தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

மழை

தேனம்மை லெக்ஷ்மணன்

புலிக்குட்டிகளாய்
உருண்டு புரள்கிறது
மாநகரச் சாலைப்பள்ளத்தில்
மழைநீர்.

குளித்த எருமைகளாய்
அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில்
கட்டிக்கிடக்கின்றன வண்டிகள்.

சிறிதாய்ப் பெய்த மழையில்
மிதக்கும் நகரம் ஆகிறது
மாநகரம்.

கார் வைத்திருப்பவர்களைக்
கப்பல் வைத்திருப்பவர்களாகவும்.,
வண்டி வைத்திருப்பவர்களை
ஓடக்காரர்களாகவும்
ஆக்குகிறது மழை.

அடித்து அடித்து
மாநகரத்தைச் சலவை
செய்துகொண்டிருக்கிறது மழை..

Series Navigationதமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்நிர்மால்ய‌ம்

2 Comments for “மழை”


Leave a Comment

Archives