நேஷனல் ஜேக்ரஃபி யின் 12 அக்டோபர் 2011 இதழில் ஜே.ரிச்சார்டு காட்ட் தன் கட்டுரையில் 2011ன் இயற்பியலுக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற இயற்பியல் சாரம் பற்றி குறிப்பிடுகிறார்.
இப்பரிசு ஆடம்ரீஸ் ,ப்ரியன் ஸ்மிட் மற்றும் சால் பெர்ல்முட்டர் ஆகிய விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது.இவர்களும் விண்வெளி இயற்பியலில் நிபுணர்கள் தான்.சென்ற நூற்றாண்டுக்கோட்பாடான “பிரபஞ்ச விரிவு”தனை தம் விண்வெளி பயணத்தின் அடிப்படையில் கண்டறிந்து விவரித்தமைக்கு தான் இந்த நோபல் பரிசு.விண்வெளியில் இந்த “மூவர் உலா”பற்றி நம் ஒட்டக்கூத்தர் அறிந்திருந்தால் இந்த விஞ்ஞான உலா பற்றி நெடிய கலி வெண்பா பாடல்கள் இயற்றியிருப்பார்.
இம்முவரும் எழுதியது வெண்பாக்கள் அல்ல.விண்வெளியின் விந்தையை சொல்லும் “வெளி”ப்பாக்கள்.பிரபஞ்சத்தின் விரிவு அல்லது வீக்கம் நிகழக்காரணம் ஈர்ப்பு விசைக்கு எதிரான ஒரு உந்துவிசை (ஆக்சலரேஷன்)என்பதும் இதுவே பிரபஞ்ச இடைவெளிகளில் புதிராக தோன்றும் இருட்பிண்டங்கள் (டார்க் மேட்டர்)என்பதும் இந்த எதிர் ஆற்றல் தான் பிரபஞ்சத்தை விரிய செய்து பூதாகரமான ஈர்ப்புவிசை இந்த பிரபஞ்சத்தையே விழுங்கி விடாமல் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்பதும் ஆகிய மிக நுட்பமான இயற்பியல் கோட்பாட்டை “விண்வெளி வீரர்களாக வலம் வந்த” விவரத்தோடு வெளிப்படுத்தியதால் தான் இவர்களுக்கு இந்த 2011 நோபல் பரிசு. விண்வெளியின் மையம் ஈர்ப்புமையம் என்பது விஞ்ஞான உலகம் அறிந்தது தான்.ஆனால் ஈர்ப்புவிசையால் ஏற்படும் உந்துவிசையும் (ஆக்சலரேட்டிங் ஃபோர்ஸ்)ஈர்ப்பு விசையும் வெவ்வேறு அல்ல.அவை சமப்பாட்டுத்தன்மை (ஈக்குவலன்ஸ்)உடையவை தான் என்று ஐன்ஸ்டீன் தன் பொதுசார்பு கோட்பாடு மூலம் நிறுவியது தான் சென்ற நூற்றாண்டின் முக்கியமைல்கல்.
இந்த பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கு அடிப்படையானது என்று பார்த்தோம்
.உரிக்க உரிக்க வெங்காயம் தோல் உரிந்து கொண்டே போய் இறுதியில் ஒரு சூன்யமாய் நிற்கும்.இந்த பிரபஞ்சமும் அப்படித்தானா? தத்துவ வாதிகள் அப்படித்தான் பாடுகிறார்கள்.விஞ்ஞானிகள் பாடும் பாட்டோ வேறு பாட்டு.லட்சக்கணக்கான கணித சமன் பாடுகளில் அவர்கள் பாடுகிறார்கள்.
இந்த பிரபஞ்ச கன பரிணாமத்தை நாம் எப்படி புரிந்து கொள்வது?அதற்கு ஒரே வழி அதன் தொடுவானத்தைப் போய் தொட்டுக்கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் அடிவானத்தை வருடி விட்டு வரவேண்டியது தான்.இந்த வான எல்லையை ஹோரிசான் என்று அழைக்கிறார்கள்.இதை அளக்க ஐன்ஸ்டீன் பயன்படுத்தும் “இஞ்ச் டேப்” தான் கால வெளி வார்ப்பின் இழைகள்.(ஸ்பேஸ் டைம் வார்ப் ie space time warp)பிரபஞ்ச விரிவு என்பது ஊதப்பட்டுக்கொண்டே வரும் பலூன் போன்றது தான்.ஆனால் இது வெடிக்காது.புஸ் என்று ஒரு ஒற்றைப்புள்ளியில் (சிங்குலர் பாயிண்ட்)ஒடுங்கிப்போவது தான்.பிக் பேங்க் என்று ஒரு பூதாகர வெடிப்பு நிகழ்ந்தது என்று சொல்வது கூட அந்த ஒற்றைப்புள்ளியின் ஆர்ப்பாட்டம் தான்.எனவே விரிவு என்பதும் ஒரு புதிர்ச்சொல் தான்.கணித இயற்பியல் விஞ்ஞானைகளின் சமன்பாடுகள் எனும் புதைகுழியில் ( QUAGMIRஏ)விழுந்து பார்த்து ஒரு வித பரவசத்தின் “திணறல்”களில் திளைத்துப்பார்ப்பது விஞ்ஞானிகளின் விளையாட்டு. தொடுவானம் என்றால் பூமியைத்தொட்டுக்கொண்டிருக்கும் வானம் என்று மெலெழுந்தவாரியாய் பொருள் கொள்ளலாம்
. அதிகாலையிலும் அந்திமாலையிலும் மட்டுமே அதை நாம் பார்த்து சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் விளிம்பில் சிதறல் அடைந்து இளஞ்சிவப்பு மஞ்சள் போன்ற பல வண்ணங்கள் காட்டுவதாகவும் பார்க்கிறோம்.காதல் மயக்கம் கொண்ட கவிஞர்களோ கற்பனை எனும் மது நிரப்பிய கோப்பைகளை கையில் ஏந்திக்கொண்டு கவிதைகள் பிதற்றுவார்கள். ஆனால் விஞ்ஞான மேதைகள் விண்வெளி ஆய்வுமொழியில் பேசுவதாயிருந்தால் (cosmologically speaking) அதில் ஆழமான அறிவியல் நுட்பங்கள் பொதிந்திருக்கும். நம்மிடையே ஒரு பழமொழி உண்டு.”கண்டவர் விண்டதில்லை;விண்டவர் கண்டதில்லை” கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களும் கூறிக்கொள்ளும் பழமொழி இது.எனவே அது “கடவுள் விஞ்ஞானமா ? கடவுள் அஞ்ஞானமா ? என்று அவர்கள் சாலமன் பாப்பையாவிடம் சொல்லி ஒரு பட்டிமன்றம் நடத்திக்கொள்ளட்டும்.விண்வெளி இயற்பியல் வல்லுனர்கள் இந்த தொடுவானத்தைப் பற்றி என்ன வரையறுக்கிறார்கள் தெரியுமா? இதை ஒரு “தொடர்பு வானம்” என்கிறார்கள்.பிரபஞ்சம் அல்லது விண்வெளியில் உள்ள எந்த பொருளும் (கோள்கள் விண்மீன்கள் விண்மீண்தொகுதிகள் முதலியன) அந்த விண்வெளியோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் தன்மையின் எல்லையையே (limit to communicate) தொடுவானம் (Horizon) என்கிறார்கள் விஞ்ஞானிகள்.நாம் பூமியின் மேற்பரப்பிலிருந்து இரவு நேரத்தில் கோடிக்கணக்கான மைல்களுக்கும் அப்பால் உள்ள பிரபஞ்சத்தின் பிற பொருள்களான விண்மீன்கூட்டங்களை நமது சாதாரண கண்களாலேயே பார்க்க முடிகிறது.இப்படி கோடிக்கணக்கான மைல்கள் என்று சொல்வது கூட ஏதோ வரிசையாய் மைல் கற்கள் நட்டுவைத்து அந்த பாதையில் செல்வது போல எண்ணுவது ஒரு பாமரத்தனமாக இருக்குமே அல்லாது அறிவியலுக்கு பொருத்தமானதாக அது இருக்காது.கோடிக்கணக்கான ஒளியாண்டுகள் என்று சொல்வதே மிகச்சரியானதாகும்.ஏனெனில் மிக மிக அண்மையில் இருக்கும் (நம் சூரியனைத்தவிர) ஒரு விண்மீனை நாம் பார்ப்பது கூட சில-பல லட்சம் ஒளியாண்டுகள் என்கின்றனர் விண்வெளியாளர்கள்.ஒரு ஒளியாண்டு என்பது வினாடிக்கு 1,86,000 மைல்கள் வேகத்தில் செல்லும் ஒளியானது ஒரு ஆண்டுகாலத்தில் செல்லும் தூரம் ஆகும்.அதாவது 60x60x24x365.25 மைல்கள் ஆகும்.தலை சுற்றுகிறதல்லவா! இப்படி கோடிகோடி….கோடி ஒளியாண்டுகள் விட்டம் உள்ளது நம் பிரபஞ்சம். இதன் உட்கூறுகள் பற்றி தெரிவதென்றால் சும்மாவா?
அதனால் தான் கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை என்று நம் முன்னோர்கள் நமக்கு கோடு போட்டு விட்டு போய் விட்டார்கள்
.அதில் “ரோடு” போட்டு மேலே மேலே போய்க்கொண்டிருப்பதும் வேண்டாம் இது போதும் இதில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கொண்டால் போதும் என்று அறிவு வேட்கையை அவித்துக் கொள்வதும் அவரவர் விருப்பம். விஞ்ஞானிகள் எப்போதும் முதல் வகையைச்சேர்ந்தவர்கள்.அவர்கள் பொருள் முதல் வாதிகள்.அவர்கள் கண்டு விண்டு அல்லது விண்டு கண்டு தெளிவார்கள்.பரிசோதனை கூடங்களே அவர்களது கோயில்கள்.இரண்டாவது வகையைச்சேர்ந்த மெய் அல்லது பொய் ஞானிகளோ கருத்து முதல் வாதிகள்.இவர்களுக்கு கோயில்களேபரிசோதனைக்கூடங்கள். ஆனால் இங்கு இன்னும் பரிசோதிக்கப்படாமலேயே இருப்பது இவர்களின் பொய்களும் மூடநம்பிக்கைகளும் தான்.
பிரபஞ்சத்தின் வடிவ கணிதம்
(geometry of universe) மிகவும் வினோதமானது. கால-வெளியின் (space-time) வடிவ கணிதம் தான் பிரபஞ்சத்தின் வடிவ கணிதம். பிரபஞ்சம் முழுதும் நிரவியிருக்கும் ஈர்ப்பு ஆற்றல் (gravitational force) கால-வெளியின் வளைவியத்தால் (space-time-curvature) ஏற்படும் வடிவ கணிதத்தின் இயக்கவியல் (geometrical dynamics )தான் பிரபஞ்சவியல்.விஞ்ஞானிகளெல்லாம் வியந்துபோகும் அளவுக்கு ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த இந்த பொது சார்பியல் கோட்பாடு (general relativity theory)தான் 20-ஆம் நூற்றாண்டில் ஒரு 21-ஆம் நூற்றாண்டை நோக்கிய பாதையின் முக்கிய திருப்பு முனை. ஒளியின் வேகத்துக்கு உட்படுத்தப்படும் பிரபஞ்ச வெளியும் (தூர அம்சம்) காலப்பரிமாணமும்(time-dimension) ஒரே அச்சு மதிப்பில் (coordinate ) பின்னி இழைந்தது போல் கணக்கீடு செய்யப்பட்ட இந்த அச்சுக்கோடு (coordinate curve) கால-வெளிப்பின்னல் (space-time warp) என அழைக்கப்படுகிறது.பிரபஞ்சத்தில் ஒளியின் திசைவேகமே (velocity) எல்லை.இதை மீறிய திசை வேகத்தில் எந்த துகளும் (particle) பாய்ந்து செல்வதில்லை.இதைப் பற்றி ஏற்கனவே என் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
பிரபஞ்சத்தைப்பற்றி சுருங்கச்சொல்லி விளங்க வைக்க ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த ஒரு அற்புத சூத்திரம் என்னவென்றால் அதுவே
“கால-வெளி” எனும் “space-time” ஆகும். (தமிழில் ஏன் மாற்றி கால-வெளி என சொல்கிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது எனக்குப்புரிகிறது. “வெளி-காலம்” என்று சொல்லுவதை விட கால-வெளி என்பது ஏதோ நாம் அடிக்கடி எங்கேயோ கேட்டு கேட்டு சொல்லி சொல்லி பழகிய மாதிரி இருக்கிறது.தமிழ் இலக்கணப்படி (“கொண்டு கூட்டுப்பொருள் கோள்”)என்று இங்கே இருப்பதை அங்கே கூட்டி பொருள் கொண்டது போலவாவது இச்சொல்லை கையாளலாம் என நினைக்கிறேன்.தயவு செய்து இப்பிழையை ஏற்றுக்கொண்டு அச்சொல்லை வழுவமைதிப்படுத்திக்கொள்ளூம்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்)
இப்போது இந்த விண்வெளியியல் எனும் பிரபஞ்சக்கோட்பாடு பற்றி பார்ப்போம்
..காலவெளியை 3 பரிமாணத்துடன் அளக்கப்படும் வெளியில் தூரம் எனும் அம்சங்களை அச்சு மதிப்பாகக்கொண்டு கணக்கிடுகையில் 4வது பரிமாணமாக காலத்தையும் சேர்த்துக்கொண்டார் ஐன்ஸ்டீன். உதாரணமாக x எனும் தூர மதிப்பைக்காட்டும் அச்சுடன் t எனும் கால மதிப்பையும் சேர்த்துக் காட்டுவதற்காக xt என்றே குறிப்பிடுகிறார்.ஒளியின் வேகம், தூரம் (வெளி) இந்த இரண்டு அம்சங்களை எந்த அலகுகளில் அளந்தால் துல்லியமாக இருக்கும்.ஒளியின் வேகத்தை அது செல்லும் தூரம் அல்லது வெளியை இவ்வளவு காலத்தில் அது கடந்து சென்றது என்கிறோம்.அல்லது அதை இப்படியும் சொல்லலாம் ஒரு வினாடிக்காலத்துக்கு 1,86.000.மைல்களின் தூரத்தைக்கடந்து விடும் ஒளியின் வேகத்தை சமப்படுத்தி சொல்லலாம்.எனவே ஒளியின் திசைவேகம் என்பது (velocity of light) பிரபஞ்சம் முழுவதும் எப்படி அளக்கப்படவேண்டும் என்பதில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த கோட்பாடு “சிறப்பு சார்புக்கோட்பாடு” (special relativity) ஆகும். ஒளியின் வேகத்தை கால அலகுகளில் அளப்பதும் காலத்தை ஒளிவேகத்தின் அலகுகளில் அளப்பதும் தான் இதன் சாராம்சம்.ஆகவே தான் காலத்தையும் வெளியையும்(இங்கே வெளி என்பது ஒளி ஒரு வினாடியில் செல்லும் தூரம்) ஒரே அச்சில் ( xt ல்) மதிப்பிடப்படுகிறது.இதன் அடிப்படையில் சிறப்பு சார்பு கோட்பாடு காலத்தோடு ஒளியின் வேகத்தை அல்லது ஒளியின் வேகத்தோடு காலத்தை மட்டும் சிறப்பாக அல்லது குறிப்பாக சார்பு படுத்துவதால் தான் இது சிறப்பு சார்பு கோட்பாடு என அழைக்கப்படுகிறது.
பிரபஞ்சத்தில் ஒரு துகள் ஒளியைமீறிய வேகத்தில் செல்வதை தாங்கும் காலப்பரிமாண அலகும் அங்கு மறைந்து போய்விடுகிறது
.எனவே ஒளியை மீறும் திசைவேகத்தை அளக்கும் அளவு-கோல் காரணியும் (scale factor) அங்கே பூஜ்யம் ஆகிவிடுகிறது.(S = 0) இந்த S ல் கால வெளியின் அச்சு மதிப்பான xt = 0 அந்த புள்ளியில் பிரபஞ்சம் தன் “பிரபஞ்சத்தனமையை” இழந்து விடுகிறது.பிரபஞ்சத்தில் ஓட்டை விழுந்து விடுகிறது என்று கணித சமன்பாடுகளின் மூலம் கோட்பாட்டு இயற்பியல் வல்லுனர்கள் (theoretical physics scientists) நிறுவியிருக்கிறார்கள்.அந்த பிரபஞ்ச ஓட்டைகள் தான் விஞ்ஞானிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் “கருந்துளைகள்” (black holes).இதை டாக்டர் பென்ரோஸ் “ஒற்றைப்புள்ளி ஒடுக்கம்” (singularity) என்கிறார்.பிரபஞ்சவெளியும் ஒளியின் திசைவேகமும் இவ்வாறு ஒரு காரண-காரிய கயிற்றால் கட்டப்பட்டிருப்பதை “காரணவியல் பிரபஞ்சக்கொள்கை” (causality principle) என்கின்றனர் விண்வெளி விஞ்ஞானிகள்
. இந்த கயிறு அறுந்து போகும் அந்த ஒற்றைப்புள்ளியே கருந்துளையாகும்.அதன் அருகே செல்லும் ஒளிக்கதிர் கூட உறிஞ்சப்பட்டு விடுகிறது.அதாவது அந்த புள்ளியில் பிரபஞ்சப் பொருளின் (matter) நிறையும் (mass) ஈர்ப்பும் எல்லையின்மையை நோக்கி தாவி விடுகிறது. இந்தஎல்லையின்மைக்குள் போய் விழுந்து(plunged to infinity) மறைந்து போகும் பிரபஞ்சத்திற்கு(கருந்துளைக்கு) நாம் முன்னர் குறிப்பிட்ட தொடுவானம் ஏதும் இல்லை.
தொடுவானங்கள் இரு வகைப்படும்
.ஒன்று “துகள் தொடுவானம்”(particle horizon).இது பிரபஞ்சத்தின் கடந்த காலத்தின் இறுதிமுனையை நோக்கித் தொடுவது.மற்றொன்று “நிகழ்வு தொடுவானம்.”(event horizon).இது பிரபஞ்சத்தில் நிகழ்வுப்புள்ளிகளால் தொடுக்கப்படவிருக்கிற எதிர்காலத்தின் கடைசி முனையை தொடுவது.இரண்டுமே ஒளி ஆற்றல் வீச்சின் குறிகளால் தான்(light radiation signals) தான் “தொட்டு”க்காட்டப்படுகிறது.
.
ஈர்ப்புவிசை ஒரு புள்ளியில் ஆரம்பித்து கோடாக நகர்ந்தபுள்ளியின் மையத்தை நோக்கி ஒரு ஈர்ப்புவிசை ஒரு புள்ளியில் ஆரம்பித்து கோடாக நகர்ந்து (அதாவது அருகாமையில் இருப்பவற்றை புள்ளியின் மையத்தை நோக்கி ஒரு கோட்டுப்பாதையில் இழுத்து)செயல்படும் விசையே ஈர்ப்புவிசை என்பது மரபு முறை (க்ளாசிகல்)விஞ்ஞானமாக இருந்தது.. ஐன்ஸ்டீன் இதற்கு புரட்சிகரமான ஒரு புதிய முகத்தை அணிவித்தார்.அவரது பொது சார்பு கோட்பாடு அப்படியொரு மிக மிக நுட்பமான கணித சமன்பாடுகளை முன் வைத்தது.பிரபஞ்சத்தில் ஈர்ப்பு விசை என்பது சார்பு முறையில் ஒத்த ஒரு மாறாத தன்மை(ரிலேடிவிஸ்டிகலி இன்வேரியன்ஸ்)கொண்ட ஒரு நிகழ்வு ஆகும். என்றார். பிரபஞ்சத்தில் எல்லா நகர்நிலைகளிலும் எங்கிருந்துகொண்டு நோக்கினாலும் மாறாத இயற்பியல் விதியை உள்ளடக்கிய விசையாகவே ஈர்ப்புவிசை இருக்கும்.அவரது பொது சார்பு இதைத்தான் அற்புதமாக விவரிக்கிறது இதை நுண்கணிதம் மூலம் (பகு தொகு கணிதம் எனும் கால்குலஸ்)கணக்கிடலாம் என்று நியூட்டன் நினைத்தது ஒரு சிறுபிள்ளைத்தனமே என்று ஐன்ஸ்டின் கருதினார்..ஈர்ப்பு என்பதை ஒரு புலமாக (ஃபீல்டு)பார்க்கவேண்டும் என்றே அவர் எண்ணினார்.பிரபஞ்சவியலை ஒரு புது சமன்பாட்டுக்குள் அடைத்தார் ஐன்ஸ்டீன்.வெறும் ஈர்ப்பு சமன்பாடு அல்ல அது.ஏனெனில் ஈர்ப்பை அவர் கால வெளி (ஸ்பேஸ் டைம்)யின் வளைவியமாக (கர்வேச்சர்)வெளிப்படும் வடிவகணிதவியல் (ஜியாமெட்ரி)என சிந்தனை செய்தார்.இந்த சிந்தனைப்பரிசோதனை (தாட் எக்ஸ்பெரிமென்ட்) ஒரு ஆய்வுக்கூட விஞ்ஞான உண்மையையே உலகுக்கு காட்டி நிறுவியது என்பதை அறிந்த விஞ்ஞானிகள் வியந்து போயினர். அவர் பிரபஞ்சத்தை நிலை நின்றுவிட்ட (ஸ்டேடிக்)அமைப்பாக வடிவு செய்தார்.அது விரிவதும் இல்லை சுருங்குவதும் இல்லை என்று கருதினார்.இதற்கு முன்னரும் எல்லா இயற்பியல் கணித விஞ்ஞானிகள் இதே கருத்தையே கொண்டிருந்தனர்.அவரும் அதை முன்மாதிரியாக (மாடல்)எடுத்துக்கொண்டார்.இதற்கு தர்க்க பூர்வமான ஒரு சிந்தனையும் உண்டு.பிரபஞ்சம் விரிந்து கொண்டே போயிருந்தாலும் சுருங்கிக்கொண்டே போயிருந்தாலும் இப்போது அது காணாமல் போய் நாம் காணும் இன்றைய பிரபஞ்சமே இருந்திருக்காது.இதற்கு பொருத்தமாக சமன்பாட்டை சரிசெய்ய அவர் கால வெளியின் வளைவியப்பகுதியைக் குறிக்கும் சமன்பாட்டின் இந்த பக்கத்தில் ஒரு தொடரை (டெர்ம்) சேர்த்தார்.அதாவது ஈர்ப்பு விசையை சமப்படுத்திவிடும் ஒரு அகற்சிவிசை (ரிபல்ஸிவ் ஃபோர்ஸ்)க்கு உரிய மதிப்பை “மாறிலி”யைச் சேர்த்தார்.இதுவே அவரது உலகப்புகழ்பெற்ற பிரபஞ்ச மாறிலியான (காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட்)அதாவது “லேம்டா” ஆகும்.இது கிரேக்க எழுத்து.இதன் மூலம் தான் இயற்பியல் விதியான “ஆற்றல் தக்க வைக்கும்”விதியை (கன்சர்வேஷன் லா) தன் பொது சார்பில் உட்படுத்துகிறார். ஆனால் அந்த லேம்டாவையே அவர் தனது “பெறும் தவறுகள்” (பிக் ப்லண்டர்ஸ்)என்று உலக விஞ்ஞானிகளே போற்றும் அளவுக்கு பெருந்தன்மையாக குறிப்பிட்டார்.அடி சறுக்கியது ஆனை அல்லவா? மேலும் ஆனை படுத்தால் குதிரை மட்டம் என்பார்கள்.அது போலவே அந்த லேம்டாப்பிழைகளே ஒரு புதிய பிரபஞ்சக்கோட்பாட்டுக்கு திறவு கோல் தந்தது.ஆம்.பின்னால் மிகவும் போற்றப்பட்ட பெருவெடிப்பு எனும் பிக் பேங்க் கோட்பாட்டுக்கு அவருடைய லேம்டாவே திரியை பற்ற வைத்தது..அதனால் அவர் கோட்பாட்டைப்போலவே அந்த பெரும் பிழைகளும் புகழ் பெற்று விட்டன..எப்படி என்று பார்ப்போம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன் உலகப்புகழ் பெற்ற பொது சார்பியல் கோட்பாட்டை
1917ல் கட்டுரையாக வெளியிட்ட போது அது பிரபஞ்சவியல் பற்றிய கணித வடிவத்தையும் விஞ்ஞானிகளுக்கு விளங்க வைத்தது.கிரேக்க வடிவ கணித மேதை யூக்ளிட்டின் வடிவ கணிதம் அவர் முன் வைத்த ஸ்பேஸ் டைம் எனும் காலவெளிச்சமன்பாட்டுக்கு முரண் பட்டிருந்தது.பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான தட்டையான கரும்பலகையாய் கற்பனை செய்துதான் யூக்ளிடின் வடிவகணிதத்தை பயன் படுத்தமுடியும்.பிரபஞ்சத்தின் எல்லையற்ற ஈர்ப்பு ஆற்றலும் துகள்கள் அடங்கிய பிண்டத்தின் நிறையும் தான் அந்த காலவெளிக்கோட்டின் வடிவகணிதத்தை தீர்மானிக்கின்றன.பிரபஞ்சத்தின் வடிவமோ ஒழுங்கற்ற ஒரு கனபரிமாணம். இருப்பினும் அதன் தோராயமான கோளகத்தின் ஒழுங்கமைவு வடிவமே (approximated to a spherical symmetry) அவர் கையாண்ட வடிவம். இதில் ஒரு சிறு தூரவியல் சமன்பாட்டைக்கூட (metric equation)காட்டுவதற்கு அவர் 40 திசைய சமன்பாடுகளை (vector equations)பயன்படுத்தியிருக்கிறார்.அதற்கு யூக்ளிட் அல்லாத ரெய்மானிய வடிவகணிதத்தின் (Non-Euclidean Riemannian geometry) நுட்பங்களை தன் சமன்பாட்டில் அவர் உட்படுத்தியிருக்கிறார்
அந்த சிறு கோட்டு அம்சம் கூட பகுப்பியமாக்கப்பட்ட சமன்பாடு
(differential equation)தான்.ஆனால் கோளக மேற்பரப்பில் இந்த பிரபஞ்சத்தின் உலகக்கோடு (world line)ஓடுவதாக வைத்துக்கொண்டால் அதை கணக்கீடு செய்வது என்பதும் பகுப்பீட்டு வடிவகணித அடிப்படையில் தான்.(differential geometry)..இப்போது கோட்டுஅம்சம் வளைவு அம்சம் (curvature)ஆகிவிடும்.பிரபஞ்சத்தில் நகர்ச்சி என்பது ஒரு எல்லையற்ற நேர் கோடா?இல்லை அது எல்லையற்ற ஒரு ஆரத்தில் உள்ள வட்டச்சுற்றின் ஒரு பகுதியாய் வரும் வளைகோடா? அது வளைவோ நேர்கோடோ அது நுணிக்குக்கொண்டே போனால் அதன் மிக மிக குறைந்த தூரம் அல்லது கோட்டை அதை ஜியோடெசிக் (மிகு நுண் கோடு)என்பார்கள்.இப்போது இங்குள்ள ஒரு முற்றுப்புள்ளிய (.)கவனியுங்கள்.இதை வளைகோடு என்பதா?நேர் கோடு என்பதா? வேண்டுமானால் நாம் இப்படி அனுமானித்துகொள்ளலாம்
ஒரு புள்ளியில் நேர்கோடும் அதைத்தொடும் ஒரு தொடுகோடும் (டேஞ்சென்ட்)சங்கமிக்கும் புள்ளியாக அதை எடுத்துக்கொள்ளலாம்.ஐன்ஸ்டீன் இப்படிப்பட்ட சிந்தனையில் தூரவியல் (மெட்ரிக்)தன்மையை திசையும் நகர்ச்சியும் உடைய “திசையங்களின்” புள்ளிகளாக்கி ஈர்ப்பின் புலச்சாச்சமன்பாடுகளில்(ஃபீல்டு ஈகுவேஷன்)உட்படுத்துகிறார்.அவற்றை “புள்ளோடு” (புள்ளி+கோடு) அல்லது “பாயின்டைன்”(பாயின்ட்+லைன்)என வேடிக்கையாக அழைக்கலாம்.ஐன்ஸ்டீன் தன் கணித இயற்பியல் அறிவின் அதி நுட்பவேலைப்பாட்டில் அந்த ஈர்ப்பின் புலச்சமன்பாட்டை உருவாக்கினார்.2011ல் நோபல் பரிசு பெற்ற இந்த மூன்று விஞ்ஞானிகளும் இந்த புலத்துள் புகுந்து வரும் வரும் “மூவர் உலா” பற்றி இன்னும் சற்று விவரமாய் பார்க்கலாம்
====
(மீண்டும் உலா தொடரும்)
- நினைவின் நதிக்கரையில் – 2
- படிமங்கள்
- கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில்
- பயணக்குறிப்புகள்
- கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது
- எல்லார் இதயங்களிலும்
- இருள்
- மழையாகிவிட்ட தவளையின் சாகசம்
- அது
- போதிதர்மர் தமிழரா…? ஆரியரா…?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 13
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்
- நெடுஞ்சாலை அழகு..
- மூன்று தலைமுறை வயசின் உருவம்
- சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்
- (78) – நினைவுகளின் சுவட்டில்
- தொலைத்து
- கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
- எது உயர்ந்தது?
- தமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்
- மழை
- நிர்மால்யம்
- பிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா
- துளித்துளி
- “மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)
- ஜென் ஒரு புரிதல் -17
- அவர்களில் நான்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -2)
- கூடங்குளம்
- இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்
- இதுவும் அதுவும் உதுவும் – 2
- பறவைகளின் தீபாவளி
- கைப்பேசி பேசினால்
- ஜயமுண்டு பயமில்லை
- ஜீ வி த ம்
- அந்த இடைவெளி…
- பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49
- முன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்
- அந்நியர்களின் வருகை…
- Harry Belafonte வாழைப்பழ படகு
- தொலை குரல் தோழமை