை ஊக்குவிக்கும் ஒரு gesture மட்டுமே. கருத்துகள் குறித்த தீர்ப்பு அல்ல.
- மேற்கண்ட விஷயங்களில் எதுவும் கேள்விகளோ, பிரச்னைகளோ எழுந்தால் நிர்வாகிகளின் முடிவே இறுதியானது.
- இப்பரிசுகள் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொள்ள ஊக்கம் தந்து இலக்கிய வாசிப்பையும் இலக்கிய ரசனையையும் வளர்க்கவே.
- இப்பரிசு திட்டங்கள் ஆகஸ்ட் 27, 2025 புதன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இருந்து தொடங்கும்.
- இது குறித்த விதிகளையும் செயல்முறையையும் பெறுகிற அனுபவத்துக்கேற்ப எந்நேரமும் மாற்றியமைக்கும் உரிமை நிர்வாகிகளுக்கு உண்டு.
- இந்நிகழ்வின் நோக்கம் தமிழில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை இலக்கிய வாசிப்பு நோக்கி நகர்த்துவது. அதன் பொருட்டுத் தமிழ் இலக்கியத்தின் பரந்துபட்ட குறிப்பிடத்தக்க சிறுகதைகளை அறிமுகப்படுத்திக் கலந்துரையாடி இலக்கிய ரசனையைச் செழுமைப்படுத்துவது. வேறெந்த லாப நோக்கமும் நிர்வாகிகளுக்கு இல்லை.
- அக்டோபர் மாதத்தில் இருந்து மாதமொருமுறை நாவல் கலந்துரையாடலும் திட்டமிட்டுள்ளோம்
அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தாருங்கள். வாசிப்பில் ஆர்வம் உள்ள உங்கள் தொடர்புகளை இந்நிகழ்ச்சிக்கு வாரந்தோறும் அழைத்து வாருங்கள்.
அன்புடன்,
கதைப்போமா நண்பர்கள் குழுமம்
- இலக்கியப்பூக்கள் 349
- பாவண்ணனின் சாம்பல் சிறுகதை கலந்துரையாடல் – அழைப்பிதழ்
- செழியனின் ஹார்மோனியம் – கலந்துரையாடல் – குறிப்புகள்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் – பரிசுத்திட்டம்
- தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்
- மௌனியும் நானும்
- யோகி (கவிதை)
- பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காக
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 18
- எங்கிருக்கிறேன்?
- சந்திரமுக சகமனுஷி