உறக்கமற்ற இரவு

This entry is part 31 of 53 in the series 6 நவம்பர் 2011

நம் சந்திப்புகளின்
கோர்வையை
எளிதாக சொல்லிவிட
முடிகிறது
இந்த காலத்திருக்கு .

உன் புன்னகையின் உலா
வீற்றிருப்பதை
இந்த மாலையும்
மயங்கி கிடக்கிறது .

நம் இரவினையும்
விட்டு வைக்கவில்லை
நினைவுகள்
மவுன மன ஒலிகளை
கடத்துகிறது
உன்னிடமாகவும்
என்னிடமாகவும்
இரவு
ஓய்ந்து விட்டிருக்கிறது .

உன்னிடம்
சொல்வதற்காக
விட்டு வைத்திருக்கிறது
விடியல்
அவை ஒவ்வொன்றாக
பட்டியலிட்டிருக்கிறது
உறக்கமற்ற இரவுவின்
நம் கனவின் மீதங்களை .

இதற்காகவே அன்றும்
பிரபஞ்சம் இருந்திருகின்றது .

-வளத்தூர் தி .ராஜேஷ் .

Series Navigationநெகட்டிவ்கள் சேமிக்கப்படும்நானும் நம்பிராஜனும்
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *