கூடங்குளம் மின்சக்தி ஆலையம்

This entry is part 4 of 37 in the series 23 அக்டோபர் 2011

சி. ஜெயபாரதன், கனடா

கூடங்குள அணுமின் உலை
கூவத்து நதியில்
கட்டப் பட்ட
குப்பை மாளிகை அல்ல !
இந்தியர்
உப்பைத் தின்று
வளரும்
ஒப்பிலா விஞ்ஞானிகள்
உன்னத பொறித் துறை
மன்னர்கள்
வடித்த
மின்சாரப் பிரமிட்கள் !

ஊரே தீப்பற்றி எரிய
வீணை வாசித்த
நீரோ மன்னன்
எழுப்பிய
கோர உலைகள் அல்ல !
இவை மூடிக் கிடந்தால்
பூனை தூங்கும்
பொங்கிய அடுப்பில் !
கணினிகள்
மிளகாய்ப் பெட்டிகளாய்
கண்ணீர் சிந்தும் !
மின்சார மின்றி
சம்சாரம்
மங்கலம் பாடும் !
சினிமாக் கொட்டகை
மாட்டுக்
கொட்டமாய்க்
கொட்டாவி விடும் !
கவச குண்டல மாய்த்
தொங்கும்
செல்லரித்துப் போன
கைபேசிகள் !
மாட்டு வண்டிகள் இழுக்கும்
சாணி யுகம் மீண்டும்.
காணி நிலத்தில்
பாம்பாய்ப்  படமெடுக்கும்
எரிந்த
சாம்ப லிருந்து !

++++++++++++++++++++

Series NavigationMurugan Temple Maryland Upcoming Eventsமிம்பர்படியில் தோழர்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *