தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

நன்றி சொல்லும் நேரம்…

சம்பூர் சனா

Spread the love

சம்பூர் சனா

நான் பிறந்ததால்
“நீ”
இறந்தாய்..
நீ இறந்ததால்
“நானும்”
இறந்தேன்..

மீண்டும் ஓருயிரென
ஆனாயோ..?,
என்னை இன்று
வாழ்த்துகிறாய்…

உன் ஒரு வாழ்த்துக்காக
காத்திருந்தேன்
பல நாள்..,
இன்று என்னை வாழ்த்துகிறாய்
“நான்” உயிர் நீத்த
பின்னால்…

“நன்றி” சொல்ல
“நான்” இல்லை..,
ஆனாலும் சொல்லுகிறேன் –
“கல்”லாய் உள்ளம் ஆகினாலும்
இதயம் இன்றும் துடிப்பதனால்…!

என் அன்பு வாழுமிடம்
உன் இதயம்
என்பதனால்
“நான்” இறந்து போனபோதும்
உனக்குள் வாழ்வேன்
இதயத்துடிப்பாய்…!
உன் வாழ்த்தின் ராகதாளம்
கேட்கும் போது
சிலநேரம்
என்னிதயம் துடிக்கத் தொடங்கும்
சுயமாய்…!!

மனிதனென்போன் வாழ்த்துகிறான்
பிறந்த பின்னால்…,
நீயோ “மாமனிதன்” –
உன் வாழ்த்தின் பின் பிறக்கின்றேன்
அதனால்…!!

நான் நன்றி சொல்லும் வார்த்தை
உனக்குக் கேட்பதில்லை..,
நான் இன்று மழழை…
என் பாஷை –
அழுகை
அல்லது சிரிக்கும் ஓசை….!!

Series Navigationபிறவிக்குணம்மூன்று தேங்காய்கள்

Leave a Comment

Archives