தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

அது

ப மதியழகன்

நடுநிசியில்
யார் கதவைத் தட்டுவது
பிரமையா
தூக்கம் வராத
இரவுகளை எதிர்கொள்கையில்
நரகம் பற்றிய பயம்
அதிகரிக்கின்றது
சிநேகிதர்கள் ஒவ்வொருவராக
பிரியும் போது
கதவைத் தட்டியது
எமன் தானோ என்று தோன்றுகிறது
பருவத்தில் படமெடுத்து
ஆடிய மனது
இன்று பயந்து பம்முகிறது
மனம் பக்குவமடைந்துள்ளது
அடுத்தவரின் அந்தரங்கத்தை
அறிய இப்போது
ஆளாய் பறப்பதில்லை
செய்த தவறுகளால் ஏற்பட்ட
குற்ற உணர்ச்சியே
என்னைக் கொன்றுவிடுமோ என
பயமாய் இருக்கிறது
அகஸ்மாத்தாக தெரிந்து கொண்டேன்
வாடினால் தான் மலரென்று
செத்தால் தான் சுகமென்று.

Series Navigationமழையாகிவிட்ட தவளையின் சாகசம்போதிதர்மர் தமிழரா…? ஆரியரா…?

One Comment for “அது”

  • chithra says:

    அகஸ்மாத்தாக தெரிந்து கொண்டேன்
    வாடினால் தான் மலரென்று
    :) nice..


Leave a Comment

Archives